தோனியின், பைக் காதல்!
இந்திய கிரிக்கெட் அணியின், 'கூல்' கேப்டன், மகேந்திர சிங் தோனி, ஒரு பைக் பிரியர் என்பது, எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். அவரிடம், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள, உயர் ரக பைக்குகள் ஏராளமாக உள்ளன. தற்போதைய நிலவரப்படி, ராஞ்சியில் உள்ள அவரின் வீட்டில் மட்டும், 16 பைக்குகள் உள்ளன.இதுதவிர, சென்னை, மும்பை ஆகிய நகரங்களுக்கு வந்தால், அவர் ஜாலியாக பயணிப்பதற்காக, அந்த நகரங்களிலும், தலா இரண்டு பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தன்னிடம், விலையுயர்ந்த பல பைக்குகள் இருந்தாலும், முதல் முதலாக, வாங்கிய பைக் மீது தான், அவருக்கு ரொம்பவும் ஆசை.கிரிக்கெட் விளையாடுவதற்கு முன், சிறு சிறு வேலைகளை அவர் பார்த்து வந்தார். அப்போது, அவருக்கு மாதச் சம்பளம், 2,000 ரூபாய். இதில், மாதம் தோறும் சிறு தொகையை சேமித்து, 4,500 ரூபாய்க்கு, ஒரு பழைய பைக்கை வாங்கினார்.இந்த பைக்கை, ரொம்ப பத்திரமாக பாதுகாத்து வரும் தோனி,'என்னுடைய முதல் பைக்கிற்கு, புதுத் தோற்றம் கொடுக்க முடிவெடுத்துள்ளேன். இதற்காக, சில லட்சம் ரூபாய்களை செலவழிக்க போகிறேன்...' என்கிறார்.— ஜோல்னா பையன்.