உள்ளூர் செய்திகள்

ஜோசியம் பலித்ததா?

சிலரின் வாழ்க்கையில் ஜோசியம், ஜாதகமெல்லாம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதை பார்த்து இருக்கிறோம். இதை, சிலர் நம்பும் போது, வேறு சிலரோ, 'மூட நம்பிக்கை...' என்று ஒதுக்கித் தள்ளுகின்றனர். பழம்பெரும் மலையாள நடிகரான மது, தன்னுடைய ஜாதக கதையை கூறிய போது, 'நான் பிறந்த போது என் பெற்றோர், பிரபல ஜோசியரை அழைத்து, ஜாதகம் எழுதச் சொன்னார்களாம். ஜோசியரும், குழந்தை வளர்ந்து, ௮௦ வயது வரை வாழ்வார் என்றும் அதற்கு பின் மரணமடைவார் என்று ஜாதகம் எழுதினார்; ஆனால், ௮௩ வயதிலும் நான் சாகவில்லையே...' என்று கூறி, சினிமா பாணியில் சிரித்தார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !