உள்ளூர் செய்திகள்

விருந்தினர் விரும்பும் திண்டுக்கல் ஓட்டல் நிவிஸ்

மா, பலா, வாழை என முக்கனிகளும் விளையும் திண்டுக்கல் மாவட்டத்தில் தான், பக்தர்கள் போற்றும் பழநியும், மலைகளின் இளவரசியுமான கொடைக்கானலும் அமைந்துள்ளன.'ஜில்'லென வீசும் சிறுமலை காற்றும், சிகரமாய் உயர்ந்த மலைக்கோட்டையும் சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்க, கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் வருவோர், இரவில் திண்டுக்கல்லில் தங்கி ஓய்வெடுக்க சரியான இடம், ஓட்டல் நிவிஸ்!திண்டுக்கல் - திருச்சி பை - பாஸ் சாலையில், பேருந்து நிலையத்திலிருந்து, 2 கி.மீ., தூரத்தில் இ.பி.,காலனி எதிரே உள்ளது இந்த ஓட்டல்.சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப, நவீன வசதிகளுடன், 'ஏசி' அறைகள், வெஜ் ரெஸ்டாரன்ட் மற்றும் 'பெப் பெட் 'ஏசி' பார்' என அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன.தங்கு தடையற்ற மின்சாரத்திற்கு ஜெனரேட்டர், கார் பார்க்கிங், ஏ.டி.எம்., வசதிகளுடன், 1,200 ரூபாய் கட்டணத்தில், சுத்தம், சுகாதாரத்துடன், 'பளிச்'சென விளங்கும் டபுள் பெட் ரூம், ஓட்டல் முன் பசுமையான புல்வெளியாக பரந்து விரிந்த, 'லான்' பூங்கா, வாடிக்கையாளர்கள் விரும்பும் விதத்தில் உள்ளது.ஓட்டல் நிவிஸ் உரிமையாளர் சி.மகுடபதி கூறியதாவது: நடுத்தர வர்க்கத்தினருக்கென்றே குடும்பத்துடனும், தனியாகவும் தங்கும் வகையில், வி.ஐ.பி., வசதிகளுடன் பிரத்யேகமாக அறைகளை அமைந்துள்ளோம். தற்போது சைவ ரெஸ்டாரன்ட் மட்டும் உள்ளது. விரைவில் அசைவ உணவும் கிடைக்கும். போக்குவரத்து நெரிசல் இல்லாமலும் நான்கு வழிச்சாலை ஓரத்தில், நல்ல காற்றோட்டத்துடன் அமைத்துள்ளோம். வாடிக்கையாளர்களை உபசரிப்பதற்கென்றே பயிற்சி பெற்ற பணியாளர்களை நியமித்துள்ளோம். அவர்களின் கவனிப்பு நிச்சயம் விருந்தினரை வெகுவாக கவரும், என்றார். ரூம் புக்கிங்கிற்கு: அலைபேசி எண்: 83444 77703,www.nivishotel.come-mail: nivishotel@hotmail.com தொடர்பு கொள்ளலாம்.அரியநாயகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !