சாதிக்க, ஊனம் தடையல்ல!
உடலில் ஏற்படும் சிறு ஊனம் கூட, சிலரை முடக்கி விடும். ஆனால், கல்லுாரி மாணவி பாத்திமா, இதற்கெல்லாம் கலங்கவில்லை.மாற்றுத் திறனாளியான இவரை, ஆறு வயது வரை, பெற்றோர் துாக்கிச் சென்று, பள்ளியில் விட்டு வருவர். பின், செயற்கை கால் பொருத்தி கொண்டார்.கொல்லம் எஸ்.என்., கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு பிலாசபி படிக்கும் இவர், பல முன்னணி நிறுவனங்களின், 'மாடல்' ஆக விளம்பர படங்களில், நடித்தும் வருகிறார். சமீபத்தில், கோவாவில் நடைபெற்ற ஆசியா பேஷன் விழாவில், சிறப்பு, 'மாடலாக' தேர்வு செய்யப்பட்டார்.'அடுத்த லட்சியம், சினிமாவில் நடிப்பது தான்...' என்கிறார், பாத்திமா.ஜோல்னாபையன்