உள்ளூர் செய்திகள்

சாதனை படைக்க, ஊனம் ஒரு தடையல்ல!

கடந்த, 2015ல் பத்மஸ்ரீ விருது பெற்றவர், வாலிபால் வீராங்கனை, அருணிமா சின்கா. உ.பி., மாநில தலைநகரான, லக்னோவில் இருந்து டில்லிக்கு, ரயில் ஏறியபோது, மனதில் அரசு வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது. ஆனால், இரவில் ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள், இவரது அனைத்து கனவுகளையும் தகர்த்தனர். அவர்களால் ரயிலில் இருந்து துாக்கி எறியப்பட்டு தண்டவாளத்தில் விழுந்த, அருணிமாவின் ஒரு காலில், எதிர்திசையில் வந்த ரயில் ஏறி, ஒரு காலை இழந்தார். இருப்பினும், சோர்வடையாமல், அந்த ஒற்றை காலுடன் இமாலய உச்சியில் ஏறி, சாதனை படைத்தார். மேலும், ஆப்ரிக்கா - கிளிமஞ்சாரோ, ஐரோப்பிய - எல்ப்ரெஸ், ஆஸ்திரேலியா - கொஷ்யாஸ்கொ, தென் அமெரிக்கா - அக்கோம்காகியா, வட அமெரிக்கா - தேனாலி ஆகியவற்றிலுள்ள உயரமான மலைகளில் ஏறி, சாதனை புரிந்துள்ளார். திருமணமாகி, ஒரு குழந்தைக்கு தாயான அருணிமாவிற்கு, புல்லட்டில் தனியாக நாடு முழுவதும் சுற்றி வர வேண்டும் என்பதே, நிறைவேறாத ஆசையாக இருக்கிறது. ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !