உள்ளூர் செய்திகள்

தீபாவளி ஸ்பெஷல்!

ஆண்டு முழுவதுமே செல்வ செழிப்புடன் வாழ தீபாவளி அன்று மறக்காமல் செய்யக்கூடிய இரண்டு விஷயங்களும், வாங்க வேண்டிய இரண்டு மங்களப் பொருட்களும் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோமா? * தீபாவளி அன்று எழுந்ததும் முதலில் எண்ணெய் குளியல். அது, மிக மிக அவசியம். அதற்கு, முதலில் எண்ணெயும், சீகைக்காயும் தனி, தனி கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். பூஜை அறையில் வைத்து, விளக்கேற்றி வணங்கி, பின் தலையில் தேய்த்து இளம் சூடான தண்ணீரில் குளிக்க வேண்டும். இது, தீபாவளி அன்று காலையில் செய்ய வேண்டிய முக்கியமான நிகழ்வு * புத்தாடையில் கண்டிப்பாக மஞ்சள் வைத்த பிறகு தான் அணிய வேண்டும். அதே போல பலகாரங்களை அவரவர் வழக்கப்படி, விருப்பத்திற்கு ஏற்பச் செய்து, அதையும் கடவுளுக்கு படைத்து, 'இந்த நன்னாளில் இத்தனை உணவுகளை எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி...' என்று கடவுளிடம் பிரார்த்தித்து, உண்ண வேண்டும் * தீபாவளி அன்று காலையில் முதல் செலவாக உப்பும், மஞ்சளும் வாங்கவும். மாலை வீட்டில் விளக்கேற்றும் முன், பூஜை அறையில் சாமி படத்திற்கு முன் இந்த மஞ்சளும், உப்பும் வைத்த பிறகு விளக்கேற்றி வணங்கவும். உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். மஞ்சளும், பல மங்களகரமான விஷயங்களுக்கு முதல் துவக்கமாக இருக்கிறது. இந்த நாளில் வீட்டில் மங்களமும் செல்வமும் நிறைந்து இருக்க இந்த இரண்டு பொருட்களை வாங்கி வைத்து வணங்குவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !