உள்ளூர் செய்திகள்

தீபாவளி ஸ்பெஷல்!

 ஆந்திர மாநிலத்தில், தீபாவளி இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. நரக சதுர்த்தி, தீபாவளி என, இரண்டு தினங்களிலும் கொண்டாடுகின்றனர். நரக சதுர்த்தி அன்றுதான் எண்ணெய் குளியல், புத்தாடை, இனிப்பு- பலகாரம் அனைத்தும். தீபாவளியன்று, தீபவிளக்கு ஏற்றுகின்றனர். ஆமணக்கு செடியின் கிளையில் எண்ணெய்யில் தோய்த்த திரியை வைத்து, தீபம் ஏற்றுவது இங்குள்ளவர்களின் வழக்கம்  தஞ்சை சரஸ்வதி நுாலகத்தில் உள்ள ஆகாச பைரவ ஜல்பம் என்ற நுாலில், வாணவெடிகள் பற்றிய செய்திகள் உள்ளன  தீபாவளியன்று வெடி வெடிக்கும் பழக்கம், முகலாய மன்னர், பாபர் காலத்தில் ஏற்பட்டது  ‘மகதாப்’ என்ற உருதுச் சொல்லில் இருந்து தான், மத்தாப்பு என்ற சொல் வந்தது. இதற்கு, ஒளி என்று பொருள்  தீபாவளியன்று, ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கும் போது, பக்தர்களுக்கு எண்ணெய்யும், சிகைக்காயும் பிரசாதமாக வழங்குவது வழக்கம்  ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் தீபாவளியன்று பெருமாளுக்கு மட்டுமல்ல, ஆழ்வார்களுக்கும் புத்தாடை அணிவிக்கப்படுகிறது  காசியில் உள்ள தங்க, காலபைரவர் சிலையை தீபாவளி நாளன்று மட்டுமே வீதி உலாவாக கொண்டு வருகின்றனர். – எம்.அசோக் ராஜா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !