இதெல்லாம் ரொம்ப ஓவராக தெரியலை?
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய் நகரில், முகமது ஷெனாப் என்பவர், மாம்பழம் விற்பனை செய்யும் பிரமாண்ட கடை வைத்துள்ளார். மிகவும் விலை உயர்ந்த, 'லம்போர்கினி' என்ற சொகுசு கார், இவரிடம் உள்ளது. இந்த வகை காரின் குறைந்தபட்ச விலையே, மூன்று கோடி ரூபாய். கோடீஸ்வரர்கள் மட்டுமே இந்த காரை வாங்க முடியும். போன் அல்லது 'ஆன்லைன்' வாயிலாக, தங்கள் கடையில் மாம்பழங்களை மொத்தமாக வாங்கும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு மாம்பழங்களை, 'டெலிவரி' செய்வதற்கு, இந்த காரை பயன்படுத்துகிறார், முகமது ஷெனாப். தங்கள் வீட்டு வாசலில், 'லம்போர்கினி' கார் வந்து நிற்பதை பார்த்து, வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர்.'இவ்வளவு விலை உயர்ந்த காரை, ஏன் மாட்டு வண்டி போல் பயன்படுத்துகிறீர்கள்...' என, கேட்டால், 'வாடிக்கையாளர்களை குஷிப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கம் தான் காரணம்...' என்கிறார்.— ஜோல்னாபையன்