போதை தரும் செடி!
அரபு நாடுகளுள் ஒன்றான சவுதியில், பிபா என்ற ஒரு மலை பகுதி இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து, 3 கி.மீ., உயரத்தில் உள்ள இந்த மலை பகுதியில், 30 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த மலை பகுதியை, 'சவுதியின் சொர்க்கம்' என அழைக்கின்றனர்.இந்த மலை பகுதிகளில்,'காத்' எனப்படும் ஒரு வகை செடிகள் நிறைய வளர்ந்துள்ளன. இதன் இலையை மென்று சாப்பிட்டால், போதை ஏற்படுமாம்.இங்குள்ள மக்கள் நுாற்றாண்டுகளாக இந்த போதை செடியை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், வெளி ஆட்கள் இப்பகுதிக்கு எளிதில் வர முடியாது. அப்படி வர வேண்டும் என்றால் உள்ளாட்சி அமைப்பின் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.— ஜோல்னாபையன்