இ - உண்டியல்!
கர்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து, 70 கி.மீ., தொலைவில், தேவராயன துர்கா என்ற இடம் உள்ளது. இங்குள்ள, மலையில் பிரபலமான, லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலை காண, ஏராளமானோர் வருகின்றனர்.ஐந்து மாதங்களுக்கு முன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உதவியுடன், இக்கோவிலில், இ - உண்டியல் வசதி துவக்கப்பட்டது. 'க்யூ.ஆர்.கோட்' பாணியில், இதில் எளிதில் பணம் போடலாம்.இதன் மூலம், கடந்த ஐந்து மாதங்களில், 77 ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளது. இதன் வெற்றி, கர்நாடக ஹிந்து அறநிலையத் துறையை சிந்திக்க வைத்துள்ளது.கர்நாடகாவில், கொல்லுார் மூகாம்பிகை மற்றும் குக்கே சுப்ரமணியர் கோவில்கள் மூலம், அரசுக்கு நல்ல வருமானம் வருகிறது. கொல்லுார் மூகாம்பிகை கோவிலிலும், இ - உண்டியல் சேவை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த இ - உண்டியல் முறை, தமிழகத்திலும், பிரபலமாகி வருகிறது.\— ஜோல்னாபையன்