அப்போது பகை, இப்போது நட்பு!
ஹாலிவுட்டின், பிரபல நடிகர்கள் ஆர்னால்டு ஸ்வாஸ்நேகருக்கும், சில்வஸ்டார் ஸ்டாலோனுக்கும் இடையே, 10 ஆண்டு களுக்கு முன்வரை, கடும் போட்டி இருந்தது. 'யாருடைய தோள் வலிமையானது; யாருடைய புஜம் பலமானது, யாருக்கு பரந்து விரிந்த மார்பு உள்ளது... ' என, இவர்களுக்கு இடையே, கடும் போட்டி நிலவும். ஆர்னால்டும், ஸ்டாலோனும், ரசிகர்களுக்கு தீனி போடுவது போல், ஒருவருக்கு ஒருவர், சவால் விடுவது போன்ற அறிக்கைகளை விடுவர். ஆனால், இப்போது, இவர்கள் இருவரும், நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். முக்கிய விழாக்களுக்கு, இணைந்தே செல்கின்றனர். 'தி எக்ஸ்பெண்டபிள் என்ற படத்தில், இருவரும் இணைந்து நடித்தோம். அப்போது, ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம்...' என்கின்றனர், இருவரும். - ஜோல்னா பையன்.