உள்ளூர் செய்திகள்

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை!

இப்புகைப்படத்தைப் பார்த்து, இப்பெண்கள் கல்லூரி மாணவியர் என நினைத்தால், கண்டிப்பாக ஏமாந்து விடுவீர்கள். தைவான் நாட்டைச் சேர்ந்த சகோதரிகள் தான் இவர்கள்.மூத்த சகோதரியான லூர் ஹூசுவுக்கு வயது, 41; அடுத்தவரான, பே பேவுக்கு, 40 வயதாகிறது. இளையவர், ஷரோனுக்கு, 36 வயது.கல்லூரி மாணவியர் போன்று தோற்றமளிக்கும் இவர்களுக்கு திருமணமாகி, 10 மற்றும் எட்டு வயதில் குழந்தைகள் உள்ளனர்.'எங்கள் தாயாருக்கு, 63 வயதாகிறது; ஆனால், அவரே, இன்னும் இளம்பெண் போல் தோற்றமளிக்கிறார். அதேபோல், நாங்களும் இளமையாக இருக்கிறோம்...' என்கிறார். ஷரோன்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !