இதப்படிங்க முதல்ல...
விக்ரம் மார்க்கெட் மீண்டும் எகிறியது!தொடர்ந்து, ஹிட் படங்கள் கொடுத்த விக்ரமுக்கு, கடைசியாக நடித்த சில படங்கள் தோல்வியை கொடுத்தன. இருப்பினும், இயக்குனர் ஷங்கர், 'ஐ' படத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்ததை அடுத்து, விக்ரமின் மார்க்கெட் மீண்டும் பழைய எல்லையை தொட்ட தோடு, அவரது படக்கூலி, 15 கோடி ரூபாயை எட்டி விட்டது.—சினிமா பொன்னையா.கவர்ச்சிக்கு மாறும் ரம்யா நம்பீசன்!விஷ்ணுவுடன் நடித்த, 'குள்ளநரி கூட்டம்' படத்துக்கு பின், காணாமல் போன ரம்யா நம்பீசன், 'பீட்சா' படத்தின் மூலம், மீண்டும் வந்துள்ளார். முந்தைய படங்களை விட, இப்படத்தில் ஆடை குறைப்பு செய்து நடித்துள்ள அவர், அடுத்து, முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைத்தால், 'பில்லா' நயன்தாரா மாதிரி படுகவர்ச்சிக்கு மாறிவிடவும் தயாராக இருப்பதாக கூறுகிறார். இட்ட எழுத்துக்கு மேல் ஆசைப்படலாமா?— எலீசா.நாயகி வேட்டையில் பார்த்திபன்!தன் முதல் படமான, 'புதிய பாதை' படத்தை, 'மீண்டும் புதிய பாதை' என்ற பெயரில் ரீ-மேக் செய்கிறார் பார்த்திபன். இதில், தன் கேரக்டரை முழு வில்லனா கவே மாற்றியிருக்கும் பார்த்திபன், சீதா நடித்த வேடத்துக்காக, கேரளா, பெங்களூரு சென்று, கதைக்கேற்ற புதுமுக நடிகையை தேடி வருகிறார்.—சி.பொ.,கோடம்பாக்கத்தில் ஆந்திர அழகிகள்!ஒரு காலத்தில் ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, சில்க் என்று, ஆந்திர ரசகுல்லாக்கள் கோடம்பாக்கத்தை கலக்கியது போல, இப்போது அங்கிருந்து நாகமல்லேஸ்வரி, சுஜாதா, கல்யாணி போன்ற குத்தாட்ட புயல்களும் கோலி வுட்டில் மையம் கொண்டுள்ளனர். இதில், நாகமல்லேஸ்வரி, 'நாடோடிகள்' படத்தில், 'யக்கா யக்கா', பாடலிலும் 'மைனா'வில் 'ஜிங்குசிக்கா' மற்றும் 'மனம் கொத்தி பறவை'யில், 'டிங்டங் டிகடிக டிங்டங்' போன்ற ஹிட் பாடல்களில் ஆடியதால், வேகமாக வளர்ந்து வருகிறார். ஆட லோகத்து அமுதத்தை ஈக்கள் மொய்த்துக் கொண்டது போல!— எலீசா.அடுத்தக்கட்ட முயற்யில் ஆண்ட்ரியா!'விஸ்வரூபம்' படத்துக்கு முன் வரை, சில சிறிய ஹீரோ படங்களில் நடித்த ஆண்ட்ரியா, இனி, பிரபலமில்லாத நடிகர்களுடன் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறார். 'விஜய், அஜீத், ஆர்யா போன்ற ஹீரோக்கள் படங்களில், இரண்டு நாயகிகளில் ஒருத்தராக என்றாலும் நடிப்பேன்...' என்று சொல்லி, சில முக்கிய படாதிபதிகளுடன் நேரடி பேச்சு வார்த்தையில் இறங்கி இருக்கிறார். அடுத்து, அடுத்துச் சொன்னால், தொடுத்த காரியம் முடியும்!— எலீசா.கமர்ஷியல் படத்தில் ஸ்ரீகாந்த்!'நண்பன்' படத்தில், ஒரு கேரக்டரில் நடித்த போதும், நீண்ட நாளைக்கு பின் வெளிச்சத்துக்கு வந்தார் ஸ்ரீகாந்த். அதன் பின், 'எதிரி எண் 3' மற்றும் 'பாகன்' படங்களில் நடித்து வரும் அவர், 'பாகன்' படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கிறார். இந்த படம் ரிலீசாகும் போது, ஒரு சிறந்த கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்து கிடைக்கும் என்று நம்புகிறார்.— சி.பொ.,அதிர்ச்சியில் ஆர்யா!விஷ்ணுவர்தன் இயக்கும் அஜீத் படத்தில், நெகடிவ் ரோலில் ஆர்யா நடிக்கிறார். ஆனால், இப்போது படத்தை, தெலுங்கிலும் ஓட வைக்கும் நோக்கத்தில், ராணாவையும் ஒரு வேடத்தில் நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது. இதன் காரணமாக, ஆர்யா கேரக்டருக்குரிய சீன்கள் கம்மியாகும் வாய்ப்பிருக்கிறது. இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் இருக்கிறார் ஆர்யா.— சி.பொ.,சென்னையை காலி செய்த ப்ரணிதா!'சகுனி' ப்ரணிதாவுக்கு, புதிதாக படமேதும், 'புக்'காகவில்லை. அதனால், ஐதராபாத் பறந்து விட்டார். மேலும், 'இனி, தமிழில் நடித்தால், 'சகுனி' மாதிரி, கதாநாயகியை, டம்மியாக்கும் கதைகளில், கண்டிப்பாக நடிக்க மாட்டேன்...' என்றும் கூறிச் சென்றுள்ளார். ஆல் பழுத்தால் அங்கே கிளி; அரசு பழுத்தால் இங்கே கிளி.— எலீசா.ராஜமவுலியின் சினிமா லட்சியம்!'நான் ஈ' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதில்லை என்று கூறி வரும் ராஜமவுலி, அடுத்து புதுமாதிரியான ஒரு கதையை இயக்குகிறார். மேலும், ரஜினி நடிப்பிலும் ஒரு படத்தை இயக்கும் ஆசை உள்ளது என்று கூறும் அவருக்கு, உலக ரசிகர்கள் பார்க்கும் வகையில், ஒரு படம் இயக்க வேண்டும் என்பதே, தன் சினிமா லட்சியமாக உள்ளதாக கூறுகிறார். —சினிமா பொன்னையா.அவ்ளோதான்!