சினிமா படங்களுக்கு இன்சூரன்ஸ்!
படப்பிடிப்புகளில் ஏற்படும் தீ விபத்து, இயற்கை சேதம் போன்ற இழப்புகளை தவிர்க்க, படங்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய துவங்கியுள்ளனர். ரஜினியின், 'கோச்சடையான்' கமலின், 'விஸ்வரூபம்' மற்றும் மணிரத்னத்தின், 'கடல்' ஆகிய படங்களுக்கு, தற்போது காப்பீடு செய்துள்ளனர்.
— சினிமா பொன்னையாஉற்சாகத்தில் வரலட்சுமி!
சுந்தர்.சியின், 'எம்.ஜி.ஆர்.,' படத்தில், விஷாலுடன் ஜோடி சேர்ந்த நேரம், சிம்புவுடன் நடித்து வந்த, 'போடா போடி' படமும், ரிலீசுக்கு தயாராவதால் உற்சாகத்தில் இருக்கிறார், வரலட்சுமி. இந்த நேரத்தில், அவரை தேடி, மேலும் சில பட வாய்ப்புகள் வந்த போது, 'நடித்து வரும் படங்கள் திரைக்கு வந்த பின்தான், எந்தெந்த கதைகளில் அடுத்து நடிப்பது என்று முடிவெடுப்பேன்...' என, வந்த படங்களை நிலுவையில் வைத்துள்ளார். வேண்டி வேண்டி கொடுத்தாலும், வேண்டாம் என்றார் போல!—
எலீசாகவுரவ வேடத்தில் நடிகர்கள்!
விஷால் நடித்து வரும், 'எம்.ஜி.ஆர்.,' என்ற படத்தில், கவுரவ வேடத்தில், நடிக்கிறார் ஆர்யா. அதேபோல், சந்தானம் நடிக்கும், 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில், ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார் சிம்பு. இதனால், தன் படம் இன்னும் பெரிய படமாகி விட்டதாக உற்சாகத்தில் இருக்கிறார் சந்தானம்.—
சி.பொ.,ஹன்சிகாவின் டுவிட்டர்!
அசின், த்ரிஷா, நயன்தாரா போன்ற நடிகைகள், டுவிட்டர், பேஸ்புக் என எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், ஹன்சிகா தனக்கென டுவிட்டர் வைத்துள்ளார். அதில், தன்னை பற்றியுள்ள முக்கிய விஷயங்களை அவ்வப்போது பதிவு செய்து, ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், இரண்டு லட்சத்துக்கும் மேலான ரசிகர்கள், ஹன்சிகாவுடன் டுவிட்டர் நண்பர்களாக இருக்கின்றனர்! இட்டு பேர் பெறு; வெட்டிப் பேர் பெறு!—
எலீசாஜீவாவுக்கு உந்துதல்!
'முகமூடி' எதிர்பார்த்தபடி ஓடவில்லை. அதனால், இப்போது, 'நீ தானே என் பொன் வசந்தம்' படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கிறார் ஜீவா. அந்த படத்தின் வெற்றி, அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தியில், தான் நடிக்கவுள்ள, 'யான்' படத்திற்கு பெரிய உந்துதலாக இருக்கும் என்றும் நினைக்கிறார்.—
சி.பொ.,அசின் எச்சரிக்கை!
தன்னை, இந்தி நடிகர்களுடன் இணைத்து, தவறான செய்திகள் வெளியிடுவதை, சில இணைய தளங்கள் தொடர்ந்து செய்து வருவதால், கடும் கோபத்தில் இருக்கிறார் அசின். இதையடுத்து, 'இனி, என்னைப் பற்றி யாராவது தவறாக செய்தி பரப்பினால், அவர்கள் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்...' என்று எச்சரித்துள்ளார். —
சினிமா பொன்னையாபாலு மகேந்திராவின் முதல் மாணவன்!
இயக்குனர், பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற, சத்யா என்ற முதல் மாணவன் சினிமாவில் ஹீரோவாகியிருக்கிறார். 'யமுனா' என்ற படத்தில் அறிமுகமாகும் இவரை, அப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவுக்கு வரவழைத்து, வாழ்த்தி மீடியாக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் பாலுமகேந்திரா. —
சி.பொ.,அவ்ளோதான்!