விஜய் ஆலோசனை
தன் ரசிகர் மன்றங்களை மாவட்ட வாரியாக வைத்திருக்கும் நடிகர் விஜய், இலவச திருமணம் நடத்துவது, தையல் மிஷின் வழங்குவது, படிப்பு உதவி செய்வது என, தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், ஓரிரு ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் சுற்றி, சமூக கட்டுப்பாடுகளாலும், வறுமையாலும் முன்னேற முடியாமல் இருக்கும் மாணவர்களை சந்தித்து, தன்னம்பிக்கை ஊட்டும் விழிப்புணர்ச்சி ஆலோசனை வழங்கப் போவதாக கூறுகிறார். —
சினிமா பொன்னையாநயன்தாரா ஜெபம்!
பிரபு தேவாவை பிரிந்த பின், தீவிரமான ஆன்மிகவாதியாக மாறி விட்டார் நயன்தாரா. எல்லா மதகோவில்களுக்கும் சென்று வருவது ஒரு பக்கம் இருந்தாலும், கழுத்தில் சிலுவை அணிந்திருப்பவர், கையில் பைபிளுடன் தான் அடிக்கடி காட்சி தருகிறார். மேலும், தன் மனதை குழப்பும் சம்பவங்கள் ஏதேனும் நடந்துவிட்டால், உடனே முட்டி போட்டு ஜெபம் செய்கிறார்.—
எலீசாவிஜய் நாயகி அமலாபால்!
தமிழில் சரியான படங்கள் கிடைக்கவில்லை என்றால், முழுநேர ஆந்திர நடிகையாக மாற நினைத்திருந்தார் அமலாபால். ஆனால், தாண்டவம் படத்தையடுத்து, விஜய்யை வைத்து, தான் இயக்கும் படத்தில் நாயகியாக அமலாபாலையே, 'புக்' செய்து விட்டார் ஏ.எல்.விஜய். இதனால், இன்ப அதிர்ச்சியடைந்த அமலா, கைவசமிருக்கும் தெலுங்கு படங்களை முடித்துவிட்டு, மீண்டும் முழுநேர தமிழ் நடிகையாகப்போவதாக கூறுகிறார். போனது போல வந்தானாம் புது மாப்பிள்ளை!—
எலீசாசமையல் ராணி தமன்னா!
சமையல் கலையில் கில்லாடியான தமன்னா, நேரம் கிடைக்கும் போதெல்லாம், வீட்டில் தானே சமைத்து சாப்பிடுவார். மேலும், தான் ஒரு சமையல் கில்லாடி என்பதை நிரூபிக்க, ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், கேக் செய்முறைகளை விளக்கி, அதை செய்தும் காட்டியிருக்கிறார் தமன்னா. அந்த கேக்கை சுவைத்த அனைவருமே பிரமாதமான ருசி என்று அவரை புகழ்ந்துள்ளனர்.—
எலீசாலேகா படத்தில் சிம்பு!
சிம்பு இயக்கி நடிக்கயிருந்த, கெட்டவன் படத்தில், நாயகியாக நடிக்க இருந்தவர் லேகா வாஷிங்டன். ஆனால், அந்த படம் கிடப்பில் போடப்பட்டதை அடுத்து, ஜெயங்கொண்டான் மற்றும் குவார்ட்டர் கட்டிங் போன்ற படங்களில் நடித்த லேகா, தற்போது, ஒரு குறும்படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்படத்தில், சிம்பு நாயகனாக நடிக்கிறார். கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!—
எலீசா ஒரே டேக்கில் அனுஷ்கா!
எத்தனை கடினமான காட்சிகள் என்றாலும், ஒரே டேக்கில் ஓ.கே., செய்து விடுவாராம் அனுஷ்கா. அதனால், அவருடன் நடிக்க ஹீரோக்கள், ரொம்பவே பயப்படுகின்றனர். காரணம், ஒருவேளை தாங்கள் தவறு செய்து, காட்சி ரீ-டேக் ஆகிவிட்டால், அது தங்களுக்கு அவமானம் என்று நினைக்கின்றனர். இதனால், அனுஷ்காவுடன் இணைந்து நடிப்பவர்கள், முன்கூட்டியே நடிக்க வேண்டிய காட்சியை ரிகர்சல் பார்த்து, தங்களை தயார்படுத்திக் கொள்கின்றனர். வாய்த்தான், பிழைத்தான் சமாசாரம்!—
எலீசாமோகன்பாபு தயாரித்த சர்ச்சைக்குரிய படம்!
நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு - ஹன்சிகா நடித்துள்ள தெலுங்குப் படம், தேனிகைனா ரெடி. இப்படத்தில், பிராமணர்களை நையாண்டி செய்வது போல் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக, அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், போர்க்கொடி பிடித்துள்ளனர். அதுபோன்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை என, மோகன்பாபு மறுத்த போதும், விவகாரம் இப்போது நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. இப்படத்தை மோகன்பாபுவே தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.—
சினிமா பொன்னையாஅவ்ளோதான்!