குத்துப் பாடல்களுக்கு தடை!
இந்தியா முழுக்க, அனைத்து மொழி படங்களிலும், தற்போது குத்துப் பாடல்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இப்பாடல்களில் கவர்ச்சி உடை தரித்து ஆடினால், அதிக பணம் கிடைக்கிறது என்பதால், நடிகையரும், குத்துப்பாட்டுக்கு ஆடுவதில், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, தணிக்கை குழு, இனி குத்துப்பாட்டு வைத்தால், அந்த படங்களுக்கு, 'ஏ' சான்றிதழ் கண்டிப்பாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய திரையுலகமே போர்க்கொடி பிடித்துள்ளது.—
சினிமா பொன்னையா பாக்யராஜ் இயக்கும் அரசியல் படம்!
குடும்ப கதைகளுக்கு பேர் பெற்றவர், 'முருங்கைக்காய் புகழ்' கே.பாக்யராஜ். ஆனால், கடைசியாக இவர் இயக்கிய, பாரிஜாதம், சித்து பிளஸ் 2 ஆகிய படங்கள் தோல்வியடைந்தன. அதனால், அடுத்தபடியாக, துணை முதல்வர் அன்னபோஸ்ட் என்ற படத்தை, அரசியல் கதையில் இயக்குகிறார். முதன் முதலாக, அரசியல் கதையை படமாக்குவதில் ரொம்ப கவனமாக ஸ்கிரிப்ட் எழுதி வருவதாகவும் சொல்கிறார்.—
சி.பொ.,சந்தானத்துக்கு நிர்ப்பந்தம்!
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு பின், பவர்ஸ்டார் சீனிவாசனின் மார்க்கெட் எகிறி நிற்பதால், சில ஹீரோக்களே அவருக்கு சிபாரிசு செய்கின்றனர். சந்தானத்தை, 'புக்' செய் பவர்களும், பவர் ஸ்டாரையும் கூட்டணி சேர்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர். இதனால், பவர் ஸ்டாரை கழட்டி விட நினைத்த சந்தானம், வேறு வழியில்லாமல் அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக் கிறார்.—
சி.பொ.,உடற்பயிற்சி செய்யும் பூர்ணா!
வித்தகன் படத்திற்கு பின், தெலுங்கு சென்றுவிட்ட பூர்ணா, ஜன்னல் ஓரம் படத்தைத் தொடர்ந்து, முழு நேர தமிழ் நடிகையாகியுள்ளார். இந்த நேரத்தில், ஏற்கனவே உயரம் குறைவான பூர்ணாவின் உடல் பெருத்திருப்பதால், இன்னும் உயரம் குறைவாக தெரிகிறதாம். அதனால், உடம்பை சிலிம்மாக்கி உயரத்தை அதிகப்படுத்தி காண்பிப்பதற்காக தினமும் ஜிம்மில் வியர்வை சொட்ட சொட்ட, உடற்பயிற்சி செய்து வருகிறார். தன் நோய்க்கு தானே மருந்து! —
எலீசாவெளிநாட்டை விரும்பாத இமான்!
சில இசையமைப்பாளர்களை போன்று, வெளிநாடுகளுக்கு சென்று, அங்குள்ள நவீன தொழில்நுட்பத்தில் இசைப்பதிவு செய்வதில் இசையமைப்பாளர் இமானுக்கு ஆர்வமில்லை. அதனால், தான் இசையமைக்கும் எத்தனை பிரமாண்ட படம் என்றாலும், சென்னையிலுள்ள தன் ஸ்டூடியோவிலேயே ரிக்கார்டிங் நடத்துகிறார். இது குறித்து யாராவது கேட்டால், 'தரமான இசையை கொடுத்தால், எங்கு இசைப்பதிவு செய்தாலும் மக்கள் ரசிப்பர்...' என்கிறார் இமான்.—
சி.பொ.,அமெரிக்காவில் அஜீத்!
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், அஜீத் நடித்து வரும், வலை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, மும்பையில் நடந்தது. அந்த சமயத்தில், அஜீத்துக்கு காயம் ஏற்பட்டதால், அவரை சிகிச்சைக்கு அனுப்பி விட்டு, மற்ற நடிகர், நடிகையரை வைத்து படமாக்கி வந்த விஷ்ணுவர்த்தன், தற்போது இரண்டாம் கட்ட படப் பிடிப்பை அமெரிக்காவில் நடத்துகிறார். அங்கு, அஜீத்- நயன்தாரா இடம்பெறும் டூயட் பாடல் படமாக்கப்படுகிறது.—
எலீசாமும்பையில் முகாமிட்ட தமன்னா!
ஸ்ரீதேவியின் பழைய ஹிட் படம் ஒன்றின், ரீ-மேக்கில் நடித்து வரும் தமன்னாவுக்கு, அப்படம் வெற்றி பெற்றால், பாலிவுட்டில் ஆழக் காலூன்ற வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால், தமிழ், தெலுங்கில் மேலும் புதுப்படங்கள் படையெடுத்தும், கமிட்டாகாமல் இழுத்தடித்து வரும் தமன்னா, பெரும்பாலான நாட்களில் மும்பையிலேயே முகாமிட்டிருக்கிறார். தோட்டம் நிலைத்தல்லவோ தென்னம்பிள்ளை வைக்க வேணும்! —
எலீசாநயன்தாரா மிரட்டல்!
நயன்தாரா பீல்டில் இருக்கும் போதே, சான்யதாரா என்ற புதுவரவு நடிகையும், சில படங்களைக் கைப்பற்றி வேகமாக முன்னேறி வருகிறார். அதிலும், நயன்தாராவை, 'பீல்டு அவுட்' செய்தால் தான், அவர் இடத்தை கைப்பற்ற முடியும் என்று, அவருக்கு செல்லயிருக்கும் புதிய படங்களை, தன் பக்கம் இழுக்கிறார் சான்யதாரா. இந்த சேதி, நயனின் காதுகளுக்கு செல்ல, செம டென்ஷனாகி விட்டார். 'என் வாய்ப்புகளை தட்டிப் பறிக்க நினைத்தால், பீல்டிலே இல்லாமல் செய்து விடுவேன்...' என்று, புதுவரவு நடிகைக்கு போன் போட்டு, எகிறியுள்ளார் நயன்தாரா. —
எலீசாவித்யாபாலனுக்கு எதிர்ப்பு!
கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன், மரணமடைந்த கர்நாடக இசைபாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை, சினிமா படமாகிறது. ராஜீவ் மேனன் இயக்கும் இப்படத்தில், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். ஆனால், சில்க்ஸ்மிதா வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான, த தர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் ஆபாசமாக நடித்திருந்த வித்யாபாலன், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வேடத்தில் நடிப்பதற்கு, சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஆனால், வித்யாபாலனோ, அந்த வேடத்தில் நடித்தே தீருவது என்ற முடிவில் உறுதியாக உள்ளார்.—
சினிமா பொன்னையாஅவ்ளோதான்