உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

மீண்டும் வில்லனான பாண்டியராஜன்!காமெடி நடிகரான பாண்டியராஜனை, அஞ்சாதே படத்தில் வில்லனாக்கினார் இயக்குனர் மிஷ்கின். அதையடுத்து, தன் காமெடி இமேஜை மாற்றிக்கொள்ளும் முயற்சியாக, மாறுபட்ட கேரக்டர்களில் நடித்த பாண்டியராஜன், இப்போது சத்திரம் பேருந்து நிலையம் என்ற படத்திலும் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில், தன்னை டெரராக வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக, தன் திருட்டு முழி பார்வையை மாற்றும் பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார் அவர்.— சினிமா பொன்னையாவிஜய்யை ஆச்சரியப்படுத்திய ராகினி!தலைவா படத்தில், விஜய்யின் மும்பை காதலியாக நடிக்கும் பாலிவுட் நடிகை ராகினி, 'டிவி' சீரியல்களில் நடித்து பிரபலமானவர். அதனால், எத்தனை பெரிய, 'டேக்' என்றாலும், ஒரே முறையில் ஓ.கே., செய்து, விஜய்யை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதிலும், ஒரு ஆக்ஷன் காட்சியில் எகிறி குதித்து, அட்டகாசமாக அவர் சண்டை செய்ததைப் பார்த்து, தலைவா படக்குழுவே ராகினியை கொண்டாடியது. புதிதாய் வந்த சேவகன் நெருப்பாய் கட்டி வீசுகிறான்!— எலீசாதமன்னா போடும் திட்டம்!ஹிம்மத்வாலா படத்தை தொடர்ந்து, தமிழில் பிசியாகிறார் தமன்னா. அஜீத் மற்றும் சூர்யா நடிக்கும் புதிய படங்களில் கமிட்டாகியுள்ள அவர், தன் முந்தைய ஹீரோக்களுடனும் ஜோடி சேர முயற்சி எடுத்து வருகிறார். குறிப்பாக விஜய், சூர்யாவை தன் டார்கெட்டாக வைத்திருக்கும் தமன்னா, அவர்களின் நேரடி சிபாரிசையும் நாடியுள்ளார். அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்!— எலீசாஅப்பா நடிகரான சத்யராஜ்!ஷாரூக்கான் நடித்துள்ள, சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோனேயின், அப்பாவாக நடித்துள்ள சத்யராஜ், ராஜராணி படத்தில், நயன்தாராவின் அப்பாவாக நடித்துள்ளார். ஆனால், அப்பா வேடம் என்ற போதும் டம்மியாக இல்லாமல், சத்யராஜின் கேரக்டருக்கு அதிக காட்சிகள் கொடுத்துள்ளனர்.— சி.பொ.,கிளாமருக்கு தாவும் தன்ஷிகா!'திடுதிப்பென்று கிளாமர் நடிகையாகி விட்டீர்களே...' என்று தன்ஷிகாவைக் கேட்டால், 'பரதேசி படத்துக்கு பின், எனக்கு கிடைத்த மூன்று படங்களும் கமர்ஷியல் கதைகள். அதனால், அந்த கதைகளுக்கேற்ப கிளாமராக நடிக்கிறேன்...' என்று சொல்லும் தன்ஷிகா, 'அரவான் மற்றும் பரதேசி படங்களில், நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்திருப்பதால், அதை தக்க வைத்துக் கொள்ளும் வகையிலேயே, என் கேரக்டர் செலக்ஷன் இருக்கும்...' என்கிறார். தக்க வாசல் இருக்க, தாளித்த வாசலிலே நுழைகிறது!— எலீசாகொழு கொழுவாக மாறிய விக்ரம்!ஐ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புக்காக பல மாதங்களாக, 'ஜிம்'மே கதியென்று கிடந்து, ஒல்லிகுச்சியாக உடம்பை மாற்றிய விக்ரம், இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக, உடம்பில் வெயிட் போட்டு கொழு கொழுவென மாறி வரு கிறார். அந்த வகையில், 'இதுவரை நான் நடித்த படங்களில், இப்படத்துக்கே கடுமையாக உழைத்துள்ளேன்...' என்று சொல்லும் விக்ரம், 'ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில், நான் நடித்த அந்நியன் படத்தை விட, இப்படம் பத்து மடங்கு பிரமாண்டமாக இருக்கும்...' என்கிறார்.— சி.பொ.,ரமணா ரீ-மேக்கில் அக்ஷய் குமார்!சிறுத்தை படத்தை ரவுடி ரத்தோர் என்ற பெயரில் இந்தியில் ரீ-மேக் செய்தார் பிரபுதேவா. அப்படம், நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது அதனால், அப்படத்தில் நடித்த அக்ஷய் குமாருக்கு, தமிழ் ரீ-மேக் படங்களில் நடிக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜயகாந்த் நடித்த ரமணா இந்தி ரீ-மேக்கில் தற்போது நடிக்க தயாராகி வருகிறார். வானம் பட இயக்குனர் கிரீஷ் இயக்கும் அப்படத்துக்கு, கப்பார் என்று பெயர் வைத்துள்ளனர்.— சினிமா பொன்னையா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !