உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல.....

ரசிகர்களுக்கு விஜய் போட்ட ஆர்டர்!தலைவா படம், சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, இனிமேல், தன் படங்களில் அரசியல் பஞ்ச் வேண்டாம் என்ற, முடிவுக்கு வந்துள்ளார் விஜய். அதனால், ஜில்லா படத்தில் கூட, டயலாக்குகளில் நிறைய எடிட் செய்தே பேசுகிறார். மேலும், தன் ரசிகர் மன்ற நிர்வாகிக்கு, 'அரசியல் பிரவேசம், அடுத்த முதல்வர் என்று, 'கட் அவுட்' வைப்பதை, நிறுத்திக் கொள்ளுங்கள்...' என்று, அதிரடி ஆர்டர் போட்டுள்ளார். இதனால், எதிர்காலத்தில், அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையில், விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்த, சில ரசிக கோடிகள், அதிருப்தி அடைந்துள்ளனர்.— சினிமா பொன்னையாஅனுஷ்காவின் புதிய முடிவு!ஹீரோக்களுக்கு இணையாக, தன்னாலும் மொத்த கதையையும், தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடிக்க முடியும் என்பதை, அருந்ததி படத்தில் நிரூபித்த அனுஷ்கா, இப்போது, ராணி ருத்ரம்மா தேவி மற்றும் பாகுபாலி படங்களில், அதை, நிரூபித்து வருகிறார். இதன் பின், தன் சினிமா கேரியரே டோட்டலாக மாறும் என்று கூறும் அனுஷ்கா, இனி, ஆண்டிற்கு இரண்டு படங்களில் நடித் தாலும், ஹீரோக் களுக்கு இணையான வேடம் கொண்ட படங்களை மட்டுமே ஏற்க போவதாகவும், பாடல் காட்சிகளில் மட்டுமே, வந்து செல்லும் கிளாமர் பொம்மையாக தோன்றி, தன் ஆக்ஷன் இமேஜை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்றும் கூறுகிறார். பேராசை கொண்டு பெருக்கத் தவிக்கிக்கிறது!— எலீசாபிந்துமாதவியை டீலில் விட்ட சிவகார்த்திகேயன்!கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்த போது, விமலை விட, சிவகார்த்திகேயனுடன் நட்பு வளர்த்து கொண்டார் பிந்து மாதவி. அதன் காரணமாகவே, வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்தில், ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க, சிவகார்த்திகேயன் அழைத்த போது, மறுக்காமல் நடித்துக் கொடுத்த பிந்து மாதவி, இப்போது, பல மெகா படங்கள், சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருப்பதால், அந்த படங்களில் நடிக்க, தனக்கு சிபாரிசு செய்யுமாறு, அவரை நச்சரிக்கிறார். ஆனால், ஹன்சிகா போன்ற நடிகைகளுடன், ஜோடி சேரும் அளவுக்கு வளர்ந்துவிட்ட நாம், மீண்டும் பிந்துமாதவி போன்ற நடிகைகளுடன், டூயட் பாடினால், தன் ரேஞ்ச் இறங்கி விடும் என்று, பிந்துமாதவிக்கு செவிசாய்க்காமல், 'எஸ்கேப்' பாகி வருகிறார் சிவகார்த்திகேயன்.— சி. பொ.,விமலின் தனித்துவம்!மூன்று பேர் மூன்று காதல் போன்ற படங்களில், வேறு சில ஹீரோக்களுடனும் சேர்ந்து நடித்ததால், விமலின் நடிப்பு எடுபடவில்லை. அதனால், இனி, மல்டி ஹீரோ கதைகளில் நடிப்பதில்லை என்று, முடிவெடுத் துள்ளார். மேலும், கமர்ஷியல் மட்டுமல்லாது, வாகை சூடவா போன்று, சமூக சிந்தனையுள்ள கதைகளிலும், நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறும் விமல், 'இனி நடிக்கும் படங்கள் மூலம், எனக்கென்று ஒரு தனித்துவத்தை ஏற்படுத்த முயற்சி எடுக்கப் போகிறேன்...' என்கிறார்.— சி. பொ.,முதிரிச்சியான வேடத்தில் மேக்னாராஜ்!காதல் சொல்ல வந்தேன் மற்றும் உயர்திரு 420 ஆகிய படங்களில் நடித்த மேக்னாராஜ், தற்போது ஜெயம் ரவியிடன் நடித்து வரும், நிமிர்ந்து நில் படம், தனக்கு திருப்பு முனையாக அமையும் என்கிறார். இந்த படத்தில், 25வயது, 50 வயது என, இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார் ஜெயம்ரவி. 'இதில், 50 வயதுக்காரருக்கு, ஜோடியாக நடிக்கிறார் மேக்னாராஜ். 'முதன் முறையாக, முதிர்ச்சியான வேடத்தில் நடிக்கிறேன். இதற்காக நிறைய ஹோம் ஒர்க் செய்து, என் பாடி லாங்குவேஜ் மட்டுமின்றி, பர்பாமென்ஸ் ஸ்டைலையும் மாற்றியுள்ளேன்...' என்கிறார். மெள்ள மெள்ள வந்தாளாம்; கட்டில் மெத்தை போட்டாளாம்!— எலீசாவிஜய சேதுபதி படங்களுக்கு மவுசு!விஜய சேதுபதி நடிக்கிற படங்கள் தொடர்ந்து, வெற்றி பெற்று வருவதால், அப்படங்களின், மற்ற மொழி, ரீ-மேக் உரிமையை, வாங்குவதில், பலத்த போட்டி நிலவி வருகிறது. பீட்சா படத்திற்கு இந்தி, தெலுங்கு படாதிபதிகளிடம் போட்டி ஏற்பட்டு, இப்போது, ஒரு இந்தி படாதிபதி, பெரிய தொகையை கொடுத்து வாங்கியுள்ளார். அதையடுத்து, சூது கவ்வும் படத்தின், ரீ-மேக் உரிமையை கைப்பற்ற, சில தெலுங்கு ஹீரோக்கள் வரிந்து கட்டி நிற்கின்றனர். அதிலும், நான் ஈ தெலுங்கு படத்தில் நடித்த நானி, 'எத்தனை லட்சங்கள் தரவும், நான் தயாராக இருக்கிறேன். அதனால், தெலுங்கு ரீ-மேக் உரிமையை, எனக்கே தர வேண்டும்...' என்று, நேரடியாக களமிறங்கியுள்ளார்.— சினிமா பொன்னையாஅவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !