உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புகள் படமாகிறது! திரைப்படங்களுக்கு, கிராபிக்ஸ் பணிகளை செய்து வரும், பிக்சல் கிராப்ட் ஸ்டுடியோ என்ற நிறுவனம், மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய, 'என் இனிய எந்திரா' மற்றும் 'மீண்டும் ஜீனோ' போன்ற கதைகளை, கிராபிக்ஸ் வடிவில் படமாக்க திட்டமிட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சியால், எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை, தன் எழுத்து வாயிலாக, சுஜாதா சொன்ன இந்த கதைகளை, புளூமெட் அல்லது கிரீன்மெட் பின்னணியில் நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து, காட்சிகளுக்கான இடம், பொருள், சூழலை கிராபிக்சில் உருவாக்கி படமாக்குகின்றனர். இந்த படங்களும், ஒரிஜினல் படங்களை போன்றே இருக்குமாம். இதில், என் இனிய எந்திரா படம் மட்டுமே, 40 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ளது.— சினிமா பொன்னையா.அஜீத் படத்துக்காக எடை குறைக்கும் த்ரிஷா!தன், 55வது படத்தில், 30 வயது இளைஞனாக நடிக்கும் அஜீத்திற்கு ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா. கதைப்படி இளவட்ட அஜீத்தின் காதலியாக நடித்துள்ள த்ரிஷா, ஒரு கட்டத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு விடுவார். படத்தின் முக்கிய பகுதியான, இக் காட்சிகளில் நடிக்கும் அஜீத், தன் உடல் எடையை குறைத்து, தன்னை இளைஞனாக வெளிப்படுத்துகிறார். அப்படத்தில் நடிக்கும் த்ரிஷா ஏற்கனவே ஒல்லியாக இருந்தாலும், மேலும், மெலிய கடந்த ஒரு மாதமாக தீவிர உணவு கட்டுப்பாட்டை கடை பிடித்து வருகிறார். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு மலேஷியாவில் நடந்ததை தொடர்ந்து, தற்போது, சென்னையிலுள்ள ஈ.சி.ஆர்., சாலையில், நள்ளிரவு நேரங்களில் மீண்டும் நடைபெற உள்ளது. தனக்கு உகந்த ஊணும், பிறருக்கு உகந்த கோலமும்!— எலீசாஒரே படத்தில் மூன்று, 'மாஜி' நடிகைகள்!ஒரு காலத்தில், தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் ரம்யாகிருஷ்ணன், மீனா மற்றும் சிம்ரன். இவர்களில் மீனா மட்டும் தான், இப்போதும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். மற்ற இருவரும், சின்னத்திரையில் தலைகாட்டி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் மூன்று பேரையும், ஒரே படத்தில் இணைத்து, கோலிவுட்டில் ஒரு படம் தயாராகிறது. அந்த படத்தில் ஒரு இளவட்ட நடிகரை கதாநாயகளாக நடிக்க வைக்க போகின்றனர். அந்த நடிகர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. மேலும், இவர்கள் மூன்று பேருமே முன்னணி நடிகைகள் என்பதால், அவர்கள் போட்டா போட்டியில், இறங்கும் வகையில், அதிரடியான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பட்டவர்கள் பதத்தில் இருப்பர்!— எலீசாமீண்டும் கிளாமருக்கு மாறும் ஹன்சிகா!கோலிவுட்டுக்குள் நுழைந்த போது, தன்னுடைய கவர்ச்சி நடிப்பால், ரசிகர்களை தாக்கி வந்த ஹன்சிகா, பின், கவர்ச்சி கதவுகளை இறுக மூடிக் கொண்டார். ஆனால், தற்போது மீண்டும் திறந்து விட்டுள்ளதால், ஹன்சிகாவை கமர்ஷியல் படாதிபதிகள் முற்றுகையிட்டிருப்பதோடு, அவர் எந்த அளவுக்கு ஆடை குறைப்பு செய்கிறாரோ, அதற்கேற்ப சம்பளத்தையும் உயர்த்திக் கொண்டே போகின்றனர். அதனால், தற்போது ஹன்சிகாவின் படக்கூலி, இரண்டு கோடியை எகிறி விட்டதாக கூறப்படுகிறது. அதையும், ஒரே தொகையாக கைப்பற்றி விடுகிறார். காற்றுள்ளப்போதே தூற்றிக் கொள்!— எலீசாதாத்தா நடிகர்களுக்கிடையே பலத்த போட்டி!மஞ்சப்பை படத்தில், ராஜ்கிரணும், சைவம் படத்தில் நாசரும் முக்கியத்துவம் வாய்ந்த, தாத்தா வேடத்தில் நடித்ததையடுத்து, அவர்களின் மார்க்கெட் உயர்ந்து நிற்கிறது. ஆனால், இரண்டு பேருமே நடிப்பில் சிறந்தவர்கள் என்பதால், சில கம்பெனிகள், தாத்தா வேடத்துக்கு யாரை, 'புக்' செய்யலாம் என்பதில் குழம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த தகவல், மேற்படி நடிகர்களின், காதுகளை எட்டியதையடுத்து, ஒரு வேளை நமக்கு வரவேண்டிய வாய்ப்பு, அந்த நடிகருக்கு போய் விடுமோ என்ற எண்ணம் இருவருக்குள்ளும் ஏற்பட, மறுநிமிடமே சம்பந்தப்பட்ட கம்பெனிகளுக்கு, போன் போட்டு, வாய்ப்புகளை கைப்பற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டி காரணமாக, ராஜ்கிரணுக்கு செல்ல வேண்டிய, ஒரு படம் நாசருக்கு திரும்பி விட்டது. கடைசி நேரத்தில், தன் வாய்ப்பை நாசர், அவர் பக்கம் திருப்பி விட்டதால், அவர் மீது செம கோபத்தில் இருக்கிறார் மஞ்சப்பை தாத்தா ராஜ்கிரண்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!தன் மகன் நடித்த முதல் இரண்டு படங்களுமே, படுதோல்வி அடைந்து விட்டதால், தலையில் கை வைத்து உட்கார்ந்திருந்த நவரச நடிகர், இப்போது, ஒரு சாமியாரை அணுகி, மகனுக்கு பரிகாரம் செய்துள்ளார். அதோடு, நியூமராலஜிபடி, அவரது பெயரிலும், சில திருத்தங்களை செய்திருக்கிறார்.'பிக்கப்' நடிகர், சமீபகாலமாய் வேறு நடிகைகளை, 'பிக்கப்' செய்து கொண்டிருப்பதால், தாரா நடிகைக்கும், அவருக்குமிடையிலான நட்பில், விரிசல் விழுந்துள்ளது. அதனால், முன்பெல்லாம் ஓய்வு நாட்களில், நடிகரின் ரெஸ்ட் ரூமுக்கு சென்று, 'ஜாலியோ ஜிம்கானா'வில் ஈடுபடும் நடிகை, இப்போது, அவரை முற்றிலுமாக தவிர்த்து வருகிறார்.துளிகள்!* சித்தார்த் நடித்துள்ள, ஜிகர்தண்டா படம், ஏ தர்ட்டி கார்னிவல் என்ற கொரியா நாட்டு படத்தின், நகல் என்ற தகவல், பரவியுள்ளது.* டூயட் பாடாத முதிர்ச்சியான வேடங்களில் நடிப்பதில், தன் கவனத்தை திருப்பியிருக்கிறார், நயன்தாரா.* டபுள் ஹீரோ கதையில் நடிப்பதில், தற்போது ஆர்வம் காட்டி வருகிறார், கவுதம் கார்த்திக்.* தன் பிறந்த நாளை மும்பையிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டாடிய காஜல் அகர்வால், காலை, மதியம் என, இரண்டு வேளையும், தன் கையாலே அங்கிருப்பவர்களுக்கு உணவு பரிமாறி உள்ளார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !