உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

படப்பிடிப்பு தளத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி!காந்தியின் சிந்தனை, காந்திய வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகி வரும் படம், 'முதல்வர்  மகாத்மா!' இப்படத்தில், 'காமராஜ்' திரைப்படத்தில், காந்தி வேடமேற்று நடித்த கனகராஜ் மீண்டும் காந்தியாக நடிக்க, இந்தி நடிகர் அனுபம்கேர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில், சுதந்திரப் போராட்ட தியாகியான கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் கலந்து கொண்டார்.                — சினிமா பொன்னையா.அதிரடி நடிகையான ஸ்வாசிகா!வைகை, கோரிப்பாளையம் படங்களில் நடித்த ஸ்வாசிகா, குடும்பப்பாங்கான நடிகை என்று பெயரெடுத்து விட்டார். இருப்பினும், இப்படியே நடித்தால் பெரிய அளவில் வளர முடியாது என்று கருதும் ஸ்வாசிகா, திடுதிப்பென்று கிளாமர் கதவுகளை திறந்து விட்டுள்ளார். முன்வரிசை ஹீரோக்களின் படமென்றால் அதிரடி கவர்ச்சியை வெளிப்படுத்த தான் தயாராகி விட்டதாகவும் கூறி வருகிறார். கெட்ட காலத்துக்கு விபரீத புத்தி!      — எலீசா.அஜீத் நடிக்கும்  புதிய படங்கள்!வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜீத்தின் 50வது படம், 'மங்காத்தா' வளர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று கதைகளை ஓ.கே., பண்ணி வைத்திருக்கிறார் அஜீத். அப்படங்களை கவுதம் மேனன், விஷ்ணு வர்தன், 'மதராசப்பட்டினம்' விஜய் ஆகியோர் இயக்குகின்றனர்.—  சி.பொ.,சமந்தா போடும் கண்டிஷன்! 'பாணா காத்தாடி'யில் நடித்த சமந்தாவை மீண்டும் தமிழுக்கு இழுக்க சில டைரக்டர்கள் நூல் விட்டனர். அதற்கு நடிகையோ, 'பெரிய டைரக்டர்களின் படம் என்பதை விட, பெரிய ஹீரோக்களின் படம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். குறிப்பாக, விஜய் போன்ற பிரபலங்களின் படங்கள் கிடைத்தால் மட்டுமே தமிழில் மீண்டும் நடிப்பேன்...' என்று நூல் விட்டவர்களை டீலில் விட்டுவிட்டார். ஆசை நோய்க்கு அவிழ்தம் ஏது?                                                       — எலீசா. மீண்டும்  சோனியா அகர்வால்!இயக்குனர் செல்வராகவனிடமிருந்து விவாகரத்து பெற்ற சோனியா அகர்வால், சிம்பு - பரத் இணைந்து நடிக்கும், 'வானம்' படத்தில் நடிக்கிறார். கதைப்படி பிரகாஷ் ராஜின் மனைவியாக நடிக்கும் சோனியாவின் கதாபாத்திரத்துக்கு ஒரு பாடலும் உள்ளது. இதுபோன்று நல்ல வேடங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்கும் முடிவில் இருக்கிறார். போனது போல வந்தாளாம் புது மணப்பெண்!  —எலீசா.'காவலன்' இன்னொரு  காதலுக்கு மரியாதை!தொடர்ந்து ஆக்ஷன் கதைகளில் நடித்து வந்த விஜய், சித்திக் இயக்கத்தில் நடித்து வரும், 'காவலன்' படத்தில் ஸ்வீட்டான காதல் கதையில் நடித்து வருகிறார். ஏற்கனவே நான் நடித்த, 'காதலுக்கு மரியாதை' படத்துக்கு இணையான காதல் கதை இது என்று சொல்லும் விஜய், 'சித்திக் இயக்கத்தில் முன்பு நான் நடித்த,'பிரண்ட்ஸ்' படத்தை போல் இப்படமும் ஹாட்ரிக் வெற்றி பெறும்!' என்கிறார். —  சி.பொ.,அதிர வைத்த இலியானா! 'வெடி' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வரும் இலியானாவை, சில மெகா பட்ஜெட் படாதிபதிகள் அயிட்டம் பாடலுக்கு பாட அழைத்தனர். அதற்கு, 'ஆடுவதில் ஒன்றும் ஆட்சேபனை இல்லை; ஆனால்,  ஒரு பாட்டுக்கு, 30 லட்ச ரூபாயை முதலில் வெட்டுங்கள்...' என்று, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாக பேசியிருக்கிறார். கதாநாயகிக்கு, படம் முழுக்க நடிக்க 30 லட்சம் கொடுக்கவே யோசிக்கும் படாதிபதிகள், 'ஒரு பாட்டுக்கு 30 லட்சமா?' என்று வாய்ப்பிளந்து நிற்கின்றனர். பேராசை கொண்டு பெருக்கத் தவிக்கிறது!  — எலீசா.மணிரத்னம் படத்தில் கார்த்திக் மகன்!பிரபல நடிகர்  - நடிகைகளை வைத்து மணிரத்னம் இயக்கிய படங்கள் தோற்று வருவதால், ஒரு மாறுதலுக்காக புதுமுக நடிகரை வைத்து, தன் அடுத்த படத்தை இயக்குகிறார் அவர். அந்த புதுமுக நடிகர் வேறு யாருமல்ல, நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கவுதம்தான். அப்படத்துக்கு, 'பூக்கடை' என்று பெயர் வைத்திருக்கிறார் மணிரத்னம்.    — சினிமா பொன்னையா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !