இதப்படிங்க முதல்ல...
ஆங்கில மொழியில் கணிதமேதை ராமானுஜன்!பாரதி மற்றும் பெரியார் படங்களை இயக்கிய ஞானராஜசேகரன் இயக்கியுள்ள படம், ராமானுஜன். தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்து, உலக அளவில் புகழ் பெற்ற கணிதமேதை ராமானுஜரின் வாழ்க்கை குறித்து உருவாகியுள்ள இப்படத்தை, தற்போது, ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்துள்ளனர். விரைவில் இப்படம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. மேலும், கணிதமேதையான ராமானுஜன் என்ற தமிழனின் பெருமையை, உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இப்படத்தை உலக அளவில் வெளியிடும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.— சினிமா பொன்னையாஅனுஷ்கா, சமந்தாவை முந்திச்சென்ற நஸ்ரியா!இப்போதெல்லாம் நடிகர், நடிகைகள் தங்களுக்கு ரசிகர்கள் மத்தியில், எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காகவே, பேஸ்புக்கில் கணக்கு துவக்கி வருகின்றனர். அந்த வகையில், கடந்த, ௨௦௦௭ம் ஆண்டே கணக்கு துவங்கிய அனுஷ்காவை, இதுவரை, ௫௯ லட்சம் ரசிகர்கள், 'லைக்' செய்துள்ளனர். ௨௦௧௧ம் ஆண்டு கணக்கு துவங்கிய சமந்தாவை, இதுவரை ௫௮ லட்சம் பேர், 'லைக்' செய்துள்ளனர். ஆனால், ௨௦௧௨ம் ஆண்டு கணக்கு துவங்கிய, நஸ்ரியாவை இரண்டே வருடத்திற்குள், ௮௦ லட்சத்திற்கு மேலான ரசிகர்கள், 'லைக்' செய்து, பின்தொடர்ந்து வருகின்றனர். அதோடு, அவரது அழகையும் தாறுமாறாக புகழ்ந்து தள்ளி வரும் ரசிகர்கள், திருமணத்திற்கு பிறகும், கலைச்சேவை ஆற்றுமாறு கேட்டுக் கொண்டு வருகின்றனர். ரசிகர்களின், இந்த கோரிக்கையை, தன் வருங்கால கணவரான பஹத்பாசிலின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளார். புது வெள்ளம் வந்து, பழைய வெள்ளத்தை அடித்துக் கொண்டு போயிற்றாம்!— எலீசாசிவகார்த்திகேயன் சம்பளம் கிடுகிடு உயர்வு!சிவகார்த்திகேயன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, தன் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு, ஒரு படம் செய்து தருமாறு ஒப்பந்தம் போட்டிருந்தார் லிங்குசாமி. அதற்காக, ஒரு கோடி ரூபாய் சம்பளம் தருவதாகவும் பேசப்பட்டிருந்தது. ஆனால், வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் மான் கராத்தே படங்களின் சூப்பர் ஹிட் காரணமாக, சிவகார்த்திகேயனின் சம்பளம், 'கிடுகிடு'வென்று உயர்ந்து, இப்போது, எட்டு கோடியை தொட்டு நிற்கிறது. இந்நிலையில், 'டாணா படத்தில் நடித்து முடித்ததும், தன் கம்பெனிக்கு நடித்து தர வேண்டும்...' என்று சிவகார்த்திகேயனை லிங்குசாமி நினைவுபடுத்தியபோது, தன் சம்பளம் உயர்ந்திருப்பதை, அவரது கவனத்துக்கு கொண்டு சென்றார் சிவா. ஆனால், அதைக்கேட்டு டென்ஷனான லிங்குசாமி, 'ஏற்கனவே அக்ரிமென்ட் போட்டது போட்டது தான்; ஒப்பந்தத்தை மீறினா, பிரச்னை வேற மாதிரி போயிடும்...' என்று சிவகார்த்திகேயனிடம் கோபத்தைக் காட்டியிருக்கிறார். இதையடுத்து, தனக்கு வேண்டப்பட்டவர்களை வைத்து பஞ்சாயத்து செய்திருக்கிறார் சிவா. ஆக, இரண்டு பக்கமும், பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக, இப்போது எட்டு கோடி என்பதை, ஆறு கோடியாக முடித்திருக்கின்றனர். எப்படியோ அடம் பிடித்ததின் விளைவாக, கூடுதலாக ஐந்து கோடியை, 'கேட்ச்' செய்து விட்டார் சிவகார்த்திகேயன்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!* பாலிவுட் நடிகைகள் அனைவருமே, விருது விழாக்களில் ஆட்டம் போடுவர். அந்த பழக்கத்தை சென்னைக்கு வந்த பின்பும் தொடர்ந்தார், ஹாசன் நடிகை. சமீபத்தில் ஒரு சேனல் நடத்திய விருது நிகழ்ச்சியில், அவர் படுகவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார். இந்த சேதி அவரது தந்தைகுலத்துக்கு தெரிந்ததும், கடும் கோபமடைந்தவர், 'இனிமேல் மேடைகளில் குலுக்கல் ஆட்டம் ஆடி, இமேஜை கெடுத்துக்கொள்ள வேண்டாம்...' என்று மகளிடம் கூறியுள்ளார்.* கும்கி நடிகை நடித்த படங்கள், 'ஹிட்' அடிப்பதால், தன் படக்கூலியை தற்போது, கோடிக்கணக்கில் உயர்த்தி விட்டார். அதோடு, இதுவரை சிறிய ஓட்டல்களில் தங்கியவர், இப்போது பைவ் ஸ்டார் ஓட்டல்தான் என்பதில், உறுதியாக இருக்கிறார். இதனால், பட்ஜெட் நடிகை, தங்கள் கையை கடித்து விட்டதாக, அவரை ஒப்பந்தம் செய்திருப்பவர்கள் புலம்புகின்றனர்.துளிகள்!* விஜயசேதுபதி நடிப்பில் வெளியான, பீட்சா படத்தின் இந்தி ரீ-மேக், தமிழைவிட கூடுதலாக வசூலை அள்ளிக் குவித்துள்ளது.* விஷாலுடன் நடிக்கும் பூஜை படத்தில், கோவை தமிழ் பேசும் பெண்ணாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன்.* கமலின், விஸ்வரூபம் - 2 எப்போது ரிலீசாகிறது என்ற விபரம் தெரியாத நிலையில், அப்படத்திற்கு பின், அவர் நடித்த, உத்தம வில்லன் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது.* கடல் கவுதமுடன், லட்சுமி மேனன் நடித்து வந்த, சிப்பாய் படம், பைனான்ஸ் பிரச்னையால் கிடப்பில் கிடக்கிறது.* உலக கபடி விளையாட்டில் ஆடும், யுனைடெட் கிங்ஸ் என்ற டீமின் பங்குதாரராகியிருக்கிறார் லிங்கா பட நாயகி சோனாக் ஷி சின்ஹா.