உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

கமலுடன் நடிக்க விரும்பிய கலாபவன் மணி!தமிழில் மம்மூட்டி நடித்த, மறுமலர்ச்சி என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகர் கலாபவன் மணி. அதையடுத்து தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த அவர், பின், காணாமல் போய் விட்டார். தற்போது பல ஆண்டு இடைவெளிக்கு பின். மலையாளத்தில் வெளியான, த்ருஷ்யம் படத்தின் தமிழ் ரீ-மேக்கான, பாபநாசம் படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்கிறார். இப்படத்தில் நாயகனாக நடிக்கும் கமலுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது கலாபவன் மணியின் நீண்டகால ஆசை. அதனால், சென்னை வந்து கமலை சந்தித்து இந்த வாய்ப்பை வாங்கியிருக்கிறார். அதோடு, கலாபவன் மணி, கேரளாவில் முன்னணி நடிகர் என்பதால், மலையாள பதிப்பில் சிறியதாக இருந்த அந்த போலீஸ் வேடத்தை, தமிழில் பெரிதுபடுத்தியுள்ளனர்.— சினிமா பொன்னையாரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சன்னி லியோன்!படத்துக்குப்படம் கவர்ச்சி பிரளயமாய் வெடித்து சிதறி வந்த சன்னி லியோனுக்கு இப்போது, குடும்பப் பாங்கான வேடங்களில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதனால், 'உடலைக்காட்டி நடித்தது போரடித்து விட்டது; இனி, திறமையைக்காட்டி நடிக்கப் போறேன்...' என்று இணையதளங்களில் செய்தி வெளியிட்டுள்ளார். அதனால், உலகமெங்கும் பரவிக்கிடக்கும், அவரது ரசிகர்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். அதோடு, இந்த முடிவை மாற்றிக்கொள்ளுமாறு அவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால், சன்னியோ, 'உங்கள முழுசாக ஏமாற்ற மாட்டேன்; குடும்ப கதைகள் என்றாலும் அதிலும் எனக்கேற்ற சில காட்சிகளை உருவாக்க சொல்லி அதன் மூலம், உங்களது ரசனைக்கு தீனி போடுவேன்...' என்று ஆறுதல் செய்தி வெளியிட்டுள்ளார். அதை விட்டாலும் கதி இல்லை; அப்புறம் போனாலும் விதி இல்லை!— எலீசா'சரக்கு' பிரச்னையில் சிக்கிய ப்ரியா ஆனந்த்!அரிமா நம்பி படத்தில், மது அருந்தும் காட்சியில் நடித்த ப்ரியா ஆனந்த், சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில், அவரை முகநூலில் தொடர்பு கொண்ட இளம் ரசிகர்கள், 'ஒரு தமிழ்நாட்டுப்பெண் இப்படி சரக்கு அடிப்பது போன்ற காட்சியில் நடித்து, கலாசார சீர்கேட்டை ஏற்படுத்தலாமா?' என்று சூடாக கேட்டுள்ளனர். இதனால், நிஜமாலுமே சூடாகிப்போன ப்ரியா ஆனந்த், 'ஆணுக்கு பெண் சமம் என்கிற நிலை இருக்கும் போது, ஆண்கள் அடிக்கும் சரக்கை பெண்கள் அடித்தால் என்ன தவறு? உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?' என்று, 'நறுக்' பதில் கொடுத்துள்ளார். நேற்று வந்தாளாம் குடி; அவள் தலையிலே விழுந்ததாம் இடி! —எலீசாஐ.பி.எஸ்., வேடத்தில் ஸ்ரீதேவி!பதினாறு ஆண்டுகளுக்கு பின், சினிமாவில் மீண்டும் பிரவேசித்துள்ள ஸ்ரீதேவி, விஜய் தமிழில் இரு வேடங்களில் நடிக்கும், புதிய படத்தில், ப்ளாஷ்பேக்கில் வரும் வயதான விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இதையடுத்து, மலையாளத்தில் மோகன்லால் - மீனா நடிப்பில் வெளியான, த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீ-மேக்கில், ஐ.பி.எஸ்., வேடத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இப்படத்தில் நாயகனாக நடிக்கும் கமல், 'இந்த வேடத்துக்கு ஸ்ரீதேவி பொருத்தமாக இருப்பார்...' என்று கருத்து சொன்னதையடுத்து, மும்பைக்கு சென்று ஸ்ரீதேவியிடம் பேசியுள்ளனர்; ஆக, நீண்ட இடைவெளிக்குப்பின், மீண்டும் கமலுடன் இணைகிறார் ஸ்ரீதேவி.—எலீசாஅதிரடி வில்லன் கேட்கும் அதர்வா!இரும்புக்குதிரை படத்தில் பைக் ரேசராகவும், ஈட்டியில் தடகள வீரராகவும் நடித்து வருகிறார் அதர்வா. இந்த படங்களுக்காக மாதக்கணக்கில் அந்தந்த விளையாட்டு பயிற்சிகளை மட்டுமின்றி, அதற்கேற்ப தன், 'பாடிலாங்குவேஜை'யும் மாற்றி நடித்துள்ளார். அதோடு, ஈட்டி படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிக்காக, 'சிக்ஸ்பேக்' உடல்கட்டுக்கு மாறியுள்ள அதர்வா, இரும்புக்குதிரையில் ஹாலிவுட் வில்லன் ஜானியுடன் மோதியுள்ளார். இதனால், தன் ஆக் ஷன் படங்களில் அவரைப் போலவே அதிரடி வில்லன் நடிகர்களை ஒப்பந்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்டு வருகிறார்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!ஜெயம் நடிகருடன் தான் நடித்து வரும் படத்தில், இப்போது மூனுஷா நடிகையும் இணைந்திருப்பதால், தன்னை இரண்டாம் கதாநாயாகியாக்கி விடுவார்களோ என்று அதிர்ச்சி அடைந்துள்ளார், அங்காடி நடிகை. இருப்பினும், கவனிக்க வேண்டியவர்களை கச்சிதமாக கவனித்து விட்டால், எதுவும் கை நழுவிப் போகாது என்பதால், காரியத்தில் இறங்கி விட்டார். தளபதி நடிகருடன் நடித்த பின், புதிய வாய்ப்புகள் இல்லாமல் ஆந்திராவில் மையம் கொண்டுள்ள அந்த ஸ்வீட் நடிகையை, தமிழில் கண்டு கொள்வாரில்லை. அதனால், மீண்டும் தன் அபிமானத்துக்குரிய தளபதி உள்ளிட்ட சில கதாநாயகர்களிடம் ரகசிய மீட்டிங் போட்டு, ஆதரவு கோரி வருகிறார் நடிகை.துளிகள்!தன்னைப் பற்றி வெளியான திருமண செய்திகளை அடுத்து, 'நான் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு பின் தான் திருமணம் பற்றி யோசிப்பேன்...' என்று செய்தி வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.அஞ்சலி தெலுங்கில் பேயாக நடித்த படம் வெளியாகி, வெற்றிப்பெற்றுள்ளது. அதனால், மேலும் இரண்டு பேய் படங்களில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !