இதப்படிங்க முதல்ல...
அஜித், விஜய்யை அதிர வைத்த இணையதள ரசிகர்கள்!அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் மோதிக் கொள்வது வழக்கமானது தான்! இதுவரை யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது குறித்து அதிகமாக மோதிக் கொண்ட அவர்கள், 'இப்போது அடுத்த முதல்வர் அஜித்தா இல்லை விஜய்யா?' என்ற மோதலை துவக்கியிருக்கின்றனர். இந்த விஷயம் மேற்படி நடிகர்களின் கவனத்துக்கு சென்றதில் இருந்து கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். 'ஏற்கனவே ஜெ.,க்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் அது, தங்களது கேரியருக்கே ஆப்பு வைக்கும் வேலையாகிவிடும். அதனால், இந்த அடுத்த முதல்வர் ஆர்ப்பாட்டத்தை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்...' என்று, தங்கள் ரசிகர்களை கேட்டு வருகின்றனர்.— சினிமா பொன்னையாஅஜித்துடன் நடிக்கத் துடிக்கும் நந்திதா!தமிழ் சினிமாவை பொறுத்த வரை நயன்தாரா முதல் நந்திதா வரைக்கும் அனைவருக்குமே பிடித்த கதாநாயகன் அஜித் தான். அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று அனைத்து இளவட்ட நடிகைகளுமே ஆசைப்படுகின்றனர். அவர்களில், எதிர்நீச்சல் மற்றும் முண்டாசுப்பட்டி படங்களில் நடித்த நந்திதா, 'அஜித் தான் என் மனம் கவர்ந்த கதாநாயகன்; அவரது எளிமை, மற்றவர்களை மதிக்கும் பாங்கு என்னை மிகவும் கவர்ந்து விட்டது. அதனால், அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது லட்சியமாகி விட்டது...' என்று துடித்துக் கொண்டிருக்கிறார். அதனால், அடுத்தபடியாக அஜித் எந்தெந்த இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார் என்பதை கணக்கெடுத்து, அந்த இயக்குனர்களிடம் தன் ஆவலை வெளிப்படுத்தி வருகிறார். ஆசை பெருக அலைச்சலும் பெருகும்!— எலீசாஎமி ஜாக்சன் கொடுக்கும் ஷாக்!மதராசப்பட்டினம் படத்தில் ஆர்யாவுடன் நடித்த எமி ஜாக்சன், அதையடுத்து, தாண்டவம் மற்றும் ஐ படங்களில் விக்ரமுடன் நடித்துள்ளார். இதையடுத்து, வெங்கட் பிரபு இயக்கும், மாஸ் படத்தில் நடிப்பவரை, மேலும் சில பட்ஜெட் பட நிறுவனங்கள் தொடர்பு கொண்ட போது, 'நான் எப்போதுமே மேல்தட்டு கதாநாயகர்களுடன் மெகா பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன்...' என்று சொல்லி, அந்த படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். அதோடு, 'நான் உங்கள் படத்தில் நடித்தால், இரண்டு கோடி சம்பளம் வேண்டும்; அத்துடன் நான் ஒவ்வொரு முறையும் படப்பிடிப்புக்கு லண்டனில் இருந்து வந்து செல்வதற்கும், விமான டிக்கெட் மற்றும் ஐந்து நட்சத்திர ஓட்டல் என்று பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியிருக்கும்...' என்று பட்டியல் தந்து, அவர்களை தலைசுற்ற வைத்துள்ளார் எமிஜாக்சன். அலை மோதும் போதே கடலாட வேண்டும்!— எலீசாவிஜய் பட டைட்டிலை கைப்பற்றிய ஜெய்!ஷங்கர் இயக்கத்தில், ஐ படத்தை தயாரித்துள்ள ஆஸ்கர் பிலிம்ஸ், அடுத்த ஆண்டு விஜய்யை வைத்து ஒரு மெகா படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தது. அந்த படத்தின் கதையை முடிவு செய்து விட்டவர்கள், படத்தின் தலைப்பை, புகழ் என்று பதிவு செய்து வைத்திருந்தனர். ஆனால், ஐ பட வேலைகளில் பிசியாக இருந்ததால், அந்த தலைப்பை ஓராண்டுக்கு பின், மீண்டும் பதிவு செய்ய மறந்து விட்டனர். விளைவு, இந்த விஷயத்தை எப்படியோ கேள்விப்பட்ட ஜெய் நடிக்கும் படக்குழுவினர், புகழ் டைட்டிலை தங்கள் நிறுவனத்துக்கு பதிவு செய்து கொண்டனர். இந்த விஷயம் விஜய்யின் காதுக்கு சென்றதிலிருந்து, ஜெய் மீது செம கோபத்தில் இருக்கிறார் விஜய். ஆனால், ஜெய்யோ, 'அடுத்த தளபதி நான் தான்' என்கிற அளவுக்கு, 'பில்டப்' கொடுத்து வருகிறார்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!சுமார் மூஞ்சு நடிகரின் அரவணைப்பில் இருந்து வந்த ரம்மி நடிகைக்கு, இப்போது அவரது ஆதரவு குறைந்து கொண்டே வருகிறது. தாரா உள்ளிட்ட மேல்தட்டு நடிகைகளுடன் மேற்படி நடிகர் ஜோடி சேர்ந்திருப்பதே இதற்கு காரணம். இதனால், அதிர்ச்சியடைந்துள்ள அந்த ஐஸ் நடிகை, இப்போது வேறு நல்ல கொழு கொம்பாக தேடி வருகிறார்.துளிகள்!* முன்றெழுத்து இயக்குனரை திருமணம் செய்து கொண்ட பால் நடிகைக்கு, சினிமாவில் தொடர்ந்து திறமை காட்ட வேண்டும் என்ற ஆசை அளவுக்கதிகமாக உள்ளது. ஆனால், மேற்படி டைரக்டரோ, மீண்டும் அம்மணி அரிதாரம் பூசுவதற்கு தடா போட்டு விட்டார். இதனால், அவர்களது குடும்ப வாழ்க்கையில், சலசலப்பு ஏற்பட்டுள்ளது.* நான் படத்தின், 2ம் பாகத்தில் நடித்து விட்ட விஜய் ஆண்டனி, அதன், 3ம் பாகத்தில் அடுத்த ஆண்டு நடிக்க இருக்கிறார்.* பண்ணையாரும் பத்மினியும் மற்றும் ரம்மி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், தன் தாய்மொழியான தெலுங்கில் நடிக்க முயற்சி எடுத்து வருகிறார்.* சைவம் படத்தையடுத்து, விக்ரம்பிரபுவைக் கொண்டு தன் புதிய படத்தை இயக்குகிறார் ஏ.எல்.விஜய்.