இதப்படிங்க முதல்ல ...
சம்பளமே கேட்காத விக்ரம்!பிரபல மலையாள இயக்குனர்களில் ஒருவர் ரோஷன் ஆண்ட்ரூ. இவர், சமீபத்தில் நடிகர் விக்ரமை சந்தித்து ஒரு கதை சொன்னார். இரண்டு மணி நேரம் பொறுமையாக கதையை கேட்ட விக்ரம், 'இந்தக் கதைக்காக, சம்பளமே வாங்காமல் நான் நடித்துத் தருகிறேன்...' என்று கூறி, இயக்குனருக்கு பலத்த இன்ப அதிர்ச்சியை கொடுத்து விட்டார். — சினிமா பொன்னையா.ஸ்ரேயா எதிர்பார்ப்பு!ஆர்யாவுடன் சிக்கு புக்கு படத்தில் நடித்து முடித்துள்ள ஸ்ரேயா, அடுத்து ஜீவாவுடன் நடித்து வரும் ரவுத்திரம் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார். 'இதற்கு முன் எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்தாலும், அவையெல்லாம் என் கவர்ச்சியை குறிவைத்தே அமைந்தன. ஆனால், ரவுத்திரம் படம்தான் என் திறமைக்கு சவால் விடும் வகையில் கிடைத்துள்ளது. அதனால், இந்தப் படத்துக்கு பிறகு என் மீதான இமேஜே மாறும்...' என்கிறார். நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும். — எலீசா.வருத்தத்தில் பரத்!சிம்பு - பரத் நடிக்கும், வானம் படத்தில் சினேகா உல்லால், அனுஷ்கா இருவரும் நடிக்கின்றனர், சினேகா உல்லால் சிம்புவுக்கு ஜோடி என்பதால், அனுஷ்கா நமக்குதான் ஜோடி என்று நினைத்துக் கொண்டிருந்தார் பரத். ஆனால், கதைப்படி அனுஷ்காவுக்கு ஜோடியே கிடையாது என்று சொன்ன டைரக்டர், பரத்துக்கு ஜோடியாக, 'பசங்க' படத்தில் நடித்த வேகாவை, 'புக்' பண்ணிவிட்டார். இதனால், அனுஷ்காவுடன் ஜோடி சேர முடியவில்லையே என்று வருத்தத்தில் உள்ளார் பரத். — சி.பொ.,வித்-அவுட் மேக்-அப்பில் சமீரா ரெட்டி!வாரணம் ஆயிரம் படத்தில் நடித்த சமீரா ரெட்டியை, தன், நடுநிசி நாய்கள் படத்தில் வித்-அவுட் மேக்-அப்பில் நடிக்க வைத்துள்ளார் கவுதம் மேனன். அதோடு, சினிமாத்தனம் துளியும் இல்லாமல் இயல்பாக நடிக்க வைத்துள்ளார். இதனால், இது எனக்கு புதிய அனுபவமாக உள்ளது என்று சொல்லும் சமீரா, மிட்-நைட் காட்சிகளை ரொம்பவே, 'என்ஜாய்' பண்ணி நடித்ததாக சொல்கிறார். அதிசயம் அடி அம்மங்காரே, அம்மி புரண்டு ஓடுகிறது! — எலீசா.காமெடி கூட்டணி!பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்த ஆர்யா, அதற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக உற்சாகமடைந்துள்ளார். அதனால், 'இனி, நான் நடிக்கும் படங்களில் காமெடிக்கும் முக்கிய இடம் கொடுப்பேன்...' என்று சொல்லும் ஆர்யா, அடுத்தடுத்து சந்தானம் மட்டுமின்றி வடிவேலு, விவேக் போன்ற நடிகர்களுடனும் இணைந்து நடிக்க பிரியப்படுவதாகவும் சொல்கிறார். — சி.பொ.,'காசேதான் கடவுளடா!'முப்பது வருடங்களுக்கு முன்பு ஏவி.எம்., நிறுவனம் தயாரித்து வெளியான படம், 'காசேதான் கடவுளடா!' இதே டைட்டிலில், தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஒரு படத்தின் கதையை தற்போது தமிழில் ரீ-மேக் செய்து வருகிறார் இயக்குனர் திருமலை. புதுமுக நாயகன் சரண், காம்னா ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தில், பாண்டியராஜன், கருணாஸ், மனோபாலா, சத்யன், டில்லி கணேஷ், சிங்கமுத்து, சிங்கம்புலி, மயில்சாமி,பாண்டு, லொள்ளு சபா, ஜீவா என்று ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளது. — சி.பொ.,'சிக்ஸ் பேக்' முயற்சியில் தனுஷ்!'பொல்லாதவன்' படத்தில் காமெடி கலந்து நடித்த தனுஷ், 'உத்தமபுத்திரன்' படத்தில் முழு காமெடி ஹீரோவாக மாறியுள்ளார். ஆனால், இதற்கடுத்து நடிக்கப் போகும் ஒரு படத்தில், முழு ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதற்காக, ஜிம்முக்கு சென்று தன் உடலையும் சிக்ஸ் பேக்குக்கு மாற்றப் போவதாக சொல்கிறார். — சினிமா பொன்னையா.கமல் மகள் ஸ்ருதி, லக் இந்தி படத்தில் அறிமுகமான போதே, ஸ்ரீதேவியின் மகளான ஜான்வியும் சினிமாவில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அப்போதெல்லாம் மகளை சினிமா களத்தில் இறக்காத ஸ்ரீதேவி, இப்போது சிரஞ்சீவியின் மகனான ராம் சரணுக்கு ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். ஒருவேளை அந்த முயற்சி ஈடேறவில்லையெனில், அடுத்த முயற்சியை தமிழில்தான் தொடரப் போவதாக கூறுகிறார் ஸ்ரீதேவி.