உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

விஜய்யுடன் மோதும் விஷால்!விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர், தற்போது, விஷால் ரசிகர் மன்ற தலைவராகியிருக்கிறார். அத்துடன், 'விஜய் ரேஞ்சுக்கு, விஷாலை பெரிய நடிகராக்கிக் காட்டுகிறேன்...' என்று சவால் விட்டுள்ளார். விளைவு, புலி படத்தின் படப்பிடிப்பு முடிந்த அன்று, யூனிட்டில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு, விஜய் தங்க நாணயம் பரிசளித்தது போன்று, தன், பாயும்புலி படத்தின் படப்பிடிப்பின் கடைசி நாளன்று, விஷாலும் தொழிலாளர்களுக்கு தங்க நாணயம் பரிசளித்துள்ளார். அத்துடன், விஜய்யின், புலி படத்தோடு, தன் படத்தையும் வெளியிட்டு, பலப்பரீட்சை காணவும் தயாராகி வருகிறார்.— சினிமா பொன்னையாஅனுஷ்காவை மாற்றும் ஆர்யா!ஆர்யா - அனுஷ்கா இருவரும் இணைந்து நடித்து வரும் படம், இஞ்சி இடுப்பழகி. இப்படத்தில், அனுஷ்காவை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை, அவரது உடம்பை ஸ்லிம்மாக மாற்றினால், திருமணம் செய்து கொள்வதாக கண்டிஷன் போடுவார். அதனால், தன் உடம்பை, 'ஸ்லிம்' செய்ய, பாடி பிட்னஸ் பயிற்சியாளர் ஆர்யாவை சந்திப்பார் அனுஷ்கா. அப்போது, அவர் கொடுக்கும் பயிற்சியில், அனுஷ்காவின் உடம்பு, 'ஸ்லிம்'மாவதுடன், அவர்களுக்கிடையே லவ், 'ஒர்க்-அவுட்'டாகி விடும். இப்படத்தில், அனுஷ்கா, சிம்ரனாட்டம் தன் இடுப்பை வளைத்து, நெளித்து ஆடும், 'இஞ்சி இடுப்பழகி...' என்ற பாடலும் இடம் பெறுகிறது.— சி.பொ.,மணிரத்னத்தின் மெகா படம்!ஓ காதல் கண்மணி படத்தையடுத்து, தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளிலும் ஒரு படத்தை இயக்குகிறார் மணிரத்னம். அப்படத்தில், அவரது, இருவர் படத்தில், தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் இணைந்து நாகார்ஜுனா, மகேஷ்பாபு மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படம் குறித்து, ஐஸ்வர்யா ராய்க்கு, மணிரத்னம் தகவல் கொடுத்ததுமே, 'ரீ -என்ட்ரியில் உங்கள் படத்தில் தான் அறிமுகமாக நினைத்தேன்; ஆனால், அது நடக்கவில்லை. இருப்பினும், என் அடுத்த படம், உங்கள் படமாக தான் இருக்கும்...' என்று உறுதி அளித்து விட்டார். அதனால், மற்ற நடிகர், நடிகைகளிடம், 'கால்ஷீட்' பேசி வருகிறார் மணிரத்னம்.— சி.பொ.,மாதவனின் வசூல் சாதனை!சமீபகாலமாக, தமிழில், அலைபாயுதே மாதவனை காண முடியவில்லை என்றாலும், இந்தி சினிமாவில் வேகமாக முன்னேறி வருகிறார். இந்தியில் அவர் நடித்து வெளியான, தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் என்ற படம், 225 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 100 கோடி ரூபாய் வசூலித்தாலே, அதை, 'பில்டப்' கொடுத்து, பப்ளிசிட்டி செய்து வந்த பாலிவுட் கதாநாயகர்கள், மாதவனின் இச்சாதனையை கண்டு ஆடிப் போயுள்ளனர்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!மூனுஷாவின் திருமணம் நின்று போனதற்கு, பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், தற்போது, 'என் திருமணம் நின்று போனதற்கு, சில நடிகர்கள் தான் காரணம்...' என்று தன் பீலிங்சை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை. அதனால், 'இனிமேல் எந்த நடிகருடனும் நட்பு வளர்க்கப் போவதில்லை...' என்று கூறியுள்ளவர், அந்த இரண்டெழுத்து தெலுங்கு நடிகருடன், தற்போது ஒட்டு, உறவு இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.அவுட்டோர்களில் நடிகைகளிடம் நெருக்கம் காட்டுவதாக பரவும் செய்தியால், மெரினா பட நடிகரின் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதை தடுக்கும் முயற்சியாக, சமீபகாலமாக, அவுட்டோர்களுக்கு அவரது மனைவி, 'விசிட்' அடிக்கிறார். இதன்காரணமாக, அவரை அட்டைப்பூச்சியாக ஒட்டிக் கொண்டிருந்த சில நடிகைகள், எகிறி ஓடுகின்றனர்.அகர்வால் நடிகை மீது, அவரது மும்பை பாய்பிரண்ட் ஒருவருக்கு லவ் ஏற்பட, அம்மணிக்கு டார்ச்சர் கொடுத்து வந்தார். ஆனால், காதல் மீது நம்பிக்கை இல்லாத நடிகை, இவ்விவகாரத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விடும் முயற்சியாக, தனக்கு தெரிந்த மும்பை காவல்துறை அதிகாரியை வைத்து, அந்த பாய் பிரண்டை முட்டிக்கு முட்டி தட்டி, இனிமேல் தன் மீது அவருக்கு காதலே வராத அளவுக்கு, சூடு காட்டியுள்ளார். சினி துளிகள்!* தான் நடிக்கும் படங்களில், ஜூனியர் நடிகைகள் இடம் பெற்றால், அவர்களுக்கு நடிப்பு, 'டிப்ஸ்' கொடுக்கிறார் த்ரிஷா.* சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் தோல்வியடைந்த போதும், படத்துக்குப் படம் அவர் தன் சம்பளத்தை உயர்த்தி வருவதாக கூறப்படுகிறது. * மாரி மற்றும் பாயும்புலி படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், அடுத்த படியாக, விஜய் மற்றும் அஜித்துடன் ஜோடி சேர முயற்சி செய்து வருகிறார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !