இதப்படிங்க முதல்ல...
அதிரடி வக்கீலாக அனுஷ்கா ! அருந்ததி படத்தில் அதிரடி நடிப்பை வெளிப்படுத்திய அனுஷ்கா, விக்ரமுடன் நடிக்கும் தெய்வ மகன் படத்தில், நீதிமன்றத்தையே அதிர வைக்கும் அளவுக்கு வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார். கதைப்படி அம்மணிக்கு பக்கம் பக்கமாய் வசனம் பேச வேண்டியுள்ளதாம். முக்கியமாக, பெண் உரிமைக்கு குரல் கொடுத்தும் பேசுகிறாராம். குருவி தலையில் பனங்காயை வைத்தாற் போல! — எலீசா.செம குஷியில் லட்சுமி ராய் ! லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா படத்திலிருந்து அனுஷ்கா விலகியதால், செம குஷியில் இருக்கிறார் லட்சுமி ராய். காரணம், அனுஷ்கா நடித்த மொத்த காட்சிகளையும் நீக்கிவிட்ட லாரன்ஸ், லட்சுமி ராயின் வேடத்துக்கு வெயிட் சேர்த்து விட்டார். விளைவு, 'தமிழில் விட்ட இடத்தை மீண்டும் பிடித்து விடுவேன்...' என்று மார்தட்டுகிறார். வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா! — எலீசா. சமீரா ரெட்டி கொடுக்கும் ஐடியா ! நடிகை சமீரா ரெட்டிக்கு படப்பிடிப்பு தளத்தில், போனில் கடலை போடுவது சுத்தமாக பிடிக்காதாம். அதனால், ஓய்வு நேரத்தில் கூட, அடுத்து தான் நடிக்க வேண்டிய காட்சி குறித்து டைரக்டருடன் விவாதம் நடத்துகிறார். மேலும், ஆங்கிலப் படங்களில் தான் ரசித்த காட்சிகளையும் டைரக்டர்களிடம் எடுத்துரைத்து, படத்தை பிரமாண்டப்படுத்த ஐடியா கொடுக்கிறார். அதிசயம், அதிசயம் அத்தங்காரே கொதிக்கிற குழம்பு சிரிக்கிறது!- எலீசா. சிம்ரன் வேடத்தில் அமலா பால் ! மைனா பட நாயகியான அமலா பால், அடுத்து இரண்டு முன்னணி இயக்குனர்களின் படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதில், ஒரு படத்தில் சிம்ரன் நடிக்க வேண்டிய ரோலாம். அவர் கேட்ட சம்பளம் பெருந்தொகை என்பதால், அமலா பக்கம் தாவியுள்ளனர். விஷயம் அமலாவுக்கு தெரிய வர, 'அப்படீன்னா சிம்ரன் ரேஞ்சுக்கு நானும் நடிப்பில் தேர்ச்சி அடைந்து விட்டேனா?' என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறார். இரவல் துணியாம்; இரவல் துட்டாம்; இழுத்துக் கொட்டு மேளத்தை; இறுகக் கட்டு தாலியை! — எலீசாநிஜ, 'பருத்திவீரன்' கதை படமாகிறது!மதுரை பகுதியில் வாழ்ந்த பருத்தி ஊரான் என்பவரின் கதையை, கற்பனை கலந்து, 'பருத்திவீரன்' என்று படமாக்கினார் அமீர். ஆனால், இப்போது அதே பருத்தி ஊரானின் நிஜ வாழ்க்கை, கற்பனை கலக்காமல், 'உடும்பன்' என்ற பெயரில் படமாகிறது. இதில், பருத்தி ஊரானாக பைக் ரேஸ் வீரர் திலீப் ரோஷன் நடிக்கிறார். — சினிமா பொன்னையா.தெலுங்கே கதியான தமிழ் நடிகர் ஷாம் ! தில்லாலங்கடி படத்திற்கு பிறகாவது, தமிழில் தனக்கொரு நல்ல ரீ-என்ட்ரி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ஷாம். ஆனால், அதன் பிறகும் புதிய படங்கள் ஏதும் கிடைக்கவில்லை. அதனால், தெலுங்கே கதியென்றாகிவிட்ட ஷாம், இப்போது தெலுங்கில், ஷேத்திரம் என்ற படத்தில் நடிக்கிறார். இதில், அவருக்கு ஜோடி ப்ரியாமணி. — சி.பொ.,''தெய்வ மகன்'' படத்தில் விக்ரம் ! சிறு வயதிலிருந்தே நடிகர் திலகம் சிவாஜியின் தீவிர ரசிகராம் விக்ரம். அதனால், அப்படிப்பட்ட நடிகர் திலகம் நடித்த, 'தெய்வ மகன்' டைட்டிலில் தான் நடிக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார். மேலும், தெய்வ மகனில் இடம்பெற்ற ஒரு பாடலை, ரீ-மிக்ஸ் செய்யவும் அப்படத்தை இயக்கும், 'மதராசபட்டணம்' விஜய்யிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். — சினிமா பொன்னையா. பாஸ் என்ற பாஸ்கரனுக்கு பிறகு, ஆர்யாவின் மார்க்கெட் சூடு பிடித்திருக்கிறது. இதனால், சத்தமில்லாமல் தன் படக் கூலியை உயர்த்திவிட்டுள்ள ஆர்யா, ஆக்ஷன் கதைகளில் நடித்து, தன் ஹீரோ ரேஞ்சை உயர்த்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.இதற்காக, இந்தியில் வெற்றி பெற்ற ஆக்ஷன் படங்களை, தமிழில் ரீ-மேக் செய்யவும் சில ஆக்ஷன் பட இயக்குனர்களை நாடியுள்ளார்.