உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

ஐ.நா., சபையில், ஏ.ஆர்.ரஹ்மான்!கர்நாடக இசையை, உலகம் முழுக்க பரப்பியவர்களில், குறிப்பிடத்தக்கவர், எம்.எஸ்.சுப்புலட்சுமி; இவர், ஐ.நா., சபையிலும் பாடியவர். இந்நிலையில், அவரது, 100வது பிறந்தநாள் விழா, ஆகஸ்ட் மாதம், 15ம் தேதி ஐ.நா., சபையில், கொண்டாடப்பட இருக்கிறது. இவ்விழாவில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அதில், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்களே, முழுக்க முழுக்க இடம் பெற உள்ளன.— சினிமா பொன்னையாயானைகளுடன் பழகிய கேத்ரின் தெரசா!தமிழில், மெட்ராஸ், கதகளி மற்றும் கணிதன் போன்ற படங்களில் நடித்த கேத்ரின் தெரசா, தற்போது, ஆர்யாவுடன், கடம்பன் படத்தில், காட்டுவாசிப் பெண்ணாக நடிக்கிறார். இப்படத்தில், ஒரு காட்சியில், ஐம்பது யானைகள் ஒன்று கூடி, இவரை துரத்த, அப்போது, குறுக்கே பாய்ந்து, யானைகளிடம் சண்டை போட்டு, கேத்ரினை காப்பாற்றுவார், ஆர்யா. இக்காட்சியை, தாய்லாந்து நாட்டு காடுகளில் படமாக்கிய போது, யானைகளுடன் நெருக்கமாக பழகிய கேத்ரின் தெரசா, 'யானைகள் உருவத்தில் தான் பயத்தை ஏற்படுத்துகின்றன; ஆனால், பழகிப் பார்த்தால் குழந்தைகள் மாதிரி...' என்கிறார். ஆனை மேல் ஏறுவேன்; வீர மணி கட்டுவேன்!— எலீசாகிளுகிளு நடிகையான பூனம் பாஜ்வா!ரோமியோ ஜூலியட் படத்தில், கிளுகிளு நாயகியாக நடித்த பூனம் பாஜ்வாவுக்கு, அந்த படம், கை கொடுக்காத நிலையில், தற்போது, சுந்தர்.சியுடன் நடித்துள்ள, முத்தின கத்திரிக்காய் படம், ஒர்க் அவுட்டாகியுள்ளது. அப்படத்தை பார்த்த சில இயக்குனர்கள், முதன்மை நாயகியாக இல்லாமல், கவர்ச்சி கதாபாத்திரங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால், 'கவர்ச்சி நடிகையாக்கி விட்டனரே...' என்று அதிருப்தி அடைந்தாலும், கிடைக்கிற வாய்ப்புகளை விட வேண்டாம் என்று, அந்த படங்களை ஓ.கே., செய்துள்ளார், பூனம் பாஜ்வா. வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா! — எலீசாஇணையதளத்தில் விற்பனைக்கு வந்த நடிகர்களின் காஸ்டியூம்கள்!முன்பெல்லாம், படத்தில் நடிகர்கள் அணிந்து நடித்த காஸ்டியூம்களை, அதே நடிகர்களிடமே கொடுத்து விடுவர்; இல்லையேல், வெளிநாடுகளில் விற்று விடுவர். ஆனால், தெறி படத்தில், விஜய் அணிந்த காஸ்டியூம்களை, இணையதளம் மூலம், விற்பனை செய்ததை அடுத்து, தற்போது, கபாலி படத்தில் ரஜினி, அணிந்த உடைகளையும், இணையதளம் மூலம் விற்பனை செய்ய இருக்கின்றனர். அதனால், ரஜினியின் காஸ்டியூம்களை வாங்க, ஏராளமான ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ரஜினியின் உடை எந்த, 'அதிர்ஷ்டசாலிக்கு' கிடைக்கப் போகிறது என்பது சில மாதங்களில் தெரிந்து விடும்!— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!தாரா நடிகைக்கு, தளபதியுடன் மறுபடியும் டூயட் பாட ஆசை ஏற்பட்டு, தற்போது, அவர் நடித்து வரும் படத்தில் இடம் பிடிக்க, தீவிரமாக முயற்சித்தார்; ஆனால், அதுகுறித்து மேற்படி பட இயக்குனர், தளபதியிடம் கருத்து கேட்டபோது, அவர் சிக்னல் கொடுக்கவில்லை. அதன் காரணமாகவே, வேறு நடிகையை ஒப்பந்தம் செய்தார் இயக்குனர். இந்த சேதி, தாராவின் காதுக்கு சென்றதில் இருந்து, தளபதி மீது செம கடுப்பில் உள்ளார்.இதுவரைக்கும், 'நான் இப்படித்தான் நடிப்பேன்...' என்று கோடு போட்டு நடித்து வந்த அகர்வால் நடிகை, தற்போது, கோடு தாண்டி வருகிறார். குறிப்பாக, பாலிவுட் படங்களில் நடிப்பது போன்றே, கோலிவுட் படங்களில் நடிக்க, வரிந்து கட்டி நிற்கிறார். இதனால், நடிகையை, மேலும் தோலுரித்து, ஆபாச நடிகையாக்கும் உள் குத்து வேலைகளில் இறங்கியுள்ளனர், சில இயக்குனர்கள்.சினி துளிகள்!* கவலை வேண்டாம் படத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார், காஜல் அகர்வால்.* விக்ரம் - நயன்தாரா நடிக்கும், இருமுகன் படப்பிடிப்பு, தாய்லாந்தில் நடைபெறுகிறது.* பாகுபலி படம் போன்று, மெகா பட்ஜெட்டில், ஒரு சரித்திர படத்தை இயக்குகிறார், சுந்தர்.சி.* கொளஞ்சி படத்தில், சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்துள்ளார், மாஜி கதாநாயகி சங்கவி.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !