உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

* அஜீத்தை டென்ஷனாக்கிய ரசிகர் மன்ற நிர்வாகிகள்!அஜீத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ரசிகர் மன்றத்தின் அறிவுரையை மீறி, சுய விளம்பரத்துக்காக சில நிர்வாகிகள், ஒரு சில கூட்டம் நடத்துவதற்காக, ஆதரவு கேட்டு, சக உறுப்பினர்களிடையே விஷமப் பிரசாரம் செய்து வருகின்றனர். இச்செய்தி, அஜீத்தின் காதுகளுக்கு செல்ல டென்ஷனாகி விட்டார். 'என் கட்டளையை மீறி செயல்பட்டால், என் பொறுப்பில் இயங்கும் நற்பணி இயக்கத்தையே கலைக்கவும் தயங்க மாட்டேன்...' என்று, சூடான அறிக்கை விட்டுள்ளார். — சினிமா பொன்னையா.* நயனுக்கு பாராட்டு!எலக்ட்ரா மலையாளப் படத்தில் நடித்துள்ள நயன்தாரா, உற்சாகத்தில் இருக்கிறார். காரணம், கோவா சர்வதேச பட விழாவில் திரையிடப்பட்ட அப்படத்தில், நயனின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து விட்டன. விளைவு, மலையாள சினிமாவின் பிரதான இயக்குனர்கள் சிலர், நயனுக்கு வாய்ப்பு கொடுக்க முன் வந்துள்ளனர். இதனால், சென்னைக்கும், ஐதராபாத்துக்கும் பறப்பதை நிறுத்திவிட்டு, கேரளத்திலேயே டேரா போட்டுள்ளார். தண்ணீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்! — எலீசா.* திருநங்கைகளின் ரகசிய மொழி!கல்கி என்ற திருநங்கை, நாயகியாக நடிக்கும் படம் நர்த்தகி. இவர், எம்.ஏ., மாஸ் கம்யூனிகேஷன் பட்டம் பெற்றவர். இப்படத்தில், திருநங்கைகள் மட்டுமே பேசும் ரகசிய மொழியான, 'கவுடி' மொழியில் அவ்வப்போது சில வசனங்களையும் கலந்து பேசி நடித்துள்ளார். இந்த கவுடி மொழி, தமிழ் - இந்தி இரண்டும் கலந்த கலவை.— சி.பொ.,* இந்திக்கு செல்லும் அமலா பால்!அசின், த்ரிஷா, ப்ரியாமணி உள்பட பல கோலிவுட் நடிகைகள் பாலிவுட்டுக்கு ஏற்றுமதியானதைத் தொடர்ந்து, அடுத்து, மைனா படத்தில் நடித்த அமலா பாலும் இந்திக்குச் செல்கிறார். விரைவில், மைனாவை இந்தியில் ரீ-மேக் செய்யும் அப்பட இயக்குனர் பிரபு சாலமன், அமலாவே அந்த ரோலுக்கு சிறப்பாக இருப்பார் என்பதால், இந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்துள்ளார். அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது. - எலீசா.* அரை டஜன் படங்களில் தமன்னா!தெலுங்கில் கமிட் ஆன மூன்று படங்களையும் முடித்து விட்டார் தமன்னா. அடுத்தபடியாக, புதிய படங்கள் கமிட் ஆகாததால், தமிழில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். தற்போது, சிறுத்தையை முடித்துவிட்டு, பின், வேங்கையில் நடித்து வருபவர், பல டைரக்டர்களிடம் கதை கேட்டுள்ளார். இதில், அரை டஜன் படங்கள் ஓ.கே., செய்து, அடுத்த ஆண்டு தமிழில் பிசியாகப் போகிறார். நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும்.— எலீசா.* தனுஷ் ஆலோசனை!உத்தமபுத்திரன் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால், கவலை அடைந்துள்ளார் தனுஷ். இந்த தோல்வியை தொடர விடக் கூடாது என்பதற்காக, அடுத்து, தன் நடிப்பில் வெளிவர இருக்கும் ஆடுகளம், மாப்பிள்ளை ஆகிய படங்களுக்கு பெரிய அளவில் பப்ளிசிட்டி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து, சமீபத்தில் தன் ரசிகர் மன்றத்தை கூட்டி, ஆலோசனையும் நடத்தியுள்ளார். — சி.பொ.,* சினிமா நட்சத்திர கிரிக்கெட் போட்டி!இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழி சினிமா நட்சத்திரங்களுக்கிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. ஜனவரி 22ம் தேதி துவங்கும் இந்தப் போட்டி, ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் நடக்கிறது. 'சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள தமிழக அணியில், நடிகர்கள் அப்பாஸ், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, ஜெய், ரமணா, ஷாம், விக்ராந்த், அம்சவிர்தன், ஜீவா, கார்த்தி, ஆர்யா, மாதவன், சாந்தனு உட்பட பலர் இடம்பெறுகின்றனர். - சினிமா பொன்னையா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !