உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

மெல்போர்ன் திரைப்பட விழாவில் தேசிய விருது பெற்ற, ஜோக்கர்!ராஜூ முருகன் இயக்கிய படம், ஜோக்கர்; தேசிய விருது பெற்ற இப்படம், ஆகஸ்ட், 10லிருந்து, 22ம் தேதி வரை ஆஸ்திரேலியாவின், மெல்போர்ன் நகரில் நடக்கும், இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. மேலும், எம்.எஸ்.தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி, சுல்தான், ஏ தில் ஹை மற்றும் பிங்க் போன்ற இந்தி படங்களும், இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.— சி.பொ., கவர்ச்சி கோதாவில் கீர்த்திசுரேஷ்!தமிழில், விஜயுடன் நடித்த, பைரவா படம் தன்னை உச்ச நடிகையாக்கும் என்று, எதிர்பார்த்த கீர்த்தி சுரேஷ்க்கு அப்படம் தோல்வியடைந்து விட்டதால், தற்போது, தெலுங்கு சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். அத்துடன், அங்குள்ள ராகுல் பிரீத் சிங் உட்பட, சில நடிகைகள் கவர்ச்சியை முன் வைத்தே மார்க்கெட்டில் நிற்பதால், தமிழில் அடக்கி வாசிக்கும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக நடித்து, மார்க்கெட்டை பிடிக்க கோதாவில் இறங்கியிருக்கிறார். எண்ணினேன் ஒரு கோடி; இழப்பது அறியாமல்!— எலீசாகாஜல் அகர்வாலுக்கு அறுவை சிகிச்சை!காஜல் அகர்வால் சினிமாவில் நடிக்க வந்து, பத்தாண்டுகளாகி விட்டது. தற்போது, 32 வயதாகும் அவரது முகத்திலும், உடம்பிலும் லைட்டாக முதிர்ச்சி தென்பட துவங்கியிருக்கிறது. ஆனால், சினிமாவில் இன்னும் நீண்ட காலம் பயணிக்க விரும்பும் காஜல்அகர்வால், முதிர்ச்சியை காரணம் காட்டி, தன்னை ஓரங்கட்டி விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, சமீபத்தில், லண்டன் சென்றவர், அங்குள்ள ஒரு மருத்துவமனையில், தோலை இளமையாக வைத்திருக்கும் அதிநவீன அறுவை சிகிச்சை ஒன்றை செய்து வந்திருக்கிறார். இன்னும் இருக்கிறது, தேருக்குள் சிங்காரம்!— எலீசாதிரைப்படமாகிறது என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு!டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் இயக்குனர், ராம்கோபால் வர்மா, கடைசியாக, இந்தியில், அமிதாப்பச்சனை வைத்து, சர்க்கார் - 3 என்ற படத்தை இயக்கினார். அதையடுத்து, மறைந்த நடிகர், என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்குகிறார். அப்படத்தில், என்.டி.ஆரின் மகன், பாலகிருஷ்ணா, கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகும் இப்படத்திற்காக, என்.டி.ஆர்., காலத்தில் நடந்த, சில சுவாரஸ்ய தகவல்களை, சீனியர் சினிமா கலைஞர்களிடமிருந்து சேகரித்து வருகிறார், ராம்கோபால் வர்மா.— சி.பொ.,பிரதமர் மோடியின் வாழ்க்கை கதையில் அக் ஷய் குமார்!ரஜினியுடன், 2.0 படத்தில், வில்லனாக நடித்து வருபவர் இந்தி நடிகர், அக் ஷய்குமார். இவர், பிரதமர் நரேந்திர மோடியின், 'தூய்மை இந்தியா' திட்டத்தை, ஆதரிக்கும் வகையில், தற்போது, இந்தியில், டாய்லெட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில், ஒரு படம் உருவாகிறது; அப்படத்தில், பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கயிருக்கிறார், அக் ஷய்குமார்.— சி.பொ.,கறுப்பு பூனை!சுள்ளான் நடிகரை பிரிந்து விட்ட பால் நடிகையின் கூடாரத்தில், தற்போது, வளர்ந்து வரும் நடிகர்கள் பலர் வளைய வருகின்றனர். அப்படி, தன்னை தேடி வரும் அனைவரையுமே, அரவணைத்து செல்லும் நடிகை, தனக்கு பட வாய்ப்பு பெற்று கொடுக்கும் நபர்களுக்கு, 'மெகா' பார்ட்டி கொடுத்தும் அசத்துகிறார். இதனால், அம்மணி நடத்தும் விருந்து உபசரிப்பில் கலந்து கொள்வதற்காகவே, நடிகைக்காக, தீவிர படவேட்டை நடத்துகின்றனர், சில நடிகர்கள்.புயல் காமெடியன், மீண்டும் தளபதியுடன் நடித்து வருகிறார். ஆனால், அவரது காமெடி முன் மாதிரி, 'ஒர்க் அவுட்'டாகவில்லை. அதனால், லேட்டஸ்ட் காமெடியன்கள் இரண்டு பேரை படத்தில் இணைக்குமாறு இயக்குனருக்கு, உத்தரவு போட்டுள்ளார், தளபதி நடிகர். இதன் காரணமாக, வைகை புயலின் காமெடி ட்ராக் குறைக்கப் பட்டுள்ளது.சினி துளிகள்!* அமலாபால் நடித்த, திருட்டுப்பயலே இரண்டாம் பாகம், ரிலீசுக்கு தயாராகி விட்டது.* அனேகன் படத்தை தொடர்ந்து, தானா சேர்ந்த கூட்டம் படத்திலும், வில்லனாக நடிக்கிறார், நடிகர் கார்த்திக்.* வடிவேலு நடித்த, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின், இரண்டாம் பாகம் விரைவில் துவங்குகிறது.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !