உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா, தற்போது, தமிழ், தெலுங்கில் உருவாகும், மடை திறந்து என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கதையில் உருவாகும் இப்படத்தில், சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் நடிக்கிறார், ராணா. இதற்காக தன், 'கெட்டப்'பை முழுமையாக மாற்றியுள்ளார்.— சினிமா பொன்னையா.கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!சரியான கதாநாயகி வாய்ப்புகள் இல்லாததால், சவரக்கத்தி படத்தில், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ள பூர்ணா, கொடி வீரன் படத்தில் இரண்டே இரண்டு காட்சிகளுக்காக மொட்டையடித்து நடித்தார். இதுபோன்று, தன்னை பேச வைக்கும் கதாபாத்திரங்களாக இருக்கும்பட்சத்தில் உடல் ரீதியாகவும் தன்னை தயார்படுத்தி நடிக்கப் போவதாக சொல்கிறார். கைக் குருவியை கொண்டுதான் காட்டுக் குருவியைப் பிடிக்க வேணும்!— எலீசாஇயக்குனராகும் மதுபாலா!மணிரத்னம் இயக்கிய, ரோஜா படத்தில், நாயகியாக நடித்தவர் மதுபாலா. அதன்பின், ஜென்டில்மேன் உட்பட பல படங்களில் நடித்த அவர், திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், விரைவில் தான் இயக்குனராகப் போவதாகவும், அவ்வாறு இயக்கும் படம் குடும்ப பின்னணி கொண்ட கதையாக இருக்கும் என்றும் கூறுகிறார். எல்லாரும் கப்பல் ஏறி ஆயிற்று; இனி, அம்மனார் பொற்பட்டம் கட்டப் போறார்!— எலீசாநடிகரானார் கவுதம் மேனன்!தன், கடுகு படத்தில், இயக்குனர், ராஜகுமாரனை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்த இயக்குனர், விஜய்மில்டன், தற்போது, கோலிசோடா-2 படத்தில், இயக்குனர் கவுதம் மேனனையும் முக்கிய வேடத்தில் நடிக்க வைத்துள்ளார். கதாபாத்திரம் யதார்த்தமாகவும், இயல்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நடிகர்களை அணுகாமல், இப்படி இயக்குனர்களை நடிக்க வைப்பதாக கூறுகிறார், விஜய்மில்டன்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!நடன சூறாவளி, தாரா நடிகையை கழட்டி விட்டபோது, 'பிக்கப்' நடிகர் தான், அவருக்கு ஆறுதலாக இருந்தார். ஆனால், மூன்றாவது காதலருடன் அடைக்கலமான பின், மேற்படி நடிகரை கண்டுகொள்வதே இல்லை. இதனால், நடிகையை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக, அவருடன் தான் ஒரு நேரத்தில் லுாட்டி அடித்த அந்த, 'சீக்ரெட்' விஷயங்களை, கோலிவுட் நண்பர்களிடம், 'அவுட்' செய்து, நடிகைக்கு டென்ஷனை ஏற்படுத்தி வருகிறார், 'பிக்கப்' நடிகர்.கேரளத்து பால் நடிகை, விவாகரத்துக்குப் பின் பிசியாகி விட்டார். அதனால், தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் அவருக்கு, அடுத்தப்படியாக பாலிவுட்டிலும் கொடிநாட்டும் ஆசை தலை துாக்கியுள்ளது. அதன் காரணமாக, சுள்ளான் நடிகருக்கு பரிட்சயமான சில பாலிவுட் இயக்குனர்களை கைப்பற்றும் முயற்சியாக, அடிக்கடி மும்பைக்கு பறக்கிறார், நடிகை.சினி துளிகள்!* பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில், ஐந்து வயது மகளுக்கு அம்மாவாக நடித்துள்ளார், அமலாபால்.* பூ மற்றும் மரியான் படங்களில் நடித்துள்ள பார்வதிமேனன், நிமிர் படத்தில் உதயநிதியுடன் நடித்துள்ளார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !