உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

விஜய்க்கு கிடைத்த சர்வதேச விருது!உலக அளவில், திரைத் துறையில் சாதித்தவர்களுக்கு, 'இன்டர்நேஷனல் அச்சீவ்மென்ட் ரெககனைஷன் அவார்டு' எனப்படும், ஐ.ஏ.ஆர்.ஏ., சர்வதேச விருது வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழ் சினிமாவில் இருந்து, நடிகர் விஜய் மற்றும் ஹாலிவுட் நடிகர்களான ஜான் போயிகா, டேனியல் கலுாயா, ஜாமி லோமஸ் மற்றும் கிரிஸ் அட்டோ ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம், 'ஆன் - லைனில்' நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில், மெர்சல் படத்தில் நடித்த விஜய்க்கு, கூடுதல் ஓட்டு கிடைத்தது. அதையடுத்து, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், லண்டனில் நடந்த விழாவில், விஜய்க்கு, ஐ.ஏ.ஆர்.ஏ., விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது, விஜய்க்கு, 'சர்வதேச அங்கீகாரம் பெற்ற நடிகர்...' என்ற பெருமையை கொடுத்திருக்கிறது.- சினிமா பொன்னையாசீதையாகும், கீர்த்தி சுரேஷ்!தெலுங்கில் வெளியான, ஸ்ரீ ராமராஜ்ஜியம் என்ற படத்தில், சீதையாக நடித்தார், நயன்தாரா. அவரைத் தொடர்ந்து இப்போது, பாகுபலி இயக்குனர், ராஜமவுலி இயக்கும், ராம ராவண ராஜ்ஜியம் என்ற படத்தில், சீதை வேடத்தில் நடிக்கிறார், கீர்த்தி சுரேஷ். மகாநதி படத்தில் நடிகை சாவித்திரி வேடத்தில் நடித்த, கீர்த்தி சுரேஷ், சீதை வேடத்தில் அற்புதமாக நடித்து பல அவார்டுகளை அள்ளிவிட வேண்டும் என்று, அந்த வேடத்திற்காக தன்னை முழுமையாக தயார்படுத்தி வருகிறார். இருக்கிற அளவோடு இருந்தால் எல்லாம் தேடி வரும்!— எலீசாமொட்டை தந்த அதிர்ஷ்டம்!சசிகுமாரின், கொடிவீரன் படத்தில் வில்லியாக நடித்த பூர்ணா, நிஜமாகவே ஒரு காட்சியில் மொட்டையடித்து நடித்தார். அதையடுத்து, 'தலை முடியெல்லாம் போய் விட்டதே. இனிமேல் யார், பட வாய்ப்பு தருவர்...' என்று வருத்தப்பட்டு வந்தார். ஆனால், அவர், 'பாய்கட் ஹேர்ஸ்டைல்' வைத்திருந்ததைப் பார்த்து, இரண்டு, மூன்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால், 'மொட்டை போட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கு. அந்த படத்தில் மொட்டை போட்டு நடித்த போது, சாமிக்கு மொட்டை போடுவது போன்று மனதளவில் நினைத்துக் கொண்டேன். அதற்கு பிரதிபலனாக, சாமியே பட வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்து விட்டது...' என்கிறார். காற்றுக்குத் தகுந்தாற்போல், பாயை மாற்றிக் கட்டு!— எலீசாயோகிபாபுவுடன் இணைந்த, முரட்டுக்குத்து நடிகை!காமெடியனாக இருந்த, சந்தானம் ஹீரோவான போது, அவருடன், 'டூயட்' பாட நடிகையர் தயங்கினர். அதனால் தான், வேற்றுமொழி நடிகையரை, தன் படங்களில் நடிக்க வைத்து வருகிறார். ஆனால், அவருக்குப்பின், தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபுவுடன், முன்னேறி வரும் இளவட்ட நாயகியர், நடிக்க போட்டி போடுகின்றனர். அந்த வகையில், தர்ம பிரபு படத்தை அடுத்து, கதையின் நாயகனாக யோகிபாபு நடிக்கும், ஜாம்பி படத்தில், அவருடன், இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த், ஜோடி சேர்ந்திருக்கிறார். ஆக, யோகிபாபுவிற்கு வந்த வாழ்வைப் பார்த்து, கோலிவுட் காமெடியன்கள் வயிற்றெரிச்சலில் இருக்கின்றனர்.— சினிமா பொன்னையாகறுப்புப் பூனை!* கயல் நடிகை, முன்வரிசை நடிகையாக முண்டியடித்து எடுத்த முயற்சிகள் எதுவும், 'ஒர்க் - அவுட்' ஆகவில்லை. அதனால், மூன்றாம் தட்டு நாயகி பட்டியலிலேயே இருக்கும் அவர், 'தல, தளபதி நடிகர்களுடன் கனவில், 'டூயட்' பாடிய போதிலும், அது, நனவாகாது போலிருக்கே...' என்று, வருத்தப்பட்டு வருகிறார். ஆன போதும், 'அவர்களின் படங்களில், ஒரு கேரக்டரில் நடித்தாவது, என் ஆசையை தீர்த்துக் கொள்ளப் போகிறேன்...' என, தல, தளபதி நடிகர்களை வைத்து படம் இயக்குபவர்களை நாடிச் சென்று, கோரிக்கை வைக்கிறார், நடிகை.'நினைச்சதை அடையணும்ன்னா, உன் தோழி ஆனந்தி மாதிரி, முண்டியடித்து, பல வழிகளிலும் முயன்று பார்க்கணும். அப்பத்தான் லட்சியத்தை அடைய முடியும்...' என்றார், அப்பா.* பிரேமம் நடிகை, சம்பள விஷயத்தில் ரொம்பவே கறார் பேர்வழியாக இருக்கிறார். 'அட்வான்ஸ்' கொடுக்கும்போதே பாதி சம்பளம், முக்கால்வாசி படத்தில் நடித்ததும், முழு சம்பளமும் வந்தாக வேண்டும் என்கிறார். தயாரிப்பாளர்கள் தாமதம் செய்தால் தலைவலி, வயிற்று வலி என்று, 'ஷூட்டிங்'கிற்கு விடுமுறை போட்டு விடுகிறார். நடிகையின் இந்த நீக்குபோக்கைப் பார்த்து, சீனியர் நடிகையரே தோற்று விட்டதாக சொல்கின்றனர்.'ஏம்மா பல்லவி... நேத்து ஏன் ஸ்கூலுக்கு வரல்ல...''ஜுரம் மிஸ்...''இந்த சாக்கு போக்குதானே வேணாங்கிறது... 'ேஹாம் ஒர்க்' செய்யலன்னு உண்மையை சொல்ல வேண்டியது தானே...' என்றார், ஆசிரியை. சினி துளிகள்!* 'என்.ஜி.கே., படத்தில் நான் நடித்துள்ள மைதிலி கேரக்டர், தமிழ் ரசிகர்கள் மனதில் எனக்கு அழுத்தமான இடத்தை பிடித்துக் கொடுக்கும்...' என்கிறார், சாய் பல்லவி.* சர்வம் தாளமயம் படத்தில், மிருதங்க கலைஞராக நடித்துள்ளார், ஜி.வி.பிரகாஷ்.* 'நான், 'டயட்ஸ்' கடைப்பிடிக்காமல், 'ஜிம்' பக்கமே செல்லவில்லை என்றாலும், என் உடம்பு, 'வெயிட்' போடாது...' என்கிறார், அமலாபால்.* பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து, டைட்டானிக் என்ற படத்தில் நடித்து வருகிறார், கயல் ஆனந்தி.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !