உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

வீரப்பன் கதை மீண்டும் படமாகிறது!ஏற்கனவே, சந்தன கடத்தல் வீரப்பனின் கதையை, பல இயக்குனர்கள் துருவி, துருவி படமாக்கி விட்டனர். இந்நிலையில், காதலர் குடியிருப்பு படத்தை இயக்கிய ரமேஷ், மீண்டும் வீரப்பன் கதையை, வனயுத்தம் என்ற பெயரில் படமாக்குகிறார். இதில், இதுவரை வீரப்பனைப் பற்றி வெளிவராத பல புதிய தகவல்கள் இடம்பெறும் என்கிறார். — சினிமா பொன்னையா.மீண்டும் பின்னணி பாடிய தனுஷ்!அண்ணன் செல்வராகவன் இயக்கிய, ஆயிரத்தில் ஒருவன் படத்தில், ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில், 'உம் மேல ஆசை...' தான் என்ற பாடலை பாடினார் தனுஷ். அதன்பிறகு, இப்போது, தான் நடிக்கும், இரண்டாம் உலகம் படத்திலும், ஒரு பாடல் பாடுகிறார். இப்பாடலும், முந்தைய பாடல் போன்று, 'ஹிட்' ஆக வேண்டும் என்பதற்காக, மொத்த டியூன்களையும் கேட்டு, தனக்கு பிடித்த டியூனை வாங்கி, பின்னணி பாடியுள்ளார்.— சி.பொ.,மும்பையில் குடியேறும் பிரபுதேவா - நயன்!பிரபுதேவா, இந்திப் படம் இயக்குவது சம்பந்தமாக மும்பை செல்லும் போது, தானும் உடன் சென்று வந்த நயன்தாரா, அங்குள்ள வி.ஐ.பி., ஏரியாவில், பங்களா டைப் வீடு ஒன்று வாங்கியிருக்கிறார். விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதால், அதன் பிறகு, பிரபுதேவா - நயன்தாரா இருவரும் அந்த மும்பை வீட்டில்தான் குடியேற உள்ளனர்.— எலீசா.விஷாலுடன் இணையும் பூபதி பாண்டியன்!காதல் சொல்ல வந்தேன் படத்தை இயக்கிய பூபதி பாண்டியன், அதன்பிறகு விக்ரமை வைத்து, வெடி என்ற படத்தை இயக்க இருந்தார்; ஆனால், சில காரணங்களால் அப்படம், 'ட்ராப்' ஆகி விட்டது. அதனால், இப்போது விஷாலுக்காக, பட்டத்து யானை என்ற கதையை ரெடி பண்ணிக் கொண்டிருக்கும் பூபதி பாண்டியன், 'இப்படம், நானும், விஷாலும் ஏற்கனவே இணைந்த மலைக்கோட்டையை விட, பவர்புல்லான கதை...' என்கிறார்.— சி.பொ.,கொள்கையை மாற்றிய அஞ்சலி!இதுவரை, 'பணத்துக்கு முதலிடம் கொடுக்க மாட்டேன்; என் திறமைக்கு தீனி போடும் கதைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன்...' என்று கூறி வந்தார் அஞ்சலி. ஆனால், இப்போது, அந்த கொள்கையிலிருந்து அதிரடியாக மாறிவிட்ட அவர், அதிகமான படக்கூலி கிடைக்கிறதென்றால் கதையை கூட கேட்பதில்லை. கண்ணை மூடிக் கொண்டு, 'கால்ஷீட்' கொடுக்கிறார். ஆடப் போன கங்கை அண்டையில் வந்தாற் போல!— எலீசா.வட மாநிலங்களில் ஜீவா படம்!ஜீவா நடிப்பில் வெளியாகியுள்ள, சிங்கம் புலி படம், மும்பை, பூனா, ஒடிசா உட்பட பல இடங்களில், 50 தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. ஜீவா நடித்த படங்களிலேயே, வடக்கே அதிகமான தியேட்டர்களில் வெளியான படம் இதுதான். — சி.பொ.'ரீமா'வான ரீமா சென்!ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு பிறகு, பட வாய்ப்பு இல்லாமலிருக்கிறார் ரீமா சென். என்றாலும், மீண்டும் தமிழ் சினிமாவை குறிவைத்து வரும் அவர், தன் பெயரில் இருந்து, 'சென்'னை நீக்கி விட்டு, வெறும், ரீமா என்று மட்டுமே வைத்திருக்கிறார். காரணம் கேட்டால், 'ரீமா என்று வைத்தால், இன்னொரு ரவுண்டு வர வாய்ப்புள்ளது என்று குடும்ப ஜோதிடர், 'அட்வைஸ்' செய்தார். அதன்பிறகு, ஏற்பட்டதுதான் இந்த பெயர் மாற்றம்...' என்கிறார். பேர் பெத்த பேர், தாக நீரு லேது!— எலீசா.வதந்தி பற்றி கவலைப்படாத த்ரிஷா!சமீப காலமாக த்ரிஷாவைப் பற்றி, நிச்சயதார்த்தம் நடந்து விட்டது; திருமணம் நடந்து விட்டது என்றெல்லாம் வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், இதற்கு சிறதும் கவலைப்படாத த்ரிஷா, 'தமிழில் அஜீத்துடன் நடித்து வரும், மங்காத்தா, தெலுங்கில் பவன் கல்யாணுடன் நடிக்கும் தீன்மார் படங்கள் வெற்றி பெற்றால், இதுபோன்ற வதந்திகள் தானாக அடங்கி விடும். என்னைப் பற்றி வதந்திகள் பரவுவது புதிதா என்ன?' என்று கேஷûவலாக பேசுகிறார். தலைக்கு மேல் வெள்ளம் போயாச்சு; ஜாண் போனால் என்ன, முழம் போனால் என்ன?— எலீசா.போட்டிக் களத்தில் அப்பா நடிகர்கள்!தற்போது, அம்மா நடிகைகளில் சரண்யாவை விட்டால் ஆளில்லை; ஆனால், அப்பா நடிகர்கள் அதிகரித்து விட்டனர். பிரபு, கே.பாக்யராஜ், நாசர், பொன்வண்ணன், இளவரசு என்று பலரும் போட்டிக் களத்தில் உள்ளனர். இதில், அதிக படங்களில் நடிக்கும் முன்னணி அப்பா நடிகர் இடத்தை, தொடர்ந்து தக்க வைத்து வருகிறார் பிரபு.— சி.பொ.,கோ படத்திற்கு பிறகு, கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள மாற்றான் படத்தை, அதிரடியாக கைப்பற்றியிருக்கிறார் டாப்ஸி. இதனால், அப்படத்தில் இடம்பெற திரைக்குப் பின்னால் வரிந்து கட்டி அலைந்த, அனுஷ்கா, தமன்னா, ஹன்சிகா ஆகியோர் பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ராணுவ வீரர்களாக கமல் - ராஜ்கிரண்!செல்வராகவன் இயக்கும் படத்தில், ராணுவ வீரராக நடிக்கிறார் கமல். இதற்காக, தற்போது கடும் உடற்பயிற்சி, டயட் மூலம் உடம்பை, 'ட்ரிம்' ஆக்கி வருகிறார். இதேபோல், நடிகர் ராஜ்கிரணும், பேரரசு இயக்கும், திருத்தணி படத்தில், ராணுவ வீரர் ராஜபாண்டி என்ற வேடத்தில் நடிக்கிறார்.— சினிமா பொன்னையா.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !