உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

அரசியல்வாதியாக மாறும்,சன்னி லியோன்!பாலிவுட் சினிமாவை கலக்கிய, சன்னி லியோன், தற்போது, தமிழில் வடிவுடையான் இயக்கும், வீரமா தேவி சரித்திர படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அடுத்து, மீண்டும் அதே இயக்கத்தில், டில்லி என்ற படத்திலும், நாயகியாக நடிக்கிறார். அரசியல் கதையில் உருவாகும் இந்த படத்தில், அதிரடியான நடிப்பை கொடுக்க உள்ளார். அதற்காக, தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள பெண் அரசியல்வாதிகளின் வாழ்கை வரலாறை படித்து, அவர்களின், 'மேனரிசத்தை' மனதில் நிறுத்தி, தன்னை முழு அரசியல்வாதியாக தயார்படுத்தி வருகிறார். கூத்துக்கு ஏற்ற கொட்டுக் கொட்டுகிறது!— சினிமா பொன்னையாகூச்சமில்லாமல் பதில் சொன்ன, யாஷிகா ஆனந்த்!ரசிகர்களுடன் அடிக்கடி, 'சாட்டிங்' செய்து வருபவர், இருட்டு அறையில் முரட்டுக்குத்து பட நாயகி, யாஷிகா ஆனந்த். ரசிகர்கள் எந்த மாதிரியான குண்டக்க மண்டக்க கேள்விகள் கேட்டாலும், கூச்சமில்லாமல் பதில் கொடுக்கிறார். அந்த வகையில், சமீபத்தில் ஒரு ரசிகர், 'உங்களது தொப்புளில் எப்போது வளையம் போட்டீர்கள்...' என்று கேட்டிருந்தார். 'பத்தாவது படிக்கும்போதே அந்த வளையத்தை மாட்டிட்டேன். அதுக்கு அப்புறம்தான் நான் வளைஞ்சு நெளிஞ்சு அழகாயிட்டேன்...' என்று கூறியுள்ளார். பேச்சுக் கொடுத்து, பேச்சை வாங்குற கதை!— எலீசா'சீரியல்' நடிகையான, நதியா!பூவே பூச்சூடவா படம் மூலம், 1985ல், தமிழுக்கு வந்தவர், நதியா. குறுகிய காலத்தில் சினிமாவில் பிரபலமானார். அதையடுத்து, அவரது பெயரில் வளையல், புடவை, செருப்பு என, பல பொருட்கள், விற்பனைக்கு வந்தன. திருமணத்திற்கு பின், ஜெயம்ரவியுடன் நடித்த, எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி படத்தில், 'ரீ-என்ட்ரி' கொடுத்த, நதியா, குணசித்திர நடிகையாக வலம் வருவதோடு, தற்போது, ரோஜா என்ற, தொடர் மூலம் சின்னத்திரையிலும் நடிக்கிறார். நதியாவின் புகழை கருத்தில் வைத்து, இந்த தொடரில் நடிக்க, சினிமா கதாநாயகி அளவுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். காத்து கிடப்பதை விட, இரண்டு சால் கஞ்சி குடிக்கலாம்!— எலீசா'வெல்டன்' யோகிபாபு!சிம்பு உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள், தங்கள், 'கட்-அவுட்'களுக்கு, அண்டா அண்டாவாக பாலாபிஷேகம் செய்யுமாறு ரசிகர்களை கேட்டு வருகின்றனர். ஆனால், யோகிபாபுவோ, தான் முக்கிய வேடத்தில் நடித்த, பட்டிபுலம் என்ற படம், சென்னையிலுள்ள ரோகினி தியேட்டரில் வெளியான போது, அங்கு வைக்கப்பட்டிருந்த தன், 'கட்-அவுட்'களுக்கு சில ரசிகர்கள், பாலாபிஷேகம் செய்ததை தடுத்து நிறுத்தினார். அதோடு, 'இந்த பாலை வீணடிக்காமல், ஏழை குழந்தைகளுக்கு கொடுத்தால், ஒரு நேரம் பசியாவது ஆறுமே...' என்று அவர்களுக்கு புத்திமதி கூறி, 'கட்-அவுட்'டுக்கு பாலாபிஷேகம் செய்வதை, தடுத்து நிறுத்தி இருக்கிறார்.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!* சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும், உலக நடிகரின் மகள், தந்தையின் கட்சியில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தார். ஆனால், உலக நடிகரோ, 'நானே நடிகன், என் கட்சியில், மேலும் நடிகர் - நடிகையரை சேர்த்தால், நட்சத்திர கூட்டம் என்று மற்ற கட்சியினர் கிண்டல் செய்வர். அதனால், இப்போதைக்கு அந்த மாதிரி, 'ரிஸ்க்' எடுக்க நான் தயாராக இல்லை...' என்று, மகளின் ஆசைக்கு, முட்டுக்கட்டை போட்டு விட்டார்.'கொஞ்சம் பொறுத்துக்கோ சுருதி அக்கா... நானே, அலையில் தத்தளிக்கும் படகு போல், கடன் தொல்லையால் அவதிப்பட்டுட்டு இருக்கேன். இப்ப வந்து, வீடு கட்ட கடன் கேட்கிறியே...' என்று தன் அக்காவிடம் அலுத்துக் கொண்டார், பாசக்கார அண்ணன்.* உடல் பெருத்துப்போன ருத்ரம்மா தேவி நடிகை, மாதக்கணக்கில், 'ஜிம்'மில் மல்லுக்கு நின்றும், அவரது உடம்பு இளைக்கவில்லை. ஆன போதும், 'கிராபிக்சில்' தன்னை, 'ஸ்லிம்' ஆக்கி படம் வெளியிட்டு, இயக்குனர்களை தன் பக்கம் இழுத்தார். அதையடுத்து, அவரை நேரில் பார்த்தவர்கள், பழையபடி, அப்படியே இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, 'இந்த ஏமாற்று வேலையெல்லாம் எங்ககிட்ட வேண்டாம்...' என்று, நடிகையை மீண்டும் கதாநாயகியாக்க மறுத்து விட்டனர். அதனால், இப்போது வேறு வழியில்லாமல், குணசித்திர வேடத்தில் நடிக்க, வழியை மாற்றியுள்ளார், நடிகை.'கேட்டியாடி இந்த சமாசாரத்தை... தெருக்கோடி வீட்டில் குடியிருக்கிறாளே, அனுஷ்கான்னு ஒரு குண்டம்மா... அவ, உடம்பை குறைக்கிறேன்னு சொல்லி, தெரு அதிர, 'வாக்கிங்' போயும், மொட்டை மாடியில், 'ஸ்கிப்பிங்' ஆடி பார்த்தும், ஒண்ணும் வேலைக்காகல... இவ அலம்பல தாங்க முடியாம, அவ புருஷன் ஓடிட்டானாம்...' என்றாள், பக்கத்து வீட்டு அம்மா.சினி துளிகள்!* சினிமாவில் பாடும் வாய்ப்புகள் குறைந்த போதும், பின்னணி பாடுவது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவதில், அதிக ஆர்வம் காட்டி வருகிறார், ஸ்ருதிஹாசன்.* ரெண்டு படத்தில், மாதவனுடன் நடித்து, 2006ல் தமிழுக்கு வந்த, அனுஷ்கா, 13 ஆண்டுகள் கழித்து மீண்டும், சைலன்ஸ் என்ற படத்தில், தற்போது மாதவனுடன் நடிக்கிறார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !