இதப்படிங்க முதல்ல...
விழிப்புணர்வு பிரசாரத்தில், ஜி.வி.பிரகாஷ்!நடிகர் என்பதை தாண்டி, சமூகம் சார்ந்த போராட்டங்களிலும், மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருபவர் நடிகர், ஜி.வி.பிரகாஷ். இவர் நடித்து வெளியான, வாட்ச்மேன் படத்தின் தயாரிப்பாளர், பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த உதவும் வகையில், 50 'சி சி டிவி' கேமராக்களை பரிசாக வழங்கி, பொள்ளாச்சியின் முக்கிய பகுதிகளில் பொருத்தியுள்ளார். அதையடுத்து, ஜி.வி.பிரகாஷும், அங்குள்ள பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளார்.— சினிமா பொன்னையாசாய் பல்லவி, 'கெத்'தான பேச்சு!தனுஷுடன், மாரி - 2 படத்தில் நடித்த பின், பக்கா, 'கமர்ஷியல்' நடிகையாகி விட்டார், சாய் பல்லவி. அதனால், அடுத்தபடியாக அவர் மேல்தட்டு நடிகர்களுடன், 'டூயட்' பாடும் வாய்ப்புகளை எதிர்பார்க்கத் துவங்கியிருக்கிறார். அதேசமயம், 'வாய்ப்புகளுக்காக, எப்போதும் யாரையும் தேடிச் சென்றதில்லை; திறமைக்கு வாய்ப்பு கொடுக்க நினைப்பவர்கள் என்னைத் தேடி வருவர். அப்பயே வராவிட்டாலும், நான் மருத்துவ தொழில் செய்ய போய் விடுவேன்...' என்று, 'கெத்'தாக கூறி வருகிறார்.— எலீசாசிவகார்த்திகேயனின் நாயகி பட்டியல்!தன்னிடம், எந்த இயக்குனர்கள் கதை சொல்ல வந்தாலும், கதையை கேட்டு முடித்ததும், 'கதாநாயகியாக யாரை ஒப்பந்தம் செய்யப் போகிறீர்கள்?' என்று தான், அடுத்த கேள்வி கேட்கிறார், சிவகார்த்திகேயன். அவர்கள் சொல்லும் கதாநாயகிகள், தனக்கு திருப்தி தராத பட்சத்தில், தன் கைவசம் உள்ள நடிகைகளின் பட்டியலை கொடுத்து, 'இதில் ஒருவரை தேர்வு செய்யுங்கள்... நீங்கள் கேட்கிற நாளில் நான், 'கால்ஷீட்' வாங்கித் தருகிறேன்...' என்கிறார். சிவகார்த்தி கேயனின் பட்டியலில் உள்ள அனைத்து நடிகைகளும், மார்க்கெட்டில், 'டாப் லிஸ்டில்' இருப்பவர்கள்.— சி.பொ.,விரைவில் ஏ.ஆர்.ரஹ்மானின் கனவு படம்!கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, 99 சாங்ஸ் என்றொரு படத்திற்கான கதையை எழுதி, தயாரித்து, இசையமைத்தார், ஏ.ஆர்.ரஹ்மான். ஒரு பாடகர், பெரும் போராட்டத்திற்கு பின் இசையமைப்பாளர் ஆவது தான், இந்த படத்தின் கதை. 'இது என் கனவு படம்...' என்று கூறும், ஏ.ஆர்.ரஹ்மான், 99 சாங்ஸ் படத்தை, ஜூன் 21ம் தேதி உலகமெங்கும் வெளியிடப் போவதாக, 'டுவிட்டரில்' தெரிவித்துள்ளார்.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!* தாரா நடிகை, கதையின் நாயகியாக நடித்த படங்கள் தோல்வியடைந்து வருவதால், 'ஹீரோக்களின் படங்களில் நடித்தாவது, மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வோம்...' என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அதனால், உச்ச நடிகர் மற்றும் தளபதி நடிகருடன் நடிக்கும் நடிகை, கதையின் நாயகிக்கான கதைகளை தற்காலிகமாக ஓரங்கட்டி, 'டூயட்' பாடுவதில் ஆர்வத்தை திருப்பியுள்ளார்.'உனக்கு இருக்கிற படிப்புக்கும், திறமைக்கும், புகழ் உச்சிக்கு போயிடுவேன்னு பார்த்தா... ஒரு சின்ன சறுக்கல் ஏற்பட்டதும், இடிஞ்சு போயிட்டியே... உன் தோழி, ந.தாராவை பார்த்தியா... அவளுக்கு இல்லாத கஷ்டமா... அடுத்தடுத்து செய்ய வேண்டியதை செய்துட்டு போயிடணும்...' என்று, மாணவிக்கு அறிவுறுத்தினார், ஆசிரியர்.* 'தல நடிகரை வைத்து அடுத்தபடியாக படம் இயக்கி விடவேண்டும்...' என்று, அவரிடம் ஏற்கனவே கதை சொன்ன நான்கு இயக்குனர்களும், 'கால்ஷீட்' கேட்டு துரத்தி வருகின்றனர். தர்மசங்கடத்தில் சிக்கிய நடிகரோ, 'நீங்கள் நான்கு பேர் சொன்ன கதைகளையும், என் கதை இலாகாவிடம் சொல்லி, எந்த கதையில் முதலில் நடிக்க சொல்கின்றனரோ, அவர்க-ளுக்கே, என் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை தருவேன்...' என்று, கறாராக கூறியிருக்கிறார். இதனால், அவரிடம் கதை சொல்லியிருக்கும், 'சீனியர்' இயக்குனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 'அய்யா, அஜித் மகராஜ், உம் மேல் இருக்கிற அபிமானத்துல, சங்க தலைவரா தேர்ந்தெடுக்க இருக்கிறோம். ஆனா, நீயோ உன் முடிவை சொல்லாம, அப்பத்தாவ கேட்கணும், ஆயாவை கேட்கணும்ன்னு, 'ஓவர் பில்ட்-அப்' செஞ்சிட்டு இருக்கிற... இது தான் நீ சங்கத்துக்கு காட்டற விஸ்வாசமா?' என்றார், சங்க செயலர்.சினி துளிகள்!* ரஜினியின், தர்பார் படத்தில், எதிரும் புதிருமான ஒரு நெகடீவ் ரோலில் நடிக்கிறார், நயன்தாரா.* அடிக்கடி, 'கிச்சன் கில்லாடி' ஆகி விடும் அஜித்குமார், மகன், மகளுடன், 'ஜாலி'யாக விளையாடுவதிலும் கவனம் செலுத்துகிறார். முக்கியமாக கம்ப்யூட்டர், மொபைல் போன்களை தவிர்த்து, உடல் செயல்பாட்டிற்கான விளையாட்டுகளில் அவர்களது கவனத்தை திசை திருப்பி வருகிறார்.* மணிரத்னம் இயக்கும், பொன்னியின் செல்வன் படத்தில், நந்தினி என்ற வில்லி வேடத்தில் நடிக்கிறார், ஐஸ்வர்யாராய்.அவ்ளோதான்!