உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

சந்தானத்தின், சினிமா வரலாறு!காமெடியனாக இருந்து, 'ஹீரோ' ஆக மாறிய, சந்தானம், படத்துக்குப் படம், 'கெட்-அப்'பை மாற்றி வருகிறார். அத்துடன், 'ரொமான்ஸ்' மற்றும் 'ஆக் ஷன்' காட்சிகளில், மற்றவர்களின் சாயல் தன் நடிப்பில் வெளிப்படாத வகையில், தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். காரணம் கேட்டால், 'எதிர்காலத்தில், 'இது, சந்தானம் ஸ்டைல்' என்று, மற்றவர்கள் சொல்ல வேண்டும். அதற்காக தான் இப்படி மெனக்கெடுகிறேன். வரலாறு முக்கியம் ப்ரோ...' என்று சொல்லி, கண்ணடிக்கிறார்.சினிமா பொன்னையாகண்டிஷன் போட்டு நடிக்கும் நித்யா மேனன்!விஜயுடன், மெர்சல் படத்தில் நடித்த, நித்யா மேனன், தன்னை ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர்களிடம்,'மற்றவர்கள், எனக்கு சொல்லிக் கொடுப்பதை, உள் வாங்கி நடிக்க தெரியாது. ஆனால், 'டயலாக்' பேப்பரை கொடுத்து விட்டால், என்ன தேவையோ அந்த நடிப்பை நானே கொடுத்து விடுவேன்...' என்கிறார். நித்யா மேனனின் இந்த நிபந்தனையை கேட்டு சிலர் அதிர்ந்தாலும், இதுவரை அவர் நடிப்பில் சோடை போனதில்லை என்பதால், அவரது, 'கண்டிஷனு'க்கு பல இயக்குனர்கள் உடன்படுகின்றனர். மலை விழுங்கி மாத்தாங்கிக்கு, வண்டிச் சக்கரம் அப்பளம்!— எலீசாஐஸ்வர்யா ராஜேஷின் திடீர் சபதம்!தமிழில் பிரபலமாகி விட்ட, ஐஸ்வர்யா ராஜேஷ், தன் தாய்மொழியான தெலுங்கில் நடிக்க, நீண்ட போராட்டத்திற்கு பின், இப்போது சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். அதோடு, தெலுங்கில், 'கலர்புல்' ஆன கவர்ச்சி நடிகைகளுக்கு தான் வரவேற்பு கொடுப்பர் என்பதால், தமிழில் பட்டும் படாமலும் கவர்ச்சி காட்டி வந்தவர், அங்கு போன வேகத்தில், புயலாகி விட்டார். 'தாய்மொழி சினிமாவை, முழுசாக ஆழம் பார்க்காமல் கரையேற மாட்டேன்...' என்று கூறி, ஐதராபாத்தில், 'டேரா' போட்டுள்ளார், நடிகை. வகை அறிந்து செய்தால், வாதம் பலிக்கும்!— எலீசாஅனுஷ்காவின் கெத்து!காஜல் அகர்வால், தமன்னா உள்ளிட்ட சில நடிகையர், ஹிந்தி படங்களிலும் நடித்து வருகின்றனர். சமீபத்தில், அனுஷ்காவிற்கு, ஒரு பிரபல இயக்குனர், அவர் நடித்த, பாகமதி படத்தின் ஹிந்தி, 'ரீ-மேக்'கில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளார். அனுஷ்காவோ, 'ஹிந்தி படங்களில் நடித்து, இந்திய நடிகையாக விருப்பமில்லை. தென்னிந்திய நடிகை என்ற பெயர் ஒன்றே போதும்...' என்று, மறுத்து விட்டார். ஹிந்தி பட வாய்ப்புகளுக்காக, பல நடிகையர் நடையாய் நடந்து கொண்டிருக்க, வீடு தேடி வந்த வாய்ப்பை, 'கெத்தாக' அனுஷ்கா திருப்பி அனுப்பியது, சக நடிகையரை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. பெருமை பீதக்கலம்; இருக்கிறது ஓட்டைக் கலம்!சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!உச்ச நடிகர், அரசியலுக்கு வரப்போகிற இந்த நேரத்தில், தளபதி நடிகருக்கும், அரசியல் கோதாவில் குதிக்க வேண்டுமென்ற வெறி ஏற்பட்டுள்ளது. ஆனால், அவரது, 'அட்வைசர்'களோ, 'அரசியல் ரொம்ப ஆழமானது. அந்த ஆழத்தை பார்க்க இன்னும் வயதும், அனுபவமும் வேண்டும்...' என்று, அவரை தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதனால், பொங்கி வந்த அரசியல் ஆவேசத்தை அடக்கி வைத்திருக்கும், தளபதி, 'உச்ச நடிகரின் ஆட்டம் அதிரடியாக இருந்தால், நான் கொஞ்ச காலத்துக்கு அடங்கியிருப்பேன். ஆனால், இறங்கிய வேகத்திலேயே அவரது ஆட்டம், 'குளோஸ்' ஆகி விட்டால், அடுத்த ஆட்டக்காரனாக நான் களத்தில் இறங்குவேன். அப்போது, யாரும் என்னை தடுக்கக் கூடாது...' என்று, 'அட்வைசர்'களை கேட்டுக் கொண்டுள்ளார்.'மூத்தவன் தான், 'பிசினஸ்' பாத்துக்கணும் என்று, சொல்லி சொல்லியே, என் ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போடுறீங்க... ஒருவேளை, அண்ணன் அதில், தோத்துட்டா, நான் அதை எடுத்து செய்ய அனுமதிக்கணும்...' என்று, அப்பாவிடம் காட்டமாக கூறினான், விஜய்.சினி துளிகள்!* அட்லி இயக்கும் படங்களில், அவரது மனைவியும், முன்னாள் நடிகையுமான, பிரியா, ஒரு உதவி இயக்குனரைப் போன்று செயல்படுகிறார்.* தன், 64வது படத்தில், விஜய்சேதுபதி வில்லனாக நடித்தபோதும், அவரது பெயரையும் போஸ்டரில் இடம்பெற அனுமதி கொடுத்துள்ளார், விஜய்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !