உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

இந்திய அளவில் முதலிடம் பிடித்த, தனுஷ் பாடல்!

கடந்த, 2018ல், மாரி - 2 படத்தில், தனுஷ் எழுதி, பின்னணி பாடி, சாய் பல்லவியுடன் நடனமாடிய, 'ரவுடி பேபி...' என்ற பாடலுக்கு, நடனம் அமைத்திருந்தார், பிரபுதேவா. யுவன்சங்கர் ராஜா இசையமைத்த இந்த பாடல், 'யூ டியூபில்' வெளியிடப்பட்டு, சர்வதேச, 'பில் போர்ட்' இசை பட்டியலிலும் இடம் பிடித்தது. இதுவரை, 80 கோடி பார்வையாளர்கள், ௩௦ லடசம், 'லைக்'குகளையும் கடந்துள்ள இப்பாடல், இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில், ஏழாவது இடத்தையும் பிடித்து, சாதனை செய்துள்ளது.சினிமா பொன்னையா

கவர்ச்சி நடிகை நமீதாவின், கருணை உள்ளம்!

அரசு ஊரடங்கு போட்ட பிறகும், சாலைகளில் மக்கள் அலைவதை பார்த்த, நடிகை நமீதா, ஒரு, 'டுவிட்' வெளியிட்டுள்ளார். அதில், 'உங்களால், சில நாட்கள் கூட வீட்டிற்குள் இருக்க முடியவில்லை. அப்படியென்றால், காட்டுக்குள் சுதந்திரமாக அலையும் மிருகங்களை கூண்டில் அடைத்து வைத்திருப்பதை கொஞ்சம் நினைத்து பாருங்கள்...' என்று, கேள்வி எழுப்பிள்ளார். மேலும், 'தயவுசெய்து, யாரும் மிருகக்காட்சி சாலைக்கு செல்லாதீர்கள். நீங்கள் டிக்கெட் வாங்கி செல்லவில்லை என்றால், மிருகங்களை, காட்டில் சுதந்திரமாக விட்டு, மிருகக்காட்சி சாலைகளையே இழுத்து மூடி விடுவர்...' என்று, வேண்டுகோள் வைத்துள்ளார். அவரது இந்த வேண்டுகோளுக்கு, பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. சொல் அம்போ, வில் அம்போ!எலீசா

கவர்ச்சி பிரியர்களை கதற விட்ட, யாஷிகா ஆனந்த்!

தன் இணைய பக்கத்தில், படு கவர்ச்சியான புகைப்படங்களாகவே வெளியிட்டு வந்தார், யாஷிகா ஆனந்த். திடீரென்று புடவை, 'கெட் - அப்'பில் புகைப்படங்களை வெளியிட்டு, இளவட்ட அபிமானிகளை அதிர விட்டார். இதையடுத்து, பலரும், 'ஏன் இப்படி திடுதிப்பென்று, புடவை கட்சிக்கு மாறி விட்டீர்கள்...' என்று, அதிர்ச்சியுடன் கேட்டனர். 'நீங்கள் அதிரும் அளவுக்கு நான் ஒன்றும் மாறிப் போய் விடவில்லை. 'டூ பீஸ்' உடையில் தொடர்ந்து புகைப்படம் எடுத்து, போரடித்து விட்டது. அதனால் தான் ஒரு மாற்றத்திற்காக, புடவையில் எடுத்தேன். அடுத்தாப்ல, 'பிகினி'யில், 'ரவுண்டு' வரப்போகிறேன். கவலையை விடுங்க...' என்று சொல்லி, அதிர்ச்சியடைந்த அபிமானிகளை ஆறுதல்படுத்தி விட்டார். கருடி கற்றவன் இடறி விழுந்தால், அதுவும் ஒரு வித்தை!— எலீசா

ஆர்யாவை பார்த்து மிரண்டு போன, கோலிவுட் இயக்குனர்கள்!

சல்பேட்டா படத்திற்காக, குத்துச்சண்டை வீரராக மாறியுள்ளார், ஆர்யா. அந்த, 'கெட் - அப்'பில், தான் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டதும், 'ஆக் ஷன்' பட இயக்குனர்களின் கவனம், அவர் பக்கம் திரும்பி விட்டது. கூடவே, 'கதாபாத்திரத்திற்காக, உடம்பை வருத்தி நடிக்கவும் தயாராக இருக்கிறேன்...' என்றும், ஆர்யா கூறி வருவதால், அதிரடியான, 'ஆக் ஷன்' கதைகளுடன் சில இயக்குனர்கள், அவரை முற்றுகையிட்டு வருகின்றனர். அதனால், 'ரொமான்டிக்' நாயகனாக வலம் வந்த, ஆர்யா, 'ஆக் ஷன் ஹீரோ'வாக அடுத்த, 'ரவுண்டை' அதிரடியாக ஆரம்பித்துள்ளார்.— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

தளபதியின், நான்கெழுத்து படத்தில் நடித்துள்ள அந்த மலையாள நடிகை, அதே வேகத்தில் சில மெகா, 'ஹீரோ'க்களின் படங்களை தட்டி விட வேண்டுமென்று, கோலிவுட்டில் கொடி பிடித்து திரிந்தார். ஆனால், அம்மணியை ஏறெடுத்துப் பார்க்கவே ஆளில்லை. இதனால், கோலிவுட்டில் கடை திறந்தால், போணி ஆகாது போலிருக்கே என்பதை புரிந்துகொண்ட அம்மணி, டோலிவுட் மெகா, 'ஹீரோ'க்களை, 'அட்டாக்' பண்ண, ஆந்திராவில் தஞ்சமடைந்துள்ளார்.'நம், 'லேடீஸ் கிளப்'பில் இருந்த, மாளவிகா, சென்னையில், 'ரெடிமேட் ேஷாரூம்' வைத்திருந்தாள் அல்லவா... கடையை விரிவுபடுத்துறேன்னு, அகல கால் வைத்தாள்; நஷ்டமடைந்து விட்டது. இப்போது, தன், 'ேஷாரூமை' ஆந்திராவுக்கு மாற்றிச் சென்று விட்டாள்...' என்று, தன் தோழிக்கு தகவல் தெரிவித்தாள், 'லேடீஸ் கிளப்' தலைவி.

சினி துளிகள்!

* 'மாஸ்டர் படத்தில் நடித்து வந்தபோது, இரண்டு முறை என்னுடைய, 'பர்பார்மென்சை' பார்த்த, விஜய் வெகுவாக பாராட்டினார்...' என்று, கோலிவுட்டில், 'பில்ட் - அப்' கொடுத்து வருகிறார், மாளவிகா மோகனன்.* 'அனுஷ்கா பாணியில், குதிரையில் அமர்ந்தபடி, வாள் சண்டை போட வேண்டும் என்பது, என் நீண்ட கால கனவு. அந்த கனவை யாரேனும் நிறைவேற்றுவீர்களா...' என்று, அபிமானத்திற்குரிய, இயக்குனர்களிடம் கோரிக்கை விடுத்து வருகிறார், காஜல் அகர்வால்,.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !