உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

திக்குமுக்காட வைத்த, ராஜமவுலி!பாகுபலி இயக்குனர், ராஜமவுலியின் இயக்கத்தில், சிறிய வேடத்தில் நடித்தாலே, அது பெரிய கொடுப்பினை என்று நடிகர் - நடிகையர் நினைப்பர். இந்நிலையில், அவரது, ஆர்ஆர்ஆர் படத்தில் நடிப்பதற்கு, 'சம்பளமே வேண்டாம்...' என்று சொல்லி தான் ஒப்பந்தமானார், சமுத்திரகனி. ஆனால், முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்றபோது, சமுத்திரகனியே நினைத்துப் பார்க்காத அளவுக்கு, ஒரு பெரிய சம்பளத்தைக் கொடுத்து திக்குமுக்காட வைத்துள்ளார், ராஜமவுலி. அதையடுத்து, 'இதுவரை கிடைக்காத அரிய வாய்ப்பு மட்டுமின்றி, இதுவரை வாங்காத சம்பளமும் இந்த படத்தில் எனக்கு கிடைத்துள்ளது...' என்று, மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார், சமுத்திரகனி.— சினிமா பொன்னையாபட்ஜெட் நாயகியாகும், கீர்த்தி சுரேஷ்!தன் மார்க்கெட், ஆட்டம் கண்டு கிடப்பதால், தற்போது, ஆடித்தள்ளுபடி போன்று, படக்கூலியை, 50 சதவீதம் தடாலடியாக குறைத்துள்ளார், கீர்த்தி சுரேஷ். இதையடுத்து, அம்மணியின், 'ரேட்' எகிறி நின்றபோது, 'நமக்கு கட்டுப்படியாகாது...' என்று அவரை, 'புக்' பண்ண தயங்கி நின்ற பட்ஜெட் படாதிபதிகள், இப்போது, படையெடுக்கத் துவங்கி இருக்கின்றனர். இதனால், பட்ஜெட் படாதிபதிகள் மற்றும் பட்ஜெட், 'ஹீரோ'களின், 'பேவரிட்' நாயகியாகவும் மாறிக் கொண்டிருக்கிறார், கீர்த்தி சுரேஷ் இருக்கிற அளவோடு இருந்தால், எல்லாம் தேடி வரும்!—எலீசாஅமலாபாலை, உசுப்பேற்றும் ரசிகர்கள்!சமீப காலமாக, தன் இணைய பக்கத்தில் அவ்வப்போது, காரசாரமான தத்துவங்களை பதிவிட்டு வரும், அமலாபால், திடுதிப்பென்று முதன் முறையாக, 'கிளுகிளு பிகினி' புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களின் மனங்களில் அருவியாய் கொட்டியிருக்கிறார். அவரது இந்த தரிசனத்தைப் பார்த்து, உற்சாக குளியல் போடும் இளவட்டங்கள், 'கமென்ட்ஸ், லைக்'குகளை வாரி வழங்கி வருவதோடு, 'உங்ககிட்ட இருந்து, இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்...' என்றும், அமலாபாலை உசுப்பேற்றி வருகின்றனர். அதனால், அமலாபாலின், 'பிகினி' தரிசனம் தொடரும் என்று தெரிகிறது. இன்னும் இருக்கிறது தேருக்குள் சிங்காரம்!—எலீசாரகுல்பிரீத் சிங்கை, 'கலாய்த்த' நெட்டிசன்கள்!'அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, முழுமையாக சைவத்துக்கு மாறி, இந்த உலகை காப்போம்...' என்று கூறியுள்ள, நடிகை ரகுல்பிரீத் சிங், நிர்வாணமாக இருக்கும் தன் உடம்பை, காய்கறியை வைத்து மறைத்திருப்பது போன்று, ஒரு புகைப்படத்துக்கு, 'போஸ்' கொடுத்துள்ளார். 'பீட்டா இந்தியா'வுக்கு ஆதரவாக, அவர் இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில், 'நான்வெஜ் ஓட்டலுக்குள் சென்று, முழு கட்டு கட்டும் நீங்களெல்லாம் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க, தகுதியே இல்லை...' என்று, ரகுல்பிரீத் சிங்கை விமர்சித்து வருகின்றனர், நெட்டிசன்கள்.பேச்சைக் கொடுத்து, ஏச்சை வாங்குகிறது!—எலீசாவிஜய் யேசுதாசுக்கு, 'டிப்ஸ்!'பிரபல பின்னணி பாடகர், கே.ஜே.ஜேசுதாசின் மகனான பாடகரும், நடிகருமான, விஜய் யேசுதாஸ், மாரி மற்றும் படைவீரன் படங்களைத் தொடர்ந்து, தற்போது, ஏழு மொழிகளில் தயாராகும், சல்மான் -என்ற, '3டி' படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக, தன் திரையுலக நண்பர்களில் ஒருவரான, தனுஷிடம், 'த்ரில்'லர் காட்சிகளில் நடிப்பது குறித்து ஆலோசனை கேட்டுள்ளார், விஜய் யேசுதாஸ். அதையடுத்து, தனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில், அவரை வரவைத்து, நிறைய நடிப்பு, 'டிப்ஸ்'களை கொடுத்துள்ளார், தனுஷ்.சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!வம்பு நடிகரை, சில மாதங்கள் மட்டுமே காதலித்து, பின்னர், 'பிரேக் - அப்' செய்து கொண்டார், அந்த மும்பை நடிகை. சினிமா ஸ்டார் என்கிற வெளிச்சம் இருக்கும்போதே, யாராவது பெரிய பண முதலையை மடக்கி, திருமணம் செய்து கொள்வதற்காக, தொடர்ந்து வலைவீசி வந்தார். இந்நிலையில், மும்பையை சேர்ந்த, நகைக்கடை ஓனர் ஒருவர், அம்மணியிடம் சிக்கி இருக்கிறார். அதனால், சென்னை விஜயத்தை குறைத்து, காதும் காதும் வைத்த மாதிரி, அடுத்தகட்ட வேலைகளை துவங்கி இருக்கிறார், நடிகை. இந்த சேதி, அம்மணியின் முன்னாள் காதலரான, வம்பு நடிகரின் காதுக்கு வந்ததை அடுத்து, 'அட்வான்சாக'வே, திருமண வாழ்த்து சொல்லி, அசர வைத்து விட்டார்.'ஆபீசுக்கு போனோமா, வந்தோமான்னு இருக்கணும். வீண் வம்பு - தும்புக்கோ, காலி பசங்க, காதல் கத்தரிக்காய்ன்னு வந்தாலோ, கண்டுக்காம தானுண்டு, தன் முன்னேற்றம் உண்டுன்னு இருந்துக்கணும்.'என் சினேகிதியோட பொண்ணு, ஹன்சிகா, காலேஜ் படிக்கிறப்போ, ஒரு பையனை காதலிச்சிருக்கா... இப்போ, வேலைக்கு போன பின், அவனை உதறிட்டு, சொந்த ஊர்க்கார பையன் ஒருவனை திருமணம் செய்துக்க போறாளாம். இதெல்லாம் நமக்கு சரிப்படாதுடி... சூதானமா நடந்துக்க...' என்று மகளிடம் அறிவுறுத்தினாள், அம்மா.சினி துளிகள்!* 100 என்ற படத்தை அடுத்து, மஹா மற்றும் பார்ட்னர் போன்ற படங்களில் நடிக்கிறார், ஹன்சிகா.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !