இதப்படிங்க முதல்ல...
சிம்புவை நோக்கி படையெடுக்கும்,'மாஜி ஹீரோயினி'கள்!ஒரு காலத்தில், சிம்பு என்றாலே வம்பு பண்ணுவார் என்று, முன்வரிசை நடிகையர் அவரது படங்களில் நடிப்பதற்கே தயங்கினர். இப்போது, சிம்புவிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு பின், அவருடன் நடிப்பதற்கு, 'மாஜி ஹீரோயினி'கள் படையெடுக்கத் துவங்கியுள்ளனர். குறிப்பாக, சிம்புவின் முன்னாள் காதலியான நயன்தாரா, காதல் முறிந்த பின், இது நம்ம ஆளு என்ற படத்தில் நடித்தவர், இப்போது, மீண்டும் ஒரு படத்தில் அவருடன், 'டூயட்' பாடப் போகிறார். இப்படி, 'லேடி சூப்பர் ஸ்டாரே' சிம்புவுடன் நடிப்பதில் ஆர்வம் காட்டியதை அடுத்து, அவரது மார்க்கெட், மறுபடியும் களை கட்டத் துவங்கியிருக்கிறது.— சினிமா பொன்னையாமீனாவின், 'மெகா பிளான்!'ஆறு வயதில், விஜயின், தெறி படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனாவின் மகள், நைனிகாவிற்கு, தற்போது, ஒன்பது வயதாகி விட்டது. அம்மாவின் தோளுக்கு வளர்ந்து விட்ட நைனிகாவையும், இன்னும் சில ஆண்டுகளில் கதாநாயகியாக திரைவானில் மிளிர விட வேண்டும் என்பதற்காக, இப்போதே சினிமாவுக்கு தேவையான அனைத்து கலைகளையும் போதித்து வருகிறார், மீனா. அந்த வகையில், ரஜினி படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தான், பின்னர், அவருக்கே ஜோடியாக நடித்தது போன்று, மகள் நைனிகாவையும், எதிர்காலத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைத்து, வரலாற்று சாதனை நிகழ்த்தும், 'மெகா பிளான்' போட்டுள்ளார். நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும்!— எலீசாமிரட்டும் தமிழ் நடிகையர்!வட மாநில நடிகையருக்கு, தமிழச்சிகள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை, பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் என, பலரும் சொல்லி அடித்தனர். அதையடுத்து, கோவை நடிகை, அதுல்யா ரவியும், குட்டை பாவாடை நடிகையாக உருவெடுத்துள்ளார். இதனால், இதுவரை தமிழ் நடிகையரை தீண்டத்தகாதவர்களைப் போன்று பார்த்த இயக்குனர்கள், 'நம்ம ஊர் நடிகையரும், பாலிவுட் நடிகையரை மிஞ்சி விடுவர் போலிருக்கே...' என்று, ஆச்சர்யத்தில் வாய்பிளந்து நிற்கின்றனர். அதைப் பார்த்து, 'அப்படியென்றால், கூடிய சீக்கிரமே நாமெல்லாம் மொத்தமாக மும்பைக்கு ரயிலேற வேண்டியதுதானா...' என்று தமன்னா, காஜல்அகர்வால் மற்றும் ஹன்சிகா போன்ற பாலிவுட் அம்மணிகள், மிரண்டு போய் உள்ளனர். உனக்காச்சு எனக்கு ஆச்சு; பார்க்கிறேன் ஒரு கை! — எலீசாமாதவன் கொடுக்கும், 'ஷாக் ட்ரீட்மென்ட்!'அலைபாயுதே படம் துவங்கி, பெருவாரியான கல்லுாரி பெண்களின் கனவு நாயகனாக திகழும் மாதவனுக்கு, 50 வயதான பிறகும், வெறித்தனமான ரசிகையர் இருக்கின்றனர். அதில், சில கல்லுாரி பெண்கள், 'ஐ லவ் யூ... நாம கல்யாணம் செஞ்சிக்கலாமா...' என்று, மாதவனிடம், 'சீரியசாக'வே கேட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு, 'எஸ், நோ...' என, எந்த பதிலும் கொடுக்காத மாதவன், தன் மகனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, 'எனக்கு, உங்கள் வயதில், ஒரு மகன் இருக்கிறான்...' என்று சொல்லி, அந்த பெண்களுக்கு, 'ஷாக் ட்ரீட்மென்ட்' கொடுத்துள்ளார். — சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!சண்டக்கோழி நடிகருடன் சில காலம் காதலில் பின்னி பிணைந்திருந்த, அந்த லட்சுமிகரமான வாரிசு நடிகையை, பின்னர் கழட்டி விட்ட நடிகர், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள தயாரானார். ஆனால், தற்போது அந்த பெண்ணே, சண்டக்கோழியை கழட்டி விட்டுள்ளதாக, செய்தி வெளியாகியுள்ளது. காரணம், நடிகரைப் பற்றிய சில இருட்டு அறை ரகசியங்களை, அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த பெண்ணுக்கு, போட்டுக் கொடுத்து விட்டார். லட்சுமிகரமான நடிகை, 'பாஸ்' பண்ணி விட்டார். அதனால்தான், நடிகரின் கைக்கு எட்டியவர், வாய்க்கு எட்டுவதற்குள், 'எஸ்கேப்' ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், வாரிசு நடிகை மீது, கொல வெறியில் இருக்கிறார், சண்டக்கோழி.'அடியே, வரலட்சுமி, என் அருமை தோழியே... எப்பப் பாரு என் அண்ணன் விஷாலை சீண்டிக்கிட்டே இருந்த... உன்கிட்டயிருந்து தப்பவே, மேற்படிப்பு படிக்குற சாக்குல, வெளிநாட்டுக்கு ஓடினான். இப்ப படிப்பும் முடிய போகுது.'திரும்பவும் அந்த வாயாடிக்கிட்ட மாட்டிக்க மாட்டேன்னு, அங்கேயே வேலை தேடிக்க போறானாம். உனக்கும் பெப்பே... உன் அப்பனுக்கும் பெப்பே...''அப்படியா... உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா... உங்க அண்ணன் படிச்ச அதே, யூனிவர்சிட்டியில் தான் எனக்கும் மேற்படிப்புக்கான, 'அட்மிஷன்' கிடைச்சுருக்கு. அடுத்த வாரம் கிளம்புறேன். அங்க போய் அவன என்ன செய்கிறேன்னு பாரு... உனக்கு அண்ணியா வந்து, உன்னையும் ஒரு வழி பண்றேன், என் சகியே...' என்றாள், வரலட்சுமி.சினி துளிகள்!* விஷால், வரலட்சுமி, சந்தானம் நடித்து, ஏழு ஆண்டுகளாக வெளிவராமல் இருந்த, மதகஜராஜா படம், இந்த ஆண்டு வலைதளத்தில், வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அவ்ளோதான்!