உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

சினிமாவில், கங்கனாவுக்கு கிடைத்த பெருமை!ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள, தலைவி படத்தில், ஹிந்தி நடிகை, கங்கனா ரணாவத் நடித்துள்ளார். அடுத்தபடியாக, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும், எமர்ஜென்ஸி என்ற படத்திலும் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'ஜெயலலிதா வேடத்திற்காக, பலமுறை உடல் எடையை கூட்டி குறைத்து, பல பரிமாணங்களை, என் நடிப்பில் வெளிப்படுத்தினேன். அதேபோல், இந்திராவாக நடிப்பதற்கும் என்னை முழுமையாக தயார்படுத்தப் போகிறேன். இரண்டு சாதனை பெண்மணிகளின் வேடத்தில் நடிக்க கிடைத்த இந்த அரிய வாய்ப்புகளை, 'கேரியரில்' எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்...' என்கிறார். — சினிமா பொன்னையாபார்வதி நாயர், 'நறுக்' பதில்!'சோஷியல் மீடியா'வில், 'ஆக்டீவ்' ஆக இருக்கும் நடிகையர், ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவ்வப்போது பதிலளிக்கின்றனர். அந்த வகையில், நடிகை பார்வதி நாயரிடம், ஒரு ரசிகர், 'உங்களது சைஸ் என்ன?' என்று, தவறான கோணத்தில், கேள்வி கேட்டார். அதற்கு சில நடிகையரை போன்று, ஆங்கில சொற்களை வீசி அவர்களை வசைபாடாத பார்வதி நாயர், 'என், 'ஷூ சைஸ்' 37...' என, கூலாக சொல்லி, அந்த ரசிகருக்கு, 'ஷாக்' கொடுத்தார். இதனால், 'பார்வதி நாயரிடம், மீண்டும் விகாரமாக கேட்டால், அடுத்து செருப்பு, 'சைஸை' சொல்லி, இன்னொரு, 'ஷாக்' கொடுப்பார்...' என்று, அந்த ரசிகர், அடுத்த கேள்வியை கேட்காமலேயே, 'எஸ்' ஆகி விட்டார். சூடு கண்ட பூனை அடுப்படியில் செல்லாது!எலீசாஇயக்குனர்களின் நடிகை!முன்னணி, 'ஹீரோ'களுடன் ஒரு ரவுண்டு வந்து ஓய்ந்து விட்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, இப்போது, பெரிய, 'ஹீரோ'களின் படங்கள் இல்லை. ஆனால், கதையின் நாயகியாக மூன்று படங்களில் நடிக்கிறார். 'இந்த படங்கள் எல்லாமே, என் திறமை மீதுள்ள நம்பிக்கையை வைத்து வந்த படங்கள். சினிமாவில், எந்த நடிகையின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கிறதோ அவர்களை, 'ஹீரோ'கள் கைவிட்டாலும், இயக்குனர்கள் கைவிட மாட்டார்கள். அந்த வகையில், ஒரு காலத்தில், 'ஹீரோ'களின் நாயகியாக இருந்த நான், இப்போது, இயக்குனர்களின் நடிகையாகி விட்டேன்...' என்கிறார். வகை அறிந்து செய்தால், வாதம் பலிக்கும்!— எலீசாபேச்சு மாறிய, ஆர்யா!மார்க்கெட், 'டல்'லடித்தபோது, சரிவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக, 'எந்த மாதிரியான வில்லன் வேடமென்றாலும் நடிப்பேன்...' என்றார், ஆர்யா. தற்போது, இரண்டு, 'ஹீரோ' வாய்ப்புகள் கிடைத்ததை அடுத்து, மாறி விட்டார். உடனடியாக வில்லனாக, ஒப்பந்தம் செய்த இயக்குனர்களுக்கு போன் செய்து, 'என், 'ஹீரோ இமேஜை' பாதிக்காத வில்லனாக மட்டுமே நடிப்பேன்...' என்று சொல்லி, தன்னை கொடூரமான வில்லனாக வெளிப்படுத்துவதற்கு, தடை போட்டு விட்டார். இதனால், எனிமி படத்திற்கு பின், இன்னொரு படத்திலும் வில்லனாக நடிக்க, ஆர்யாவை ஒப்பந்தம் செய்திருந்தவர்கள், நிபந்தனை காரணமாக, அவரை கழட்டி விட்டு, வேறு நடிகரை தேடி வருகின்றனர்.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!* ரோஜா நடிகரின் மார்க்கெட் குடை சாய்ந்தபோதும், சம்பள விஷயத்தில் ரொம்பவே கறார் செய்கிறார். அதிலும், அவரை வைத்து தயாரித்த படங்கள் விற்பனை ஆகாமல் கிடப்பில் உள்ளதால், பல கோடிகளை இழந்த சில தயாரிப்பாளர்கள், கடனில் சிக்கித் தவிக்கின்றனர். ஆனபோதும், 'எதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை. நான் நடித்ததற்கான சம்பளத்தில், நயா பைசா குறையாமல் தந்து விடவேண்டும்...' என்று அடித்து சொல்கிறார். அப்படி தராத தயாரிப்பாளர்களிடம், 'கோர்ட்டுக்கு சென்று விடுவேன்...' என்றும் மிரட்டுகிறார்.இதனால், 'இந்த நடிகர், ரொம்ப ஆபத்தானவர்...' என்று, ரோஜா நடிகரை வைத்து படம் தயாரிக்க இருந்த நிறுவனங்கள் பின்வாங்கி விட்டதோடு, ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களும் அவரை ஓரங்கட்ட வைக்க வேண்டும் என்று, மற்றவர்களையும் வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.இரு குடும்பத் தலைவர்கள் பேசிக் கொண்டது...'ஏம்பா... உடம்பு சரியில்லைன்னு சொன்னியே... டாக்டரிடம் காட்டினாயா... என்ன சொன்னார்?''நம்மூரில் இருக்கும் பெரிய மருத்துவமனைக்கு வரும், 'ஸ்பெஷலிஸ்ட்' டாக்டர், அரவிந்த சாமிடம் தான் காட்டினேன். பாக்கெட் பாக்கெட்டா மாத்திரை, மருந்து கொடுத்திருக்கிறார்...''என்ன, அவரிடமா போனே... சின்ன பிரச்னைக்குக் கூட லட்சக்கணக்கில் பணம் வாங்குவாரே...''நீ சொல்றது சரிதான்... சாதாரண வாய்வு பிடிப்புக்கு, அந்த, 'டெஸ்ட்' இந்த, 'டெஸ்ட்'னு எடுத்து, இதயநோய் இருப்பதாக பயமுறுத்தி விட்டார். இதற்கும், மருந்துகளுக்கும் கணிசமான பணம் செலவாகி விட்டது. 'நல்லவேளையாக, ஊரிலிருந்து வந்த அம்மா, கை வைத்தியம் செய்ததில், வாய்வு கோளாறு இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது...''அவரை சும்மாவா விட்டே...''மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் செய்தேன். அவரை உடனடியாக, பணி நீக்கம் செய்ததோடு, வேறு மருத்துவமனையில் எங்கும் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் சொல்லி விட்டனர்.'இதனால், வெளி மாநிலத்துக்கு, ஜாகையை மாற்றிக் கொண்டதாக கேள்விப்பட்டேன்...'சினி துளிகள்!* தன், 50வது படமான, மஹாவில், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார், ஹன்சிகா.* தமிழில், பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால், மலையாள சினிமா பக்கம் திரும்பியிருக்கிறார், அரவிந்த்சாமி.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !