உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

உற்சாகம் குறையாத, சந்தானம்!'ஹீரோ' ஆன பின், சந்தானத்தின் மார்க்கெட், 'டல்' அடிக்கிறது. இருப்பினும், அவர், 'டல்' ஆகவில்லை. 'படிப்படியாக வளர்ந்து, நானும் முன்வரிசை நாயகனாகி விடுவேன்...' என்று சொல்லி, தற்போது ஒரு படத்தில், துப்பறிவாளனாக நடிக்கிறார். இதற்காக, ஸ்பெஷல் பயிற்சியெல்லாம் எடுத்து, நடிப்பதாக சொல்லும் சந்தானம், 'என் வாய் ஜாலத்தை குறைத்து, இந்த படத்தில் சண்டை காட்சிகளில் பின்னி பெடலெடுத்து வருகிறேன். அந்த வகையில், இனிமேல் பேச்சே கிடையாது, ஒன்லி செயல் மட்டும் தான்...' என்று, உற்சாகமாக சொல்கிறார்.- சினிமா பொன்னையாகுல்பி ஐஸ்க்கு அடிமையான, ஐஸ்வர்யா ராஜேஷ்!சின்ன வயதில் இருந்தே, ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, குல்பி ஐஸ் என்றால் கொள்ளை பிரியம். அந்த பழக்கம் இப்போது வரை தொடர்கிறது. 'நான் படப்பிடிப்புகளுக்கு செல்லும் வழியில், குல்பி ஐஸ் விற்றால், உடனே காரிலிருந்து இறங்கி வாங்கி, காரில் அமர்ந்து, சாலையை பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டே செல்வதில் அலாதி சுகம்...' என்று, தன், குல்பி அனுபவத்தை சொல்லி, 'ஜில்' தெறிக்க விடுகிறார். ஆசை, வெட்கம் அறியுமா?- எலீசா'ஹீரோ'களுடன் மோதும், டாப்சி!ஆடுகளம் டாப்சி, தற்போது, ஹிந்தி சினிமாவிலும் கொடி நாட்டி விட்டார். அதோடு, கதையின் நாயகியாக நடிப்பவர், தன் படங்களை பார்ப்பதற்காகவும், ரசிகர்கள், தியேட்டர்களுக்கு படையெடுப்பதால், தனக்கும், 'ஹீரோ'களுக்கு இணையான சம்பளம் தர வேண்டும் என்று, கொடி பிடித்துள்ளார். 'ஒரு, 'ஹிட்' படம் கூட கொடுக்காத நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில், மூன்றில் ஒரு பங்கு கூட, 'ஹிட்' படங்களை கொடுக்கும் நடிகையருக்கு ஏன் கொடுப்பதில்லை...' என்றும், பாலிவுட் பட அதிபர்களிடம் அதிரடி கேள்வி எழுப்பி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால், சில பாலிவுட், 'ஹீரோ'கள், டாப்சி மீது, கடும் புகைச்சலில் இருக்கின்றனர். நடந்த வரை நம் செயல்; நாளை நடப்பது நாயகன் செயல்!எலீசாஅதிர்ச்சியில் வடிவேலு!அரசியல் புயலில் வீழ்ந்து போன, தன் சினிமா மார்க்கெட், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால் மீண்டும் எகிறிவிடும் என்று எதிர்பார்த்தார், வடிவேலு. இந்த நேரத்தில் ஏற்கனவே தான் நடித்து, 'சூப்பர் ஹிட்' ஆன, ஒரு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது என்றதும், எப்படியும் படக்குழு தன்னை அழைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், வழக்கம்போல் இவர் நடிக்க வேண்டிய அந்த வேடத்திற்கு, யோகிபாபுவை, 'புக்' செய்து விட்டனர். சேதியறிந்து, மனசுடைந்து போயுள்ளார், வடிவேலு.- சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!இரண்டு முறை திருமணம் தடைபட்ட நிலையில், வம்பு நடிகருடன் நட்பு வளர்த்து வந்தார், மூனுஷா. அவரும், 'பேச்சுலர்' என்பதால், இருவருக்கும் நடுவே எந்த தடுப்பு சுவரும் இல்லாததால், ஒரு கட்டத்தில் நெருக்கத்தை அதிகப்படுத்தி இருக்கின்றனர். இந்த சேதி, நடிகரின் தந்தைகுலத்தின் காதுக்கு செல்ல, 'இதுபோன்ற முத்தின நடிகையருடன் நட்பு வைப்பது ரொம்ப ஆபத்தானது...' என்று, மகனுக்கு பக்குவமாக சொல்லி, நடிகையின் வீட்டு பக்கம் செல்வதற்கு, தடை போட்டு விட்டார். இதனால், மூனுஷாவின் சகவாசத்தை நிறுத்தி விட்டார், வம்பு நடிகர். அதிர்ந்து போன மூனுஷா, 'நடிகர்களிடம் வெறும் நட்பாக பழகினால் கூட, என்னை அனைவரும் சந்தேகப்படுகின்றனரே... நான் அத்தனை மோசமான பெண்ணா...' என்று, தன் தோழியரிடம் சொல்லி, புலம்பி வருகிறார்.'உன்னோடு தனியா பேசணும். என் அறைக்கு வா, த்ரிஷா...''என்ன விஷயம் மேடம்!''உனக்கு ஜூனியர் அந்த சிலம்பரசன். அவனோடு உனக்கு என்ன எப்பப் பாரு அரட்டை. அதுமட்டுமல்லாமல், 'மால், பீச், பார்க்'குன்னு அவனோடு சேர்ந்து சுத்தறதா, புகார் வந்திருக்கு...''இல்ல மேடம், பாடம் சம்பந்தமா சந்தேகம் கேட்டான். அதான்...''சந்தேகம் கேட்டா, வகுப்பறையிலேயே சொல்லிக் கொடுக்கலாமே... எதுக்கு வெளியே போகணும். இனி, இப்படி நடந்தா, 'சஸ்பெண்ட்' பண்ணிடுவேன்...' என்று கண்டித்தார், பேராசிரியை.'நான் என்ன தப்பா நடந்துக்கிட்டேன்னு இந்த மேடம் இப்படி கோவிச்சுக்கிறாங்க...' என்று புலம்பினாள், த்ரிஷா.சினி துளிகள்!* தான் கதையின் நாயகியாக நடித்த, நான்கைந்து படங்கள் கிடப்பில் உள்ளதால், அடுத்தபடியாக, கதையின் நாயகியாக நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார், த்ரிஷா.* சினிமாவில் தான் எதிர்பார்த்த அழுத்தமான வேடங்கள் கிடைக்காததால், 'வெப்சீரிஸ்'களில் நடிக்கத் துவங்கி விட்டார், அதிதிபாலன்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !