உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

பாக்ஸ் ஆபீஸ் கிங், விஜய்!

விஜய், கடந்த, 10 ஆண்டுகளில் நடித்த படப் பட்டியலை எடுத்துப் பார்த்தால், அதில் சில படங்கள் சூப்பர் ஹிட், சில படங்கள் சுமாரான வெற்றி, இன்னும் சில படங்கள், தோல்வி என்று தான் இருக்கும். ஆனால், வசூல் ரீதியாக பார்க்கப் போனால், தோல்வி படங்கள் கூட, 150 கோடி ரூபாய்க்கு குறைவாக இருந்ததில்லை.பீஸ்ட் படம் தோல்வி என்ற போதும், 250 கோடி வரை வசூலித்து இருக்கிறது. அதன் காரணமாகவே, படங்களின் வெற்றி -தோல்வி என்பதை எல்லாம் கடந்து, பாக்ஸ் ஆபிசில் எப்போதும், 'கிங்'காகவே இருந்து கொண்டிருக்கிறார், விஜய்.இதன் காரணமாகவே, அவர் நடிக்கும் படங்களுக்கு செலவு செய்ய எந்த தயாரிப்பாளர்களும் கவலைப்படுவதில்லை. ஒருவேளை, படமே தோல்வி என்றாலும், கண்டிப்பாக லாபம் சம்பாதித்து விடலாம் என்று, தாராளமாக செலவு செய்கின்றனர்.சினிமா பொன்னையா

மீண்டும் இழுத்துப் போர்த்தி கொண்ட, கீர்த்தி சுரேஷ்!

முன்னணி, 'ஹீரோ'கள் தன்னை தவிர்த்ததால், அவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, கவர்ச்சி கொடியேற்றினார், கீர்த்தி சுரேஷ். ஆனால், அவரது கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த அபிமானிகள் வெறுத்து விட்டனர்.'கவர்ச்சியாக நடிப்பதற்கு ஏற்ற கட்டுமஸ்தான உடல்கட்டு உன்னிடம் இல்லை. அதனால், அப்படி நடித்து, இருக்கிற மரியாதையை கெடுத்துக் கொள்ளாதே. இப்படி நடித்தால் ஓரிரு படத்திலேயே காணாமல் போய் விடுவாய்...' என்று, 'ஷாக்' கொடுத்து விட்டனர்.இதன் காரணமாக, நானும் கவர்ச்சி நடிகையருடன் போட்டி போடப் போகிறேன் என்று வரிந்து கட்டிய, கீர்த்தி சுரேஷ், இப்போது, மீண்டும் இழுத்து போர்த்தி நடிக்க துவங்கி இருக்கிறார்.— எலீசா

ராஷ்மிகா மந்தனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த, புகைப்படங்கள்!

சினிமாவில் ஓரளவு, 'கிளாமர்' ஆக நடித்து வரும், ராஷ்மிகா மந்தனா, சினிமா விழாக்களுக்கு வரும்போது, துக்கடா உடையணிந்து வந்து அங்கிருப்போரை துவம்சம் செய்கிறார். இதன் காரணமாகவே, அவரை மொய்க்கும் புகைப்பட கலைஞர்கள், பல கோணங்களில் புகைப்படங்களை சுட்டு தள்ளி விடுகின்றனர்.இதையடுத்து, அந்த புகைப்படங்கள் பத்திரிகைகளில் வருவதைப் பார்த்து ஆடிப்போகும், ராஷ்மிகா மந்தனா, 'என்ன இப்படி அலங்கோலமாக இருக்கிறேன்...' என்று அதிர்ச்சி அடைபவர், 'சினிமா விழாவுக்கு வித்தியாசமான உடையில் சென்றால், இப்படியா உடைகளை தாண்டி ஊடுருவக் கூடிய அளவுக்கு லென்ஸ்களை பயன்படுத்தி புகைப்படம் எடுப்பது...' என்று, ஆதங்கப்படுகிறார்.—எலீசா

ஏ.ஆர்.ரஹ்மான், 'ஷாக்!'

ஒரு காலத்தில், தென் மாநில தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, வட மாநில பட தயாரிப்பாளர்களும், ஏ.ஆர்.ரஹ்மானின், 'கால்ஷீட்'டுக்காக காத்துக் கொண்டிருந்தனர். தற்போது, அந்த நிலை மாறி விட்டது.இதற்கு முக்கிய காரணம், அவரது பாடல்களை விட அனிருத் இசையமைக்கும் பாடல்களே, 'சூப்பர் ஹிட்' அடிக்கின்றன. மேலும், விஜய், அஜித் போன்ற, 'ஹீரோ'களே, அனிருத்தை விரும்புகின்றனர்.அது மட்டுமின்றி, முன்பு பாலிவுட் பட உலகிலிருந்து, ஏ.ஆர்.ரஹ்மானை தேடி வந்த சில தயாரிப்பாளர்கள், இப்போது, அனிருத்தை தேடி வந்து, 'புக்' செய்கின்றனர். அந்த அளவுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் பக்கம் வீசிய காற்று, இப்போது, அனிருத் பக்கம் வீசத் துவங்கி இருக்கிறது.— சினிமா பொன்னையா

சினி துளிகள்!

* ஜெயிலர் படத்தில், 'சால்ட் அண்ட் பெப்பர் கெட் - அப்'பில் நடிக்கும் ரஜினி, படம் முழுக்க, கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்து நடிக்கிறார். இது, ரஜினிக்கு, இமயமலையில் உள்ள ஒரு சாமியார் கொடுத்ததாம். இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக, 'பிளாஷ்பேக்'கில் சில காட்சிகளில் வந்து செல்லும் சிறிய வேடத்தில் நடிக்கிறார், தமன்னா.* பூர்ணிமா, பாக்யராஜ் மற்றும் மனைவி கீர்த்தியுடன் சாந்தனு.* கே.பாக்யராஜின் வாரிசு சாந்தனுவுக்கு, சினிமா, 'வொர்க் அவுட்' ஆகவில்லை என்றதும், தற்போது, டான்ஸ் ஸ்டுடியோ ஆரம்பித்து விட்டார். இதற்காக தன் மனைவி கீர்த்தியுடன் இணைந்து சில நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.* அஸ்வின் சரவணன் இயக்கத்தில், மாயா என்ற படத்தில் நடித்த நயன்தாரா, மீண்டும் அவர் இயக்கத்தில், கனெக்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !