உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

கமல் போடும், மெகா கணக்கு!விட்ட தன் மார்க்கெட்டை, விக்ரம் படத்தின் மூலம் எட்டிப்பிடித்தார், கமல். தற்போது, ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும், இந்தியன்- 2 படத்தை, உலக அளவில் வெளியிட்டு, தன் மார்க்கெட்டை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார். அதோடு, விஜய், அஜித்துக்கு, 'டப்' கொடுக்கவும் திட்டமிட்டு வருகிறார்.'நான் நடிக்கும் படங்களில், என் கருத்துக்களை அதிகமாக திணிக்காமல், இன்றைய இளவட்ட இயக்குனர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுக்க திட்டமிட்டுள்ளேன். சில இளம் இயக்குனர்கள், அதிக, 'எனர்ஜி' உடனும், புதிய சிந்தனைகளுடனும், சினிமா தளத்துக்குள் வந்திருக்கின்றனர். அதனால், அவர்களை பயன்படுத்தி, என் மார்க்கெட்டிலும், 'எனர்ஜி'யை கூட்டப் போகிறேன்...' என்கிறார்.— சினிமா பொன்னையா.ஆயுர்வேதத்துக்கு மாறிய, நயன்தாரா!திருமணத்திற்கு பின், தன் முகத்தில் பழைய பொலிவு இல்லை என்று, சில தோழிகள் கூறியதை அடுத்து, பெரிய அளவில், 'அப்செட்'டாகி விட்டார், நயன்தாரா.'அழகு காணாமல் போய் விடக் கூடாது என்பதற்காகத் தான், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தேன். ஆனபோதும், குடும்ப வாழ்க்கை என் அழகுக்கே வேட்டு வைத்து விட்டதே என்று தான், கேரளா செல்லும் போதெல்லாம் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறேன்.'அதுமட்டுமின்றி, படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்ததும், ஆயுர்வேத கிரீம்களை என் முகத்தில் பூசி, அழகை மெருகேற்றும் முயற்சிகளில் தீவிரமடைந்துள்ளேன்...' என்கிறார், நயன்தாரா. — எலீசாசவால் விடும், மீரா ஜாஸ்மின்!ரன், சண்டக்கோழி உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள நடிகை, மீரா ஜாஸ்மின். திருமணத்திற்கு பிறகு, நடிப்பை விட்டு விலகி இருந்தவர், விவாகரத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில், 'என்ட்ரி' கொடுத்துள்ளார். அதோடு, முதல் இன்னிங்சில், குடும்ப குத்து விளக்காக நடித்து வந்த மீரா ஜாஸ்மின், தற்போது, சன்னி லியோனுக்கே சவால் விடும் வகையில், ஆபாச நடிகையாக உருவெடுத்திருக்கிறார். அந்த வகையில், தமிழில், விமானம் படத்தை அடுத்து, டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வரும், மீரா ஜாஸ்மின், 'மற்ற நடிகையர் எல்லாம் நடிக்க பயப்படும் எத்தகைய அதிரடியான கவர்ச்சி வேடம் என்றாலும், தாராளமாக என்னை அணுகலாம்...' என்று, கூறியுள்ளார்.— சினிமா பொன்னையாமீண்டும் ஜோடி சேரும், அமலா பால்!தனுஷ், அமலாபால் இருவரும், வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டு பாகங்களிலும் இணைந்து நடித்தனர். அந்த நேரத்தில் அவர்களை பற்றி, 'கிசுகிசு'க்கள் கொழுந்து விட்டு எரிந்தது.இதன் காரணமாகவே, சில ஆண்டுகளாக, அவருடன் இணைந்து நடிக்காமல் இருந்தார், தனுஷ். தற்போது, தான் இயக்கி நடிக்கும், 50வது படத்தில், மீண்டும் அமலாபாலுடன் இணைந்திருக்கிறார்.'முதல் இரண்டு படங்களிலும் எங்களது, 'கெமிஸ்ட்ரி' சிறப்பாக, 'வொர்க் அவுட்' ஆனதால், மீண்டும் இந்த படத்திலும், அமலாபாலுடன் இணைந்துள்ளேன். மேலும், இந்த படத்தில், அபர்ணா பால முரளியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்...' என்று கூறியுள்ளார், தனுஷ். — சி.பொ.,கறுப்புப்பூனை!தன், 50 வயதுக்கு பிறகு, இரண்டாவது மனைவியின் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்த நடன சூறாவளி நடிகர், அந்த குழந்தைக்கு தன் முன்னாள் காதலியான தாராவின் பெயரை வைப்பதற்கு திட்டமிட்டிருந்தார்.ஆனால், இதற்கு அவரது இரண்டாவது மனைவி கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு, 'அப்படி என்றால், இன்னும் அந்த நடிகையை மறக்கவில்லை. அவரது நினைப்பில் தான் இருக்கிறீர்கள்...' என்று கொந்தளித்துள்ளார்.இதனால், நடிகரின் வீட்டில், சில நாட்களாக புகை மண்டலம் கிளம்பி இருக்கிறது. அதையடுத்து, தன் முடிவை தடாலடியாக மாற்றிய நடன சூறாவளி, தற்போது, மகளுக்கு புதிய பெயர் வைக்கும் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். சினி துளிகள்!* வெந்து தணிந்தது காடு, காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் போன்ற படங்களில் நடித்த, சித்தி இத்னானி, அவ்வப்போது முதியோர் இல்லங்கள், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பள்ளிகளுக்கு சென்று, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.* மீண்டும், 'ஹீரோ'வாக நடித்து வரும், பிரபு தேவா, 'நெகடீவ்' கதாபாத்திரங்களில் நடிப்பதில், கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார்.* ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்டு வரும், 'கோமோடோ எக்ஸ்' -என்ற கேமரா முதன்முறையாக, தமிழ் சினிமாவில், விஜய் நடித்து வரும், லியோ படத்தின், 'ஆக் ஷன்' காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !