உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

மீண்டும் களமிறங்கும், மாதவன்! மணிரத்னம் இயக்கிய, அலைபாயுதே படத்தில் அறிமுகமானவர், மாதவன். அதன்பின், அவர் இயக்கிய, கன்னத்தில் முத்தமிட்டால் மற்றும் ஆயுத எழுத்து போன்ற படங்களிலும் நடித்தார். சமீபகாலமாக, மாதவனின் மார்க்கெட், 'டல்'லடித்து வருவதால், மீண்டும் மெகா இயக்குனர்களின் படங்களில் நடித்து, விட்ட மார்க்கெட்டை பிடிக்கும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறார். அதன் காரணமாக, மும்பையிலிருந்து சென்னை வந்து, மணிரத்னம் உள்ளிட்ட, சில மெகா இயக்குனர்களை சந்தித்து, மீண்டும் வாய்ப்பு கொடுக்குமாறு கோரிக்க வைத்துள்ளார். ஏற்கனவே, விஜய்சேதுபதியுடன் இணைந்து தான் நடித்த, விக்ரம் வேதா படம் போன்று, 'மல்டி ஹீரோ' கதைகளில் நடிக்கவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார், மாதவன்.— சினிமா பொன்னையாசமந்தா வைத்த கோரிக்கை!விஜயுடன், கத்தி, தெறி மற்றும் மெர்சல் போன்ற படங்களில் நடித்தவர், சமந்தா.'விஜய், 'சூப்பர் ஹீரோ' கதைகளில் நடிக்க வேண்டும். அது போன்ற கதைகளுக்கு, அவரது உடற்கட்டு கச்சிதமாக இருக்கும்.'அப்படி அவர் நடிக்கும் அந்த படத்தில், மீண்டும் நான் அவருடன் ஜோடி சேர வேண்டும். அந்த, 'சூப்பர் ஹீரோயினி' வேடத்துக்காக, என்னை எப்போதுமே தயார் நிலையில் வைத்திருப்பேன்...' என்கிறார், சமந்தா.— எலீசாகெத்து குறையாத, வடிவேலு!'ரீ - என்ட்ரி'யில், வடிவேலு, 'ஹீரோ' மற்றும் காமெடியனாக நடித்த படங்கள் கை கொடுக்காத நிலையில், முக்கிய குணச்சித்ர வேடத்தில் நடித்த, மாமன்னன் படம், அவரை பேச வைத்தது.எனவே, அதுபோன்று அழுத்தமான வேடங்களுக்காக அவர் காத்திருக்கிறார். அதேசமயம் இளவட்ட இயக்குனர்களை தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்டால், தன் கெத்து குறைந்து விடும் என்பதற்காக, 'யாராக இருந்தாலும், வடிவேலு தேவை என்றால், என்னை தேடி வரட்டும்...' என்று, இறங்கி வராமல், தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார், வடிவேலு.— சி.பொ.,சந்தானம் போடும், 'மாஸ்டர் பிளான்!''மெகா ஹீரோ'களின் ரசிகர்களை, தன் படங்கள் வெளியாகும் தியேட்டர்களுக்கு இழுக்கும் நோக்கத்தில், 'பில்டப்' என்ற படத்தில், ரஜினி - -கமல் ரசிகர்களுக்கு இடையிலான மோதலை மையமாகக் கொண்ட கதையில் நடித்து வருகிறார், சந்தானம்.இதன் பின், விஜய் - -அஜித் ரசிகர்களின் மோதலை மையமாகக் கொண்ட இன்னொரு படத்தில் நடிக்கப் போகிறாராம். அதேசமயம், ரசிகர்களின், 'நெகட்டீவ் பாயின்ட்'டை சொல்லாமல், 'பாசிட்டிவ் பாயின்ட்'டை சொல்லி, அவர்களின் அபிமானத்தை பெற திட்டமிட்டுள்ளார்.— சினிமா பொன்னையாகறுப்புப் பூனை!வாரிசு நடிகை, தன் டோலிவுட் சினிமா நண்பர்களுக்கு, மாதந்தோறும், 'மிட் நைட் பார்ட்டி' கொடுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இந்த, 'பார்ட்டி'யின் போது, அவர்களுடன் இணைந்து தெறிக்க விடும் ஆட்டம் போடும், வாரிசு நடிகை, போதையில் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு கெட்ட வார்த்தைகளையும் அள்ளி விடுகிறார்.இது குறித்து பின்னர், அம்மணியின் பாய் பிரண்டுகள் கேள்வி கேட்டால், 'அப்படியா, நானா அப்படி பேசினேன்...' என்று, இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போன்று, கேள்வி எழுப்புகிறார், நடிகை.சமீபத்தில் திரைக்கு வந்த, தளபதி நடிகரின் இரண்டெழுத்து படத்திற்கு, வெளிநாடுகளில் ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது போன்று வெளிப்படுத்த, அங்குள்ள தியேட்டர்களின் மொத்த டிக்கெட்டையும் படக்குழுவினர் வாங்கி, மொத்த டிக்கெட்டும் விற்று விட்டதாக, பப்ளிசிட்டி செய்துள்ளனர்.அதேபோல், தமிழகத்திலும், அப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருவதாக, தளபதி நடிகர் வட்டாரம், 'பில்ட் - அப்' கொடுத்து வருகிறது. அப்படத்தை திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்களோ, 'படத்தின் உரிமைக்காக வாங்கிய பணமே, இதுவரை கைக்கு வரவில்லை. ஆனால், இவர்களோ, படம் கோடி கோடியாக கொட்டுவதாக சொல்லி, வெத்து, 'பில்ட் - அப்' கொடுக்கின்றனரே...' என்று, வசை பாடுகின்றனர்.கோலிவுட்டில் இருந்து, பாலிவுட் வரை கொடி நாட்டியிருக்கும், தாரா நடிகை, உலக நடிகருடன் நடிக்கும் படத்திற்கு, 'மெகா செக்' வைத்திருக்கிறார். அதாவது, அம்மணியின் கொடி பாலிவுட்டில் பறக்க துவங்கியதை அடுத்து, 10 கோடி ரூபாயில் இருந்த தன் படக்கூலியை, 12 கோடி ரூபாயாக உயர்த்தி விட்டுள்ளார்.இந்த விஷயம் தெரியாத, உலக நடிகரின் படக்குழு, ஐந்து கோடி ரூபாயை கொடுத்து, அம்மணியை சரி கட்ட சென்றுள்ளனர். அதைக் கேட்டு கொந்தளித்த தாரா நடிகை, 'நீங்கள் சொல்வது பழைய கதை. பாலிவுட்டுக்கு சென்ற பிறகு கதையே மாறி விட்டது. அதனால், 12 கோடி ரூபாய் என்றால், 'அட்வான்ஸ்' வெட்டுங்கள். இல்லையென்றால் ஏறக்கட்டுங்கள்...' என்று, உலக நடிகரின் படக் குழுவுக்கு, 'ஷாக்' கொடுத்துள்ளார்.சினி துளிகள்!* அன்னபூரணி என்ற படத்தில், பிராமின் பெண் வேடத்தில் நடிக்கிறார். நயன்தாரா.* தனது சமூக வலைதள பக்கத்தில், விதவிதமான கவர்ச்சி உடையில் புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறார், கீர்த்தி சுரேஷ்.* வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிக்கும், 68வது படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !