உள்ளூர் செய்திகள்

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு...

தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில், சீருடை என்ற பெயரில், குழந்தைகளை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குகின்றனர். இந்த வெயில் காலத்திலும் டை, ஷூ, சாக்ஸ் அணிவதால், வெப்பம் அதிகமாகி, கால்களில் காற்று புகாமல், புண்கள் ஏற்படுகின்றன. இதை உணர்ந்த எங்கள் ஊரில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, வெயில் காலம் ஆரம்பித்த உடன், பள்ளிக்கு செருப்பு அணிந்து வருமாறும், 'டை' கட்ட வேண்டாம் என்று அறிவித்தனர்; இதனால், குழந்தைகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இதை, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் பின்பற்றலாமே!— எஸ்.மகேஸ்வரி,திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !