உள்ளூர் செய்திகள்

கவிச்சோலை!

நினைவு துடிப்பு!* உன் அன்பு நதியானால்உயிரை கரைத்துவிடுகிறேன்!* உன் இதயம் கடலானால்நானே மூழ்கி விடுகிறேன்!* என் கனவுகளைகாப்பாற்றி விடுவதற்காவதுபிரிவை பிரிந்து விடு!* என் கற்பனைகளைஅர்ப்பணம் செய்திருப்பதுஉன் காலடியில்தான்!* ஆசை அலைகள்அடித்துக் கொண்டேயிருக்கின்றனஆறுதல் கரையில்!* திரும்பவும் திரும்பிவரும்அலையாய்...நீ வரவேநினைத்து வாழ்கிறேன்!* நினைவில் ஒரு ஓரத்தில்கேட்கும் இதயத் துடிப்பாய்...உன் பெயரைஉச்சரித்துக் கொண்டிருக்கிறேன்...உன் வரவுகாதல் வரவாகட்டும்!— தமிழ்நாயகி, சேலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !