உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

விநாயகரை வழிபடுவது ஏன்?வாழ்வில், நம் முக்கிய தேவையாக இருக்கும் நலம், வளம், சித்தி, புத்தி மற்றும் ஷேம லாபத்திற்கு விநாயகப் பெருமான் தான் அதிபதி; அவரை வணங்கினால், எந்த விக்கினத்தையும் (தடையையும்) எளிதில் தீர்த்து, நம்மை காப்பார் என்பது நம்பிக்கை!புதுமையான விநாயகர்!மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் முன் மண்டபத்தில், புதுமையான கோலத்தில் வீற்று இருப்பவர், 'வியாக்கிர சக்தி விநாயகர்!' இவர், யானை முகமும், கால் முதல் இடை வரை புலியின் உருவமும், இடை முதல் கழுத்து வரை பெண் உருவம் என, புதுமையான முறையில் வீற்றிருக்கிறார்.தோப்புக்கரணம் போடுவது ஏன்?கஜமுகாசூரன் எனும் அரக்கன், தான் பெற்ற அரிய வரங்களால், மூவுலகையும் வென்று, தேவர்களை அடக்கி, தனக்கு அடிமையாக்கினான். அத்துடன் சபைக்கு வரும் தேவர்களை, தனக்கு தோப்பு கரணம் போடச் செய்தான். அவன் ஆணவத்தை அடக்கி, தேவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்தார் விநாயகர். அதன் நினைவாக, விநாயகருக்கு தோப்பு கரணம் போடும் பழக்கம் தொடர்ந்தது.விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன?ஏழைகளின் கண்கண்ட தெய்வமான, விநாயகர், 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் உட் பொருளும், வடிவமுமாய் திகழ்கிறார். ஓம் எனும் பிரணவ மந்திரம் அகரம், உகரம், மகரம் எனும் மூன்று எழுத்துகளால் ஆனது. அவற்றுள், அ என்பது படைத்தல் தொழிலுக்குரிய பிரம்மாவையும், உ என்பது காத்தல் தொழிலுக்குரிய விஷ்ணுவையும், ம என்பது அழித்தல் தொழிலுக்குரிய சிவனையும் குறிக்கும். இவை மூன்றிற்கும் மூலமாகவும், முத்தொழில்களின் அம்சமாகவும், மும்மூர்த்திகளின் சொரூபமாகவும் விளங்குபவரான விநாயகரை முதலில் வழிபட்ட பின்பே, மற்ற தெய்வங்களுக்கு செய்யும் வழிபாடு பூர்த்தியாகும்.விநாயகர் பற்றிய சில செய்திகள்...பூஜையின் முதல் வணக்கம் விநாயக பெருமானுக்கு தான். இது, தேவர் மற்றும் மனிதர் உட்பட அனைவருக்கும் பொருந்தும். விநாயகரை நினைக்காமல் செய்யும் எந்த பூஜையும், காரியங்களும் பலன் தராது, என்பது ஐதீகம். மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலுள்ள, முக்குறுணிப் பிளளையாரும், நெல்லையப்பர் கோவிலில் உள்ள பிள்ளையாரும் மிக பெரியன.* சுசீந்திரம் கோவிலில், விக்னேஷ்வரி என்ற பெண் உருவில், விநாயகர் சிலை உள்ளது.* காரைக்கால் அம்மையார் வேண்டுகோளுக்கு ஏற்ப, இறைவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய ஸ்தலம், சென்னை அருகேயுள்ள திருவாலாங்காடு; இந்த ஆலயத்தில், சித்தி விநாயகரை தரிசிக்கலாம்.* மாணிக்கவாசகர் ஸ்தலமான, ஆவுடையார் கோவில் குளக்கரையில், வல்லபையுடன், பத்துக் கரங்களுடன் வல்லபை விநாயகராக காட்சி தருகிறார்.* திருவாரூர் கோவிலுள்ள ஐங்கலக் காசு விநாயகர், முழுக்க முழுக்க தங்கத்தால் உருவானவர்; அழகிய சோழ மன்னன் தந்த ஐந்து கலம் பொற்காசுகளை வைத்து உருவாக்கப்பட்டது, இந்த தங்க விநாயகர் சிலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !