உள்ளூர் செய்திகள்

பொண்ணா பேசும் மிஷினா?

ஒரு சின்ன விஷயத்தை பற்றி பேசுவதற்கு கூட வார்த்தை வராமல் தடுமாறி, நாக்கு குழறி, நீட்டி முழக்கும் வழக்கம், நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் பிரான் என்ற பெண் பேசுவதை பார்த்து, 'இது பெண்ணா அல்லது பேசும் மிஷினா...' என, பலரும் ஆச்சரியப்படுகின்றனர். காரணம், இந்த பெண் ஒரு நொடியில், 11 வார்த்தைகளை பேசி முடித்து விடுகிறார். குழந்தைகளுக்கான, 'த்ரீ லிட்டில் பிக்' ஸ்டோரியை, 15 நொடிகளில் சொல்லி முடித்து விடும் இவருக்கு, பேச்சில் தடுமாற்றம் என்பதற்கே இடமில்லை; வாயைத் திறந்தால், சரவெடியாக வந்து விழுகின்றன வார்த்தைகள். 'உலகிலேயே மிக வேகமாக பேசும் பெண்...' என்று, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !