தங்க கார்கள்!
பிரிட்டன் தலைநகர் லண்டனில் சமீபத்தில், விலை உயர்ந்த, நான்கு சொகுசு கார்கள், வீதிகளில் வலம் வந்தன.அக்கார்களைப் பார்த்து மக்கள் மிரண்டு போயினர். ஒவ்வொரு காருமே, பத்து கோடி ரூபாய்க்கு மேல், விலை மதிப்புடையவை. இக்கார்களில், தலா, நான்கு லட்ச ரூபாய் செலவில், தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.இந்த கார்களுக்கு சொந்தக்காரர், சவுதி அரேபியாவைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வரரான டர்க்கி பின் அப்துல்லா. இவர், ஒவ்வொரு ஆண்டும், கோடை விடுமுறையின்போது, லண்டனுக்கு வருவது வழக்கம்.இந்த ஆண்டு கோடை விடுமுறையை கொண்டாட, தங்க முலாம் பூசப்பட்ட கார்களுடன் வந்து, லண்டனை கலக்கி விட்டார். காரின் முன் இருக்கையில், ஒரு சிறுத்தை நிற்கும் புகைப்படத்தையும், சமூக வலைதளங்களில் வெளியிட்டு, மிரட்டியுள்ளார், அப்துல்லா.— ஜோல்னாபையன்.