உள்ளூர் செய்திகள்

கூடலூர் வறுத்த சேமியா கேசரி!

அதிரச வகையறா ஸ்வீட்களை தாண்டி, நம்மவர்களின் காஸ்ட்லி ஸ்வீட் எது என்றால், அது, கேசரி!ரவா மற்றும் சேமியா என, இரு வகைகளில் தயாராகும் கேசரிக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.தேனியை அடுத்த கூடலூரில், காலை, 6:00 மணிக்கு தயாராகும் கேசரி, 8:00 மணிக்குள் விற்று விடுகிறது. இந்த இரண்டு மணி நேரத்தில், ஆறு முதல், 10 கிலோ வரையிலும் விற்பனை ஆகிறது. ஞாயிற்றுகிழமைகளில், இதன் விற்பனை இன்னும் அதிகம்.வறுக்காத சேமியாவில் தயாரிக்கும் கேசரி, ஒட்டிக் கொண்டு, பிசுபிசுவென இருக்கும்; சில சமயங்களில் கெட்டி சேர்ந்து விடும். ஆனால், பாதாம், முந்திரி மற்றும் ஏலக்காய் பொடி தூவப்பட்ட வறுத்த சேமியா கேசரி, உதிரி உதிரியாக, பார்ப்பதற்கு அழகாகவும், சாப்பிடுவதற்கு ருசியாகவும் இருக்கும். இதுகுறித்து, கேசரி கடைக்காரர் தண்டபாணி கூறும் போது, 'கேசரி தயாரிக்க, வறுத்த சேமியாவை மட்டுமே பயன்படுத்துகிறோம். சேமியாவின் அளவில், இரு மடங்கு சீனி, ஐந்தில் ஒரு பங்கு ரவை சேர்ப்பதாலும், அதில் சேர்க்க வேண்டிய பொருட்களை சரியான நேரத்தில் சேர்ப்பதாலும், கிளறும் பக்குவத்தாலும், கேசரியின் சுவை கூடுகிறது...' என்கிறார்.கேசரியோடு, ஒரு வடை மற்றும் டீயை குடித்து, காலை உணவை முடித்து கொள்ளும் அளவிற்கு, இப்பகுதியில் கேசரி பிரபலம்.கேரள மாநில எல்லையை ஒட்டி கூடலூர் அமைந்திருப்பதால், வியாபாரத்திற்காக இங்கு வரும் கேரள மாநிலத்தவருக்கும் பிடித்தமான காலை உணவாக இருக்கிறது, கேசரி!தண்டபாணி, மொபைல் எண்: 99948 94337


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !