ஹாப்பி... ஹாப்பி... கிறிஸ்துமஸ்!
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்பும் வழக்கம், கி.பி., 1846ல் ஆரம்பமானது. அதன்பின், 1862ல், தாம்சன் என்ற ஓவியர், தான் வரைந்த ஓவியத்துடன் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை, இங்கிலாந்து அரசருக்கு அனுப்பினார். இதை கண்டு வியந்த அரசன், அந்த ஓவியத்தை போல், பல ஓவியங்களை வரைந்து, கிறிஸ்துமஸ் வாழ்த்தாக, பல அரசர்களுக்கும் அனுப்பினார். இதிலிருந்து தான் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் புழக்கத்திற்கு வந்தது* கிறிஸ்துமஸ் விழாவை, 'பீஸ்ட் ஆப் லைட்' என்றும் அழைப்பர்* கிறிஸ்துமஸ் தினத்தன்று, 1642ல், சர் ஐசக் நியூட்டன் பிறந்தார்* மேரி கியூரி தம்பதியர், தங்களின் கண்டுபிடிப்பான, 'ரேடியத்தை' உலகிற்கு அளித்தது, 1889ல், கிறிஸ்துமஸ் தினத்தன்று தான்* டென்மார்க் நாட்டின், கிறிஸ்துமஸ் விருந்தில் முதலிடம் வகிப்பது, அரிசி உணவு* இத்தாலி தலைநகர் ரோமில், வாடிகன் நகரில் உள்ளது, புனித பீட்டர் தேவாலயம். இந்த சர்ச் தான் உலகத்திலேயே மிகப்பெரிய சர்ச் * இயேசு கிறிஸ்துவின் சீடர்கள், 12 பேர்களில், இரண்டு சீடர்களின் கல்லறையின் மீது ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் ஒன்று, வாடிகன் நகரில் உள்ள புனித ராயப்பர் ஆலயம். மற்றொன்று, சென்னை சாந்தோமில் உள்ள புனித தோமையர் ஆலயம்.